அல் சுஃபி

பாரசீக வானியலாளர்

அல் சுபி என அழைக்கப்படும் 'அப்தல் ரகுமான் அல்-சுஃபி (Abd al-Rahman al-Sufi, பாரசீக மொழி: عبدالرحمن صوفی‎; டிசம்பர் 9, 903 – மே 25, 986) என்பவர் பாரசீக[1][2] வானியல் வல்லுநர் ஆவார். இவர் அப்தல் ரகுமான் அபு அல்-உசைன், 'அப்துல் ரகுமான் சுஃபி, அசோபி என்ற பெயர்களிலும் அறியப்படுகிறார். இவரது நினைவாக நிலவுக் குழிப்ப்ள்ளம் ஒன்றுக்கு அசோபி எனவும், சிறிய கோள் ஒன்றுக்கு "12621 அல்சுபி" எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இவர் நாட்டுப்புறவியலிலும் தொன்மவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டிருந்ததால் வானியல் ஆய்வில் ஈடுபட்டார். கிபி 964 இல் இவர் "நிலையான உடுக்கள் பற்றிய நூல்" ஒன்றை எழுதினார். இந்நூலில் அவர் தனது கண்டுபிடிப்புகளை எழுத்திலும், படங்களாகவும் தந்திருந்தார்.[3][4] இவர் 1018 விண்மீன்களின் பருமைகளையும் (Magnitudes) நிறங்களையும் இருப்பிடங்களையும் அடக்கிய அட்டவணையை உருவாக்கி வெளியிட்டார்.

வாழ்க்கை

தொகு

பெயர்பெற்ற 9 முசுலிம் வானியலாளர்களில் இவர் ஒருவராவார். இவரது பெயரே இவர் சுபி முசுலிம் பின்னனணியில் வந்தவர் என்பதைக் காட்டுகிறது. இவர் பாரசீகம், இசுபாகன் எமிர் அதுத்-தவுலா அரசவையில் இருந்தார். இவர் கிரேக்க வானியல் நூல்களை, குறிப்பாக, தாலமியின் அல்மாகெசுட்டு நூலை மொழிபெயர்த்தும் விரிவாக்கியும் வந்தார். தாலமியின் விண்மீன்கள் பட்டியலில் பல திருத்தங்களை மேற்கொண்டுள்ளார். இவர் தானே பல விண்மீன்களின் பொலிவையும் தோற்றப் பருமையையும் மதிப்பீடுகள் செய்துள்ளார்.

எலனிய வானியலை அரபு மொழிக்குப் ஒஏரளவில் கொணர்ந்தவர் இவரா ஆவார். இப்பணி எகுபதி அலெக்சாந்திரியா நூலகத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. இவர் விண்மீன்கள், விண்மீன் குழுக்களின் மரபியலான அரபுப் பெயர்களை முதன்முதலாகக் கிரேக்கப் பெயர்களோடு பொருத்தினார். முன்பு இவை சிக்கலான முறையில் ஒன்றன்மேலொன்று மேற்படிந்தும் உறவுபடுத்தப்படாமலும் இருந்தன.

வானியல்

தொகு
 
விண்மீன்குழு சஜிட்டாரியசு, வான்கோள விண்மீன் குழுக்களின் வரைபடம்.

இவர் ஏமனில் இருந்தபோது, இசுபாகனில் இருந்தபோது அல்ல, கண்ணுக்கே தெளிவாகத் தெரிந்த பெருமெகல்லனிய முகிலை இனங்கண்டார். இதை ஐரோப்பியர் எவருமே 16 ஆம் நூற்றாண்டில் பெர்டினாண்டு மெகல்லன் பயணத்துக்கு முன்புவரை கண்டதில்லை.[5][6] இவர் தான் முதலில் 964 இல் ஆந்திரமேடா பால்வெளியை முதலில் பதிவு செயதவர்; ஆனால் அதைச் சிறுமுகில் என விவரித்துள்ளார்.[7] நமது பால்வழிப் பால்வெளியைத் தவிர, இவை தாம் புவியில் இருந்து முதலில் கண்டறிந்த பால்வெளிகளாகும். இவர் சூரியனின் தோற்றச் சுழற்சி வட்டணை அல்லது வான்கோளப் பெருவட்டத்தோடு புவி நடுவரை வட்டம் சாய்ந்துள்ளதை நோக்கினார். மேலும் புவியின் வெப்பமண்டல ஆண்டினைத் துல்லியமாக கண்க்கிட்டார். இவர் விண்மீன்களை நோக்கீடுகளைச் செய்து, அவற்றின் இருப்புகளையும் தோற்றநிலை பருமையையும் நிறங்களையும் விவரித்தார். இவர் இம்முடிவுகளை ஒவ்வொரு விண்மீன் குழுவுக்கும் தனித்தனியாக அமைத்தார். இவர் ஒவ்வொரு விண்மீன் குழுவுக்கும் இரண்டு வரைபடங்களை வரைந்தார். ஒரு படம் வான்கோளத்துக்கு வெளியில் இருந்தும் மற்றொரு படம் அதற்கு உள்ளிருந்தும் (புவியில் இருந்து பார்ப்பது போலவும்) வரைந்தார்.

