அளவீட்டு முறை (ஒளிப்படவியல்)
ஒளிப்படவியலில் அளவீட்டு முறை (Metering mode) என்பது, புகைப்படம் எடுப்பதில் ஒரு ஒளிப்படக்கருவியின் சரியான வெளிப்பாட்டை (Exposure) தீர்மானிக்கும் வழியைக் குறிக்கிறது. ஒளிப்படக்கருவிகளை பயன்படுத்தும்போது, பொதுவாக குறிப்பிட்ட இடம் (Spot), நிலையிட்ட சராசரி (Center-weighted average) அல்லது பல மண்டலம் (multi-zone) போன்ற அளவீட்டு முறைகளுக்கு இடையே தேர்ந்தெடுத்து செயற்படுத்தப்படுகிறது.[1] வெவ்வேறு அளவீட்டு முறைகளானது, பல்வேறு வகையான ஒளிகளின் நிலைகளில் பயன்படுத்த மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த உதவுகிறது. தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள் சிக்கலான ஒளி சூழ்நிலைகளில், ஒளிப்படக்கருவியில் நிர்ணயிக்கப்பட்ட அமைப்பைப் பொறுத்து, கையேடு பயன்முறையில் (manual mode) செயற்படவே விரும்புகிறார்கள்.[2]
அளவீட்டு முறைகளின் எடுத்துக்காட்டுகள்
தொகுபுள்ளி அளவி
தொகுபுள்ளி அளவி (spot metering) மூலம், ஒளிப்படக்கருவி காட்சியின் மிகச் சிறிய பகுதியை மட்டுமே (காட்சிக் காணி பகுதியில் 1–5%) அளவிடும். இயல்பாகவே இது காட்சியின் மையம். புகைப்படக் கலைஞர் வேறுபட்ட தூர மையத்தின் இடத்தைத் தேர்ந்தெடுக்கலாம், அல்லது அளவீடு செய்த பிறகு ஒளிப்படக்கருவியை நகர்த்துவதன் மூலம் மறுபரிசீலனை செய்யலாம்.[3]
புள்ளி அளவீட்டை பயன்முறையில் சட்டகத்தின் பிற பகுதிகளால் பாதிக்கப்படுவதில்லை. இது பொதுவாக மிக உயர்ந்த மாறுபட்ட காட்சிகளை படமாக்க பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, பின்னிணைந்த சூழ்நிலையில், ஒரு நபரின் பின்னால் உதயமாக கூடிய சூரியன் இருக்கலாம், அதன் மூலம் அவர் முகம் உடல் மற்றும் மயிரிழையைச் சுற்றியுள்ள பிரகாசமான ஒளிவட்டத்தில் இருண்டதாக இருக்கும். மயிரிழையைச் சுற்றியுள்ள மிகவும் பிரகாசமான ஒளியின் வெளிப்பாட்டை சரிசெய்வதற்குப் பதிலாக, நபரின் முகத்திலிருந்து பிரதிபலிக்கும் ஒளியை, ஒளிப்பட கருவியின் புள்ளி அளவீட்டு பயன்முறையில் மிகச்சரியான வெளிப்பாடு கிடைக்கும். முகம் சரியாக வெளிப்படுவதால், பின்புறம் மற்றும் மயிரிழையைச் சுற்றியுள்ள பகுதி அதிக பிரகாசமாக வெளிப்படும். பல சந்தர்ப்பங்களில், புள்ளி அளவி காட்சியின் ஒரு பகுதியின் ஒளி அளவை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ காண்பிக்கும், இதனால் கவனமாக புள்ளியை சரியாக காட்சிகாணியில் கவனித்து காட்சியை பதிவு செய்ய வேண்டும்.[4]
புள்ளி அளவி பயன்பாட்டில் மற்றொரு எடுத்துக்காட்டு, நிலாவை புகைப்படம் எடுப்பது. பிற அளவீட்டு முறையில் இருண்ட வானப் பகுதியை ஒளிரச் செய்யும் முயற்சியில் ஒட்டுமொத்த வெளிப்பாட்டை அதிகரிக்கும், இதன் விளைவாக சந்திரனின் அதிகப்படியான வெளிப்பாடு ஏற்படுத்தும். புள்ளி அளவீட்டில் நிலவின் சரியான வெளிப்பாட்டைக் கொடுக்கிறது, மற்றும் ஏற்கனவே இருட்டாக இருக்கக்கூடிய மீதமுள்ள காட்சியை குறைத்து மதிப்பிட்டு குறைந்த வெளிபாடுடைய அப்பகுதியை நிராகரிக்கிறது. திரையரங்கு புகைப்படம் எடுப்பதற்கும் இந்த வகை அளவியை பயன்படுத்தப்படலாம், அங்கு பிரகாசமாக ஒளிரும் நடிகர்கள் மற்றும் இருண்ட அரங்கம் என இருவேறு சூழ்நிலை உள்ளது. புள்ளி அளவி என்பது மண்டல அமைப்பு சார்ந்துள்ள ஒரு முறையாகும்.[5]
நடு எடையுள்ள சராசரி அளவி
தொகுஇந்த அமைப்பின் மீட்டரில், காட்சியின் 60-80 விழுக்காடு நடுப்பகுதியை எடுத்துக்கொண்டு, எஞ்சிய விளிம்புகளை நோக்கி "தூவல்" (Feather) செய்யப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Metering (ஆங்கிலம்)". 2020 Nikon Corporation - 2020 Nikon Corporation. Archived from the original on 2020-11-12. பார்க்கப்பட்ட நாள் 19 11 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "How to Configure Manual Mode Settings on a DSLR (ஆங்கிலம்)". Adorama Camera - 2020 Adorama Camera. பார்க்கப்பட்ட நாள் 19 11 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Introduction to Metering on a DSLR (ஆங்கிலம்)" (PDF). alison.com - 2020 pdf. பார்க்கப்பட்ட நாள் 19 11 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "12Your camera's light metering modes (ஆங்கிலம்)". By Antoni Cladera/.photopills.com - 2020. பார்க்கப்பட்ட நாள் 29 11 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Mastering the Zone System – Part 1: Zone System Metering (ஆங்கிலம்)". By casualphotophile - 2014-2020. பார்க்கப்பட்ட நாள் 30 11 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)