அளவிடும் கருவிகள்

அளவிடும் கருவிகள் (measuring instrument) என்பது இயற்பியல் அளவை அளக்கும் கருவி ஆகும். இயல் அறிவியல் புலங்களிலும், தர உறுதிப்பாட்டிலும், பொறியியலிலும், நிலவும் புற உலகப் பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் இயல் அளவுகளை அளந்து ஓப்பிடும் செயலே அளத்தல் எனப்படுகிறது. இதற்கு நிறிவிய செந்தரப் பொருட்களும் நிகழ்வுகளும் அலகுகளாகப் பயன்படுகினறன. அளக்கும் செயல்முறை குறிப்பிட்ட ஆய்வு உருப்படி சார்ந்த எண்ணையும் அளவீட்டுக்கான மேற்கோள் அலகையும் தருகிறது.அளவிடும் கருவிகளும் கருவியைப் பயன்படுத்தும் முறையான ஓர்வு முறைகளும், குறிப்பிட்ட இயல் அளவுக்கான எண்களைப் பெற உதவுகின்றன.னானைத்து கருவிக்களும் ஓரளவுக்குக் கருவிப் பிழையும் அளத்தல் உறுதிப்பாடின்மையும் கொண்டுள்ளன.

நீளங்களை அளவிடும் கருவி: மெட்ரிக் அலகுகளிலும் இம்பீரியல் அலகுகளிலும் அமைந்த அளக்கும் நாடா. ஒப்பீட்டுக்காக இரண்டு ஐக்கிய அமெரிக்கப் பென்னிகள்

இந்தக் கருவிகள் அளவுகோல்கள் போன்ற எளிய பொருள்களில் இருந்து நுறுத்து கடிகாரங்கள், மின்னனியல் நுண்ணோக்கிகள், துகள்முடுக்கிகள் வரை அமையும். தற்கால அளவிடும் கருவிகள் பரவலாக மெய்நிகர் கருவியாக்க முறையில் உருவாக்கிப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆற்றல்

தொகு

ஆற்றல் அளவிகளால் ஆற்றல் அளக்கப்படுகிறது. ஆற்றல் அளவிகளுக்கான எடுத்துகாட்டுகள் பின்வருமாறு:

மின்னளவி

தொகு

ஒரு மின்னளவி நேரடியாக மின் ஆற்றலை கிலோவாட்-மணிகளில் அளக்கிறது.

வளிம அளவி

தொகு

ஒரு வளிம அளவி மறைமுகமாக பயபடுத்திய வளிமத்தின் பருமனை அளந்து, ஆற்றலை அளக்கிறது. இந்தப் பருமன் எண்மதிப்பைக் கலோரி மதிப்பால் பெருக்கினால் பயன்படுத்திய ஆற்றலின் அளவு கிடைக்கிறது.

திறன்

தொகு

திறன் என்பது ஓர் இயற்பியல் அமைப்பு ஒற்றை அலகு நேர இடைவெளியில் பரிமாறும் ஆற்றலின் அளவு ஆகும்.

  • (காண்க, கீழே உள்ள ஏதாவதொரு திறன் அளவிடும் கருவி)

திறன் மதிப்பு நெடுக்கங்களுக்கு, காண்க: அளவிடும் நெடுக்கங்கள் (திறன்).

முதன்மைக் கட்டுரை:பணி (இயற்பியல்) ஒரு நிகழ்வின்பணி என்பது அது நிகழும் கால அளவில் நிலவும் ஆற்றலின் கூட்டல் ஆகும். (ஆற்ற்ல் மீதான காலத் தொகையம்(integral). இதன் பருமானங்கள் கோண உந்தத்தின் பருமானங்களுக்குச் சமமாகும்.

  • ஒளிமின்குழல் மின்னழுத்தம் அளந்து, ஒளியின் பிளாங்கு மாறிலி வழி ஒளியின் குவையப் பணியைக் கணக்கிடுகிறது. (மேலும் காண்க ஒளிமின் விளைவு.)

