அல் ஐன்

(அல் எயின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அல் எயின், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு நகரமாகும். நாட்டின் பெரிய அமீரகமான அபுதாபியில் அமைந்துள்ள இந்நகரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் நான்காவது பெரிய நகரமாகும். 2005 ஆம் ஆண்டில் கணிக்கப்பட்டபடி இதன் மக்கள் தொகை 421,948 ஆகும். இது ஓமான் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ளது. நாட்டின் ஏனைய முக்கிய நகரங்களைப் போல அல் எயின், ஒரு கரையோர நகரம் அல்ல. கடற்கரையிலிருந்து இது தொலைவில் அமைந்துள்ளது. கடற்கரையோர நகரங்களான அபுதாபி, துபாய் ஆகிய நகரங்களில் இருந்து ஏறத்தாழ ஒரேயளவு தொலைவில் (150 கிமீ) அமைந்துள்ள அல் எயின், அவ்விரு நகரங்களுடனும் ஒரு சமபக்க முக்கோணத்தை ஆக்குகின்றது.[1][2][3]

அல் எயின் is located in ஐக்கிய அரபு அமீரகம்
அல் எயின்
அல் எயின்
அல் எயின் அமைவிடம்

வரலாறு

தொகு
 
அல் எயின்

பாலைவனச் சோலையான இப்பகுதி, முற்காலத்தில் புரெய்மி (Buraimi) என அழைக்கப்பட்டது. தொடர்ச்சியாக 4000 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் வாழ்ந்த இடமாக இருந்து வந்திருப்பதாகக் கூறப்படும் இது, நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தின் மையமாகவும் கருதப்படுகின்றது. ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது ஜனாதிபதியான ஷேக் ஸயத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் பிறப்பிடமும் இதுவே. இன்று, அல் எயின் நகரத்தோடு சேர்ந்து, ஓமானின் எல்லைக்குள் அமைந்திருக்கும் நகரப்பகுதியே புரெய்மி என்று அழைக்கப்பட்டு வருகின்றது.

அல் எயினில் பல நீரூற்றுக்கள் அமைந்துள்ளன. இதனால்தான், முற்காலத்திலும் மக்கள் வாழ்வதற்குரிய இடமாக இது திகழ்ந்தது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "TelluBase—UAE Fact Sheet (Tellusant Public Service Series)" (PDF). Tellusant. பார்க்கப்பட்ட நாள் 2024-01-11.
  2. "Al Ain". The Report Abu Dhabi 2010. Oxford Business Group. 2010. pp. 171–176. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-9070-6521-7. Archived from the original on 19 February 2023. பார்க்கப்பட்ட நாள் 31 October 2018.
  3. Neild, Barry (3 October 2018). "Day trip from Abu Dhabi: The cool oasis of Al Ain". CNN இம் மூலத்தில் இருந்து 19 February 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190219181517/https://edition.cnn.com/travel/article/al-ain-abu-dhabi-day-trip/index.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_ஐன்&oldid=4116239" இலிருந்து மீள்விக்கப்பட்டது