அல் ராஸ் (துபாய் மெட்ரோ நிலையம்)
அல் ராஸ் (அரபு: الراس , Arabic pronunciation: [ஆரஸ்] ) ஓர் துபாய் மெட்ரோ விரைவுப் போக்குவரத்து நிலையம் ஆகும். இது பச்சை வழித்தடத்தில் அமைத்துள்ளது.
அல் ராஸ் | |
---|---|
இடம்
தொகுதுபாயின் வரலாற்று மையமான துபாய் க்ரீக்கின் நுழைவாயிலுக்கு அருகில் அல் ராஸ் நிலையம் அமைந்துள்ளது. நிலையத்திற்கு அருகில் முக்கிய இடங்களான தங்கம் மற்றும் மசாலா சந்தைகள் மற்றும் அல் ராஸ் பொது நூலகம் ஆகியவை அமைந்துள்ளது. [1]
வரலாறு
தொகுஇது கிரீன் லைன் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக அல் ராஸ் நிலையம் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 அன்று திறக்கப்பட்டது. எதிசலாத்திலிருந்து துபாய் ஹெல்த்கேர் சிட்டிக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. [2]
மேடை தளவமைப்பு
தொகுநடைமேடை | வரி | இலக்கு |
---|---|---|
எடிசலாட் தளம் | ■ கிரீன் லைன் (மேலே) | யூனியன், ஸ்டேடியம், டாஃப்ஸா, எடிசலாட் |
க்ரீக் தளம் | ■ கிரீன் லைன் (கீழே) | புர்ஜுமனுக்கு, துபாய் ஹெல்த்கேர் சிட்டி, க்ரீக் |
குறிப்புகள்
தொகு- ↑ Train times and landmarks பரணிடப்பட்டது 2013-12-03 at the வந்தவழி இயந்திரம் RTA Retrieved 2013-01-01
- ↑ Dubai ruler inaugurates Metro Green Line The National Retrieved 2013-01-01