வடிவியல்

தொகு

முதன்மைப்பகுப்பு:வடிவியல் அளவீட்டுக் கருவிகள்

பருமானங்கள்(உருவளவு)

தொகு

முதன்மைப்பகுப்:பருமான அளவைக் கருவிகள்

நீளம் (தொலைவு)

தொகு
  • நீளம், தொலைவு, நீள நெடுக்க அளவி

நீள மதிப்பு நெடுக்கங்களுக்கு, காண்க:அளவிடும் நெடுக்கங்கள் (நீளம்)

பரப்பு

தொகு
  • பரப்பளவி

பரப்பு மதிப்பு நெடுக்கங்களுக்கு, காண்க : அளவிடும் நெடுக்கங்கள் (பரப்பு)

பருமன்

தொகு
 
அளக்கும் கோப்பை

நேரம்

தொகு
 
புனைவில் அளவிடும் கருவிகள்: விண்கலபதி நெம்மொவும் பேராசிரியர் அரோனாக்சும் பயன்படுத்தும் வெப்ப அளவிகள், அழுத்த அளவிகள், கடிகாரங்கள். யூல்சு வெர்னேவின் 1869-1870 கால அறிவியல் புனைவுப் புதினம், கடலில் இருபது ஆயிரம் லீக்குகளுக்குக் கீழ்
 
குறும்பு அளவிடும் கருவிகள்: ஓய்வு நிறுத்தத்தில் ஒரு காதல் அளவியும் வலிமை ஓர்வு எந்திரமும், பிரேமிங்காம், மசாசூசட்சு.

நேரத்தை அளவிடுதல்

தொகு
 
கடிகாரம், நேரம் அளவிடும் கருவி

• பழங்காலங்களில், நேரம் சூரியக் கடிகாரம், நீர்க்கடிகாரம், மணல் கடிகாரம் அளவுகள் குறிக்கப்பட்ட மெழுகுவர்த்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி அளவிடப்பட்டது. இரவு நேரங்களில் வானத்தில் இருக்கும் விண்மீன்களின் நிலையினைக் கொண்டு நேரம் கணிக்கப்பட்டது. மேற்கண்ட அனைத்து முறைகளும் துல்லியமற்றவை. • தற்காலத்தில் எண்ணிலக்கக் கடிகாரங்கள், அணுக் கடிகாரங்கள், குவார்ட்சு கடிகாரங்கள் கொண்டு சிறிய கால இடைவெளிகள் துல்லியமாக அளக்கப்படுகின்றன.

சூரியக் கடிகாரம்

தொகு

• சூரியன் எழும்போதும் மறையும் போதும் பொருளினால் உருவாகும் நிழலின் நீளம் மாறுபடுவதன் அடிப்படையில் சூரியக் கடிகாரம் செயல்படுகிறது.

நீர்க்கடிகாரம்

தொகு

• சீரான அளவில் ஒரு கலனிலிருந்து வெளிப்படும் நீரைக் கொண்டு மற்றொரு கலன் மெதுவாக நிரப்பப்படும் அளவைக் கொண்டு நேரம் அளவிடப்படுகிறது. கலனின் உட்புறத்தில் குறிக்கப்படும் அளவுகள், நேரத்தைக் குறிக்கின்னறன.

மணல் கடிகாரம்

தொகு

• இது நீர்க்கடிகாரம் போன்றே செயல்படுகிறது. நீருக்குப் பதிலாக மணல் பயன்படுத்தப்படுகிறது.

எந்திரவியல் கடிகாரம்

தொகு

• கலிலியோவின் ஊசல் கண்டுபிடிப்பு, ஊசல் கடிகாரங்களை வடிவமைக்க உதவியது. கைக்கடிகாரத்திலும் சிறிய கடிகாரங்களிலும் உள்ள மயிரிழை போன்ற சுருள்வில்லின் மீது பொருத்தப்பட்டுள்ள சமன்செய் சக்கரத்தின் உதவியால் சரியான நேரம் அளவிடப்படுகிறது.

