அல்-ராம்கோர்முசி

பாரசீக தேசாந்திரி

இராம்கோர்முசின் புசுருக் இபின் சக்ரியர் ( Buzurg Ibn Shahriyar of Ramhormuz ), என்பவர் ஓர் ஒரு முஸ்லிம் பயணியும், மாலுமியும், வரைபடவியலாளரும் மற்றும் புவியியலாளரும் ஆவார். இவர் பெர்சியாவின் கூசித்ததானில் பிறந்தார். கி.பி. 953 ஆம் ஆண்டில், சிராப், ஓமன், பசுரா மற்றும் பிற இடங்களில் உள்ள முஸ்லிம் மாலுமிகளின் கதைகளின் தொகுப்பைத் தொகுத்தார்.[1]

அல்-ராம்கோர்முசி
بزرگ بن شهریار الرام هرمزي
தாய்மொழியில் பெயர்بزرگ بن شهریار الرام هرمزي
பிறப்புஇராம்கோர்முசின் புசுருக் இபின் சக்ரியர்
கூசித்தான் மாகாணம், பெர்சியா
பணிமுஸ்லிம் பயணி, மாலுமி, வரைபடவியலாளர் மற்றும் புவியியலாளர்

அல்-ராம்கோர்முசி, 10 ஆம் நூற்றாண்டின் எழுதிய அஜய்ப் அல்-ஹிந்த் ( இந்தியாவின் அதிசயங்கள்] ) என்ற புத்தகத்தில் இங்குள்ள தீவுகளில் கடுமையான நரமாமிச பழங்குடியினர் வசிப்பதாக விவரித்துள்ளார். அந்தமான் அல்-கபீர் ( பெரிய அந்தமான் ) என்று இவர் அழைத்த ஒரு தீவையும் புத்தகம் குறிப்பிடுகிறது.[2]

இந்தப் படைப்பில், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, சீனா மற்றும் கிழக்கு ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு முஸ்லிம் கடற்தொழிலாளர்கள் எவ்வாறு பயணம் செய்தார்கள் என்பது பற்றிய குறிப்புகள் உள்ளன. அப்பாசியக் கலிபகத்திற்கும் சீனாவின் தாங் வம்சத்திற்கும் இடையே பல்வேறு தொடர்புகள் பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சர்ச்சை

தொகு

புசுருக் முற்றிலும் கற்பனையான நபர் என்று போது பலரால் நம்பப்படுகிறது. இவரது இருப்பு வேறு எந்த ஆதாராங்களிலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இவர் வாழ்ந்ததாகக் கூறப்படும் நீண்ட காலத்திற்குப் பிறகு, பதின்மூன்றாம் நூற்றாண்டில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. பத்தாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் அபு இம்ரான் மூசா இப்னு ரபா அல்-அவ்சி அல்-சிராபி என்ற அறிஞர் கெய்ரோவில் எழுதப்பட்டதாக சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "MuslimHeritage.com - Topics". www.muslimheritage.com. Archived from the original on 2007-10-09.
  2. Buzurg ibn Shahriyar, translated by: L. Marcel Devic and Peter Quennell (1928). The Book of the Marvels of India: from the Arabic. G. Routledge & sons. 
  3. Jean-Charles Ducène, "Une nouvelle source arabe sur l'océan Indien au Xe siècle" Afriques 06, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-ராம்கோர்முசி&oldid=3869460" இலிருந்து மீள்விக்கப்பட்டது