அல்-சுபி வான்கோளகங்களைப் பற்றியும் எழுதியுள்ளார். மேலும், இவற்றுக்கான பல பய்ன்பாடுகளையும் கண்டுபிடித்தார்: இவர் இசுலாமிய வானியல், இசுலாமியக் கணியவியல்(சோதிடம்), ஓரையியல் , நாவாயியல், அளக்கையியல், காலக்கணிப்பியல், கிபுலா, சலாத் வழிபாடுகள் எனப் பல துறைகளில் 1000 க்கும் மேற்பட்ட வான்கோளகப் பயன்பாடுகளை விவரித்துள்ளார்.[8]

சுபி நோக்கீட்டுப் போட்டி

தொகு

ஈரான் வானியல் கழகப் பயில்நிலை வானியலாளர் குழு 2006 இலிருந்து பன்னாட்டு சுபி நோக்கீட்டுப் போட்டியை அல்-சுபி நினைவாக நடத்திவருகிறது. இந்தப் போட்டி 2006 இல் செமான் மாகாணத்தின் வடக்குச் செமான் நகரத்தில் நடத்தப்பட்டது.[9] இதன் இரண்டாம் போட்டி 2008 கோடையில் சகெடானுக்கு அருகில் உள்ள இலடாசில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நோக்கீட்டாளர்கள் கலந்துகொண்டனர்.[10]

காட்சிமேடை

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Al-Qifti. Ikhbar al-'ulama' bi-akhbar al-hukama ("History of Learned Men"). In: Άbdul-Ramān al-Şūfī and his Book of the Fixed Stars: A Journey of Re-discovery by Ihsan Hafez, Richard F. Stephenson, Wayne Orchiston (2011). In: Orchiston, Wayne, Highlighting the history of astronomy in the Asia-Pacific region: proceedings of the ICOA-6 conference. Astrophysics and Space Science Proceedings. New York: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4419-8161-5. "... is the honored, the perfect, the most intelligent and the friend of the King Adud al-Dawla Fanakhasru Shahenshah Ibn Buwaih. He is the author of the most honored books in the science of astronomy. He was originally from Nisa and is of a Persian descent."
  2. Robert Harry van Gent. Biography of al-Sūfī. "The Persian astronomer Abū al-Husayn ‘Abd al-Rahmān ibn ‘Umar al-Sūfī was born in Rayy (near Tehrān) on 7 December 903 [14 Muharram 291 H] and died in Baghdād on 25 May 986 [13 Muharram 376 H] ... the Persian astronomer Abū al-Husayn ‘Abd al-Rahmān ibn ‘Umar al-Sūfī who was commonly known by European astronomers as Azophi Arabus". University of Utrecht, Netherlands. Retrieved 2014-1-11
  3. Abd al-Rahman al-Sufi, H. Suter, E.J. Brill's First Encyclopaedia of Islam 1913-1936, Vol. I, (Brill, 1987), 57.
  4. Abd al-Rahman al-Sufi, A Dictionary of Astronomy, ed. Ian Ridpath, (Oxford University Press, 1997), 456.
  5. "Observatoire de Paris (Abd-al-Rahman Al Sufi)". Archived from the original on 16 April 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-04-19. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  6. "Observatoire de Paris (LMC)". Archived from the original on 17 April 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-04-19. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  7. Kepple, George Robert; Glen W. Sanner (1998). The Night Sky Observer's Guide. Vol. 1. Willmann-Bell, Inc. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-943396-58-1.
  8. Dr. Emily Winterburn (National Maritime Museum) (2005). "Using an Astrolabe". Foundation for Science Technology and Civilisation. பார்க்கப்பட்ட நாள் 2008-01-22.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-10-20. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
  10. رقابت صوفي، درآمدي بر سال جهاني نجوم‌

உசாத்துணைகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_சுஃபி&oldid=4052730" இலிருந்து மீள்விக்கப்பட்டது