தனி ஊசல்

தொகு

• ஊஞ்சல் முன்னும் பின்னுமாக செல்லும் இயக்கம், அலைவு இயக்கம் ஆகும். அலைவு இயக்கத்தை ஊசல் கடிகாரங்களிலும் காணலாம். • ஊசல் கடிகாரம் தனி ஊசல் நெறிமுறையின்படி செயல்படுகின்றது. • கெட்டியான சிறிய உலோகக் குண்டினை மீட்சியற்ற நூலினால் கட்டித் தொங்கவிடப்பட்ட அமைப்பே தனிஊசல் எனப்படும். குண்டுஒருபுறம் சற்று இழுத்து விடப்படும்போது அது முன்னும் பின்னும் அலைவுறும். குண்டு ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு சென்று மீண்டும் அதே முனைக்கு திரும்பினால் அது ஒரு அலைவு எனப்படும். ஒரு முழு அலைவிற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் அலைவு நேரம் எனப்படும். • ஊசல் தொங்கவிடப்படும் புள்ளிக்கும், குண்டின் மையத்திற்கும் இடைப்பட்ட தொலைவு ஊசலின் நீளம் எனப்படும். ஓய்வு நிலையில் இருந்து குண்டை இழுத்து விடப்படும்போது அது மீளத்தொடங்கும் கணம் வரையிலான ஊசலாட்டத் தொலைவு வீச்சு எனப்படும். • கலிலியோ இத்தாலியின் பைசா நகரத்தில் உள்ள இத்தாலி கிருத்துவக் கோவிலுக்கு சென்றபோது, நீளமான சங்கிலியால் கட்டி தொங்கவிடப்பட்ட விளக்கு சீராக அலைவுறுவதைக் கண்டார். அவர் தனது நாடித்துடிப்பைக் கொண்டு விளக்கின் அலைவுகளைக் கணக்கிட்டார். விளக்கின் அலைவீச்சு குறைந்தபோதும் நேரம் மாறாமல் இருப்பதைக் கண்டார். விளக்கின் அலைவினைக் கூர்ந்து நோக்கியதன் மூலம் அலைவுகாலத்தின் மாறாத தன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். அவர் 1642-ஆம் ஆண்டு இறப்பதற்கு முன் ஊசல் கடிகாரம் ஒன்றினை வடிவமைக்க திட்டமிட்டார். இருந்தபோதிலும் வெற்றிகரமாக முதலாவது ஊசல் கடிகாரம் டச்சு நாட்டு அறிஞர் கிறித்தியன் ஐகன்சு என்பவரால் 1657-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது.

குவார்ட்சு கடிகாரம்

தொகு

• குவார்ட்சு படிகக் கடிகாரங்கள் சிறந்த செயல்திறனும், துல்லியத்தன்மையும் கொண்டவை. குவார்ட்சுப் படிகங்கள் உயர் அதிர்வெண்ணில் அதிர்வுறக் கூடியவை. இவ்வதிர்வுகளைக் கொண்டு நேரம் படிகக் காட்சி அமைப்பின்வழி காண்பிக்கப்படுகிறது.

அணுக் கடிகாரம்

தொகு

• மிக அதிகத் துல்லியத்தன்மை கொண்ட கடிகாரங்களாக தற்போது அணுக்கடிகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சீசியம் அணுவில் ஏற்படும் சீரான அதிர்வுகளின் அடிப்படையில் இக்கடிகாரங்கள் செயல்படுகின்றன.

உள்ளுர் நேரமும் செந்தர நேரமும்

தொகு

• உள்ளுர் நேரம், சூரியனின் நிலையைக் கொண்டு கணக்கிடப்படுவதால் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வானத்தில் சூரியன் உச்ச நிலையை அடையும்போது, அப்போதைய நேரமான நண்பகல் 12 என அளவிடப்படுகிறது. இது உள்ளுர் நேரம் எனப்படும்.

தொலைவைச் சாராமல், நாடு முழுவதற்கும் ஒரே சீரான நேரத்தை கணக்கிட, ஒவ்வொரு நாடும் ஒரு குறிப்பிட்ட நெட்டாங்கை(தீர்க்க ரேகையை)த் தேர்வு செய்து செந்தர நேரம் கணக்கிடப்படுகிறது.

சிறிய தொலைவுகளை அளவிடல்

தொகு

• ஆய்வகங்களில் எந்த ஒரு பொருளின் நீளத்தையும் அளவிட சிறிய மீட்டர் அளவுகோல் பயன்படுகிறது. • மீட்டர் அளவுகோலைக் கொண்டு அளவிடக்கூடிய மிகக்குறைந்த நீளம் 1 மி.மீ ஆகும். இது மீட்டர் அளவுகோலின் மீச்சிற்றளவை எனப்படும். • தற்போது பிரான்சு நாட்டு அறிஞர் பியரி வெர்னியர் அவர்கள் வடிவமைத்த வெர்னியர் அளவுகோல் என்ற துணை அளவுகோலைப் பயன்படுத்தி மேற்கண்ட மிகச்சிறிய அளவுகளையும் துல்லியமாக அளக்க இயலும். • வெர்னியர் அளவுகோலை, அளவுகோலுடன் சேர்த்துப் பயன்படுத்தி, 0.1 மி.மீ அல்லது 0.01 செ.மீ. அளவிற்கு சரியாக அளக்க முடியும்.

மீச்சிற்றளவை

தொகு

ஒரு கருவியைக் கொண்டு அளவிடக் கூடிய மிகக்குறைந்த அளவு அதன் மீச்சிற்றளவை எனப்படும்.

வெர்னியரின் மீச்சிற்றளவை

தொகு

வெர்னியரின் முதன்மை அளவுகோலின் ஒரு பிரிவின் மதிப்பிற்கும் வெர்னியர் அளவுகோலின் ஒரு பிரிவின் மதிப்பிற்கும் உள்ள வேறுபாடு மீச்சிற்றளவை எனப்படும். மீச்சிற்றளவை –

  • 1 அஅ – 9ஃ10 அஅ
  • 0.1அஅ – 0.01உஅ

வெர்னியர் அளவி

தொகு

இக்கருவி வெர்னியர் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. வெர்னியர் என்பது உயரமானி, அழுத்தமானி அல்லது அளவுகள் குறிக்கப்பட்ட கருவிகளுடன் இணைக்கப்பட்ட நகரும் ஒரு சிறு அளவுகோல் ஆகும். • வெர்னியர் அளவியில் செ.மீ மற்றும் மி.மீ ல் அளவீடுகள் குறிக்கப்பட்ட ஒரு மெல்லிய, நீளமான உலோகப் பட்டடை உள்ளது. இது முதன்மை அளவுகோல் எனப்படும். • உலோகப்பட்டடையின் இடதுபக்க முனையில் மேல்நோக்கிய மற்றும் கீழ் நோக்கிய தாடைகள் அளவுகோலுக்குச் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளன. இவை நிலையான தாடைகள் எனப்படும். • வெர்னியர் அளவுகோலின் நிலையான தாடைகளுக்கு வலது புறத்தில், முதன்மை அளவுகோலின் மீது நழுவிச் செல்லும் வகையில் வெர்னியர் அளவுகோல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் இடது முனையில் மேல் மற்றும் கீழ் நோக்கிய தாடைகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இயங்கும் தாடைகள் ஆகும். • வெர்னியர் அளவுகோலில் உள்ள திருகு ஒன்றினை பயன்படுத்தி இதனை நகர்த்தவும், நிலையாக ஓரிடத்தில் பொருத்தவும் முடியும். • கீழ்நோக்கிய தாடைகள் பொருளின் வெளிப்புற அளவுகளை அளவிடவும், மேல் நோக்கிய தாடைகள் உட்புற அளவுகளை அளக்கவும் பயன்படுகின்றன. • வெர்னியர் அளவுகோலுடன் இணைக்கப்பட மெல்லிய பட்டை உள்ளீடற்ற பொருள்களின் ஆழத்தை அளவிடப் பயன்படுகின்றது.

பிழை

தொகு

• அளவிடப்படும் அளவீடு சரியான மதிப்பிலிருந்து எவ்வளவு மாறுபட்டுள்ளது என்பதே பிழை எனப்படும். • அளவிடப்படும் அளவு, சரியான அளவைவிட அதிகம் எனில் நேர்ப்பிழை எனவும், சரியான அளவைவிடக் குறைவு எனில் எதிர்ப்பிழை எனவும் கூறப்படும்.

வெர்னியர் அளவியின் சுழிப்பிழை காணல்

தொகு

• கீழ்த்தாடைகள் ஒன்றை ஒன்று தொடும்படி வைக்க வேண்டும். வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு முதன்மை அளவுகோலின் சுழிப்பிரிவுடன் பொருந்தியிருந்தால் கருவியில் பிழை இல்லை எனலாம்.

நேர்ப்பிழை

தொகு

• வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு, முதன்மை அளவுகோலின் சுழிப்பிரிவிற்கு வலப்பக்கமாக அமைந்தால், கருவியில் நேர்ப்பிழை உள்ளது எனலாம். சுழித்திருத்தம் (ணுஊ) எதிர்க்குறி உடையது. • எடுத்துக்காட்டாக வெர்னியர் அளவுகோலின் n ஆவது பிரிவு முதன்மை அளவுகோலின் ஏதேனும் ஒரு பிரிவுடன் ஒன்றியிருப்பதாகக் கொண்டால், சுழிப்பிழை ஸ்ரீ 10 (n ஒ மீச்சிற்றளவை)

எண்ணிலக்க வெர்னியர் அளவி

தொகு

• எண்ணிலக்க வெர்னியர் அளவியில் உள்ள எண்காட்டியைக் கொண்டு எளிதில் அளவீடுகளைக் கண்டறியலாம்.

திருகு அளவி

தொகு

• மிகச்சிறிய பொருள்களின் பரிமாணங்களை 0.001 செ.மீ. அளவுக்குத் துல்லியமாக அளக்கப் பயன்படும் கருவி திருகு அளவி ஆகும். • திருகு அளவியில் 'ரு' வடிவ உலோகச் சட்டம் உள்ளது. இச்சட்டத்தின் ஒரு புறம் உள்ளீடற்ற ஓர் உலோக உருளை பொருத்தப்பட்டுள்ளது. • உருளையின் உட்புறம் புரிகள் செதுக்கப்பட்டிருக்கும். புரியினுள் திருகு ஒன்று இயங்குகிறது. • உருளையின் மேற்புறத்தில், திருகின் அச்சுக்கு இணையாக மில்லி மீட்டர் அளவுகள் குறிக்கப்பட்ட அளவுகோல் உள்ளது. இது புரிக்கோல் எனப்படும். • திருகின் தலைப்பகுதியோடு உள்ளீடற்ற உருளையொன்று இணைக்கப்பட்டுள்ளது. • அதன் குவிந்த முனை 100 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது தலைக்கோல் எனப்படும். • திருகின் மறுமுனை சமதளமாக உள்ளது (ளு1) அதற்கு நேர் எதிரில், அதன் பரப்புக்கு இணையாகக் குமிழ் (ளு2) ஒன்று உள்ளது. • திருகின் தலைப்பகுதியில் உள்ள பற்பட்ட அமைப்பு, திருகு அளவுக்கு அதிகமாகத் திருகப்படுவதைத் தடுக்கிறது.

திருகு அளவியின் தத்துவம்

தொகு

• திருகு அளவி திருகுத் தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது. நிலையான மரைக்குள் இயங்கும் திருகைச் சுற்றும்போது, அதன் முனை முன்னோக்கி நகரும் தொலைவு சுற்றப்பட்ட சுற்றுக்களின் எண்ணிக்கைக்கு நேர்தகவில் இருக்கும்.

புரியிடைத்தூரம்

தொகு

• ஒரு முழுச் சுற்றுக்குத் திருகின் முனை நகரும் தொலைவு, இரு அடுத்தடுத்த புரிகளுக்கிடையே உள்ள தொலைவுக்குச் சமம். இது புரியிடைத் தூரம் எனப்படும். • புரியிடைத்தூரம் - புரிக்கோலில் திருகு நகர்ந்த தொலைவுஃதலைக்கோல் சுற்றிய சுற்றுகளின் எண்ணிக்கை.

திருகு அளவியின் மீச்சிற்றளவு

தொகு

• திருகின் தலைப்பகுதி, தலைக்கோலின் ஒரு பிரிவு அளவிற்கு சுற்றப்படும்போது, திருகின் முனை நகரும் தூரம், திருகு அளவியின் மீச்சிற்றளவு ஆகும். • மீச்சிற்றளவு – புரியிடைத் தூரம்ஃதலைக்கோல் பிரிவுகளின் எண்ணிக்கை

திருகு அளவியின் சுழிப்பிழை

தொகு

• திருகு முனையின் சமதளப்பரப்பும் எதிரேயுள்ள குமிழின் சமதளப் பரப்பும் இணையும்போது தலைக்கோலின் சுழிப்பிரிவு, புரிக்கோலின் வரைகோட்டுடன் இணைந்தால் சுழிப்பிழை ஏதுமில்லை.

நேர்ப்பிழை

தொகு

• குமிழோடு திருகின் முனை இணையும்போது, தலைக்கோலின் சுழிப்பிரிவு புரிக்கோலில் வரைகோட்டுக்குக் கீழ் அமைந்தால் பிழை நேர்ப்பிழை எனப்படும். • தலைக்கோலின் nஆவது பிரிவு புரிக்கோலின் வரை கோட்டுடன் இணைந்தால் பிழை நேர்ப்பிழை ஆகும்.

எதிர்ப்பிழை

தொகு

• குமிழோடு திருகின் முனை இணையும் போது, தலைக்கோலின் சுழிப்பிரிவு புரிக்கோலின் வரைகோட்டுக்கு மேல் அமைந்தால் பிழை எதிர்ப்பிழை எனப்படும். • தலைக்கோலின் n-ஆவது பிரிவு புரிக்கோலின் வரைகோட்டுடன் இணைந்தால் பிழை எதிர்ப்பிழை ஆகும். • தற்காலத்தில் இலக்க முறை (னபைவையட) திருகு அளவி கொண்டு அளவீடுகள் எளிதாகவும் உடனடியாகவும் மேற்கொள்ளப்படுகின்றன.

பொருண்மையும் எடையும் அளவிடுதல்

தொகு

பொருண்மை(நிறை)

தொகு

• பொருளில் உள்ள பருப்பொருள்களின் அளவு, பொருண்மை எனப்படும். பொருண்மை இடத்திற்கு இடம் மாறுபடாதது. • பொருண்மையின் அலகு கிலோகிராம்; பொருண்மை பல்வேறு தராசுகளைப் பயன்படுத்தி அளவிடப்படுகிறது. • அவற்றுள் சில பின்வருமாறு

எளிய தராசு

தொகு

• கிடைத்தளப் பட்டையைப் பயன்படுத்தி, பொருட்களின் நிறையை, அளவிட்டுக் குறிப்பு நிறைகளுடன் ஒப்பிட்டு அளவிட எளிய தராசு பயன்படுகிறது.

இரு தட்டு தராசு

தொகு

• இவ்வகை தராசுகள் கடைகளில் பொருட்களின் நிறையை அளக்கப் பயன்படுகின்றன.

இயற்பியல் தராசு

தொகு

• ஆய்வகங்களில் பொருட்களின் பொருண்மையை(நிறையை) மில்லிகிராம் அளவிற்கு துல்லியமாக அளக்க இயற்பியல் தராசு பயன்படுகிறது.

• பொருளின் மீது செயற்படும் ஈர்ப்பு விசையின் மதிப்பு பொருளின் எடை எனப்படும். ஈர்ப்பு விசை இடத்திற்கு இடம் மாறுவதால், எடை இடத்திற்கு இடம் மாறுபடக்கூடியது. எடையானது சுருள்வில் தராசு மூலம் அளவிடப்படுகிறது.

சுருள்வில் தராசு

தொகு

• பொருளின் எடை சுருள்வில் தராசு மூலம் அளவிடப்படுகிறது. சுருள்வில்லில் தொங்கவிடப்படும் பொருளினால், சுருளில் ஏற்படும் நீட்சியினைக் கொண்டு எடையானது அளக்கப்படுகிறது.

மருத்துவ எடை அளவி

தொகு

• இது மனிதர்களின் எடைகளை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை அளவியில் உள்ள சுருள்வில், மனிதர்களின் எடைக்கு ஏற்ப அமுக்கப்படுகிறது. த்ற்போது இதற்கு இலக்கவியல் தராசுகள் பயனுக்கு வந்துள்ளன.

மைலக்கவியல்(எண்மத்) தராசு

தொகு

• பொருட்களின் எடைகளை வேகமாகவும், துல்லியமாகவும் அளவிட தற்போத இலக்கவியல் தராசு பயன்படுத்தப்படுகிறது. • இவ்வகைத் தராசுகள் திரிபு அளவி (நீளத்திற்கு ஏற்ப மின்தடை உணரும்) நெறிமுறையின் அடிப்படையில் செயல்படுகின்றன.

எடைமேடை

தொகு

• மிக அதிக எடையுள்ள சரக்குந்துகளின் எடைகளைத் திரிபுமானி நெறிமுறையைப் பயன்படுத்தி அளவிட எடைமேடைகள் பயன்படுகின்றன.

நீர்மவியல் எடை அளவி

தொகு

• பளு தூக்கியினால் உயர்த்தப்படும் மிகவும் பளுவான பொருள்களின் எடைகளை, நீர்மவியல் விசைகளை பயன்படுத்தி அளவிட, நீர்மவியல் எடை அளவி பயன்படுகிறது.

மிக நெடுந்தொலைவுகளை அளத்தல்

தொகு
 
கதிர்வீச்சு அலைகளை அளவிடும் கருவி: 64-மீட்டர் கதிர்வீச்சுத் தொலைநோக்கி, பார்க்கெசு வான்காணகம், ஆத்திரேலியா, 1969. அப்போது இது அப்பொல்லோ 11 விண்கலத்தில் இருந்து வந்த தொலைக்காட்சிக் காணொலியை பெற்றது.

வானியல் அலகும் ஒளி ஆண்டும்

தொகு

• புவியில் இருந்து நிலவு அல்லது கோள் ஒன்றின் தொலைவு போன்ற நீண்ட தொலைவுகளைக் கணக்கிட, சிறப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன. • ரேடியோ எதிரொளிப்பு முறை, லேசர் துடிப்பு முறை, இடமாற்றுத் தோற்றுமுறை போன்றவை மிக நீண்ட தொலைவுகளைக் கணக்கிடப் பயன்படுகின்றன. அத்தகைய நீண்ட தொலைவுகளை அளக்க, வானியல் அலகு மற்றும் ஒளி ஆண்டு போன்ற அலகுகள் பயன்படுகின்றன. • வானியல் அலகு: புவியின் மையத்திலிருந்து சூரியனனி;ன் மையம் வரை உள்ள சராசரித் தொலைவு வானியல் அலகு எனப்படும். • 1 வானியல் அலகு (யுரு) ஸ்ரீ 1.496 ஒ 1011அ • 150 மில்லியன் கிலோ மீட்டர் (15 கோடி கி.மீ.) • ஒளி ஆண்டு: ஒளியானது, வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் செல்லக்கூடிய தொலைவு ஒளி ஆண்டு எனப்படும். • வெற்றிடத்தில் ஒரு ஆண்டில் ஒளி கடந்த தொலைவு ஸ்ரீ ஒளியின் திசைவேகம் ஒ 1 ஆண்டு 1 ஒளி ஆண்டு ஸ்ரீ 3 ஒ 108 அள-1 ஒ 1 ஆண்டு (நொடிகளில் ஸ்ரீ 3 ஒ 108 ஒ 365.25 ஒ 24 ஒ 60 ஒ 60 ஸ்ரீ 9.467 ஒ 1016அ • ஒளி ஒரு வினாடியில் 3 இலட்சம் கி.மீ. தூரம் செல்லும். • ஓர் பையன் ஒளியின் திசை வேகத்தில் வெல்வதாகக் கொள்வோம். அவன் ஒரு வினாடியில் உலகத்தை 7½ முறை சுற்றி வந்து விடுவான். அவன் சூரியனிலிருந்து புவியை வந்தடைய 8 நிமிடம் 20 வினாடி (500 வினாடி) காலம் ஆகும். • மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில் செல்லும் பந்தயக்கார் ஒன்று இதே பயணத்தை முடிக்க 17 ஆண்டுகள் ஆகும்.

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு

"-metre, -metre" எனும் ஆங்கில மாற்றுகள் அளவிடும் கருவிகளைக் குறிப்பிடும்போது பயன்படுத்துவதில்லை.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அளவிடும்_கருவிகள்&oldid=3778370" இலிருந்து மீள்விக்கப்பட்டது