அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில்

அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் பாண்டவர்களின் வனவாசத்தில் வழிகாட்டியருளிய கோயிலாக கருதப்படுகிறது.இத்திருக்கோயில் வத்திராயிருப்பில், மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில், மதுரையிலிருந்து 70 கி.மீ தொலைவிலும், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 20கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கடும் வறட்சி நிலவிய காலகட்டத்தில் இங்கு வந்த பஞ்சபாண்டவர்களைக் கண்ட மக்கள் வறட்சியை நீக்க வேண்டினர், அர்ஜூனன் தமது காண்டீபத்தை பூமியில் செலுத்தி கங்கையையே இங்கு கொண்டு வந்தார். அதுவே அர்ஜூன நதி என்று இன்று போற்றப்படுகிறது.

அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில்[1]
பெயர்
வேறு பெயர்(கள்):தர்மாரண்ய சேத்திரம், ஸ்ரீவக்த்ரபுரம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விருதுநகர்
அமைவு:வத்திராயிருப்பு
கோயில் தகவல்கள்
மூலவர்:ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீஅழகிய சாந்த மணவாளப் பெருமாள்
சிறப்பு திருவிழாக்கள்:ஆடிப்பூரம், புரட்டாசி சனிக்கிழமைகள்
உற்சவர்:அழகிய சாந்த மணவாளப்பெருமாள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:கி.பி.1464 ஆம் ஆண்டில் தென்காசிப் பாண்டிய மன்னன் கல்வெட்டு, பொன்னின் பெருமாள் பராக்ரம பாண்டியன் கல்வெட்டு, ’இறங்காக்கிணறு’ வரலாறு கூறும் 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு , கோபுர வாயிலில் உள்ள கி.பி.16 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு
வரலாறு
கட்டப்பட்ட நாள்:புராதனக் கோவில்

வரலாறு

தொகு

ஸ்ரீமகாலட்சுமி நாராயணரைத் தனிமையில் தியானித்து தவம் செய்ய ஏற்ற புனிதமான இடத்தை சப்தரிஷிகளிடம் கேட்க, அவர்கள் தேர்ந்தெடுத்து காட்டிய இடம் இது. இதனை ஸ்ரீதேவித் தாயார் முகம் மலர்ந்து ஏற்றதால், இந்த தலத்திற்கு ஸ்ரீவக்த்ரபுரம் (ஸ்ரீ - மகாலட்சுமி; வக்த்ரம்-திருமுகம் மலர்தல்) என்ற பெயர் வந்தது.

இங்கு தவம் இருந்த ஸ்ரீதேவித் தாயார் அதன் பலனாக பெருமாளைக் கைத்தலம் பற்றிய தலம் இங்கிருந்து 38கி.மீ தொலைவில் உள்ள திருத்தங்கல் என்ற திருத்தலம்.

பிரம்மாண்ட புராணத்தில் உள்ள திருத்தங்கல் மஹாத்மியத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது.

இறங்காக்கிணறு மற்றும் உறங்காப்புளி ஆகியவை இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.

கல்வெட்டுகள்

தொகு
  • கி.பி.1464 ஆம் ஆண்டில் தென்காசிப் பாண்டிய மன்னன் இந்த திருக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகமும் நடத்தி வைத்ததைக் கல்வெட்டு கூறுகிறது.
  • பொன்னின் பெருமாள் பராக்ரம பாண்டியன் காலத்தில் ஏராளமான நன்கொடையும், நிலமும் திருப்பணிக்காக வழங்கப்பட்ட செய்தி கல்வெட்டு மூலம் தெரிய வருகின்றது.
  • கல்வெட்டுகளில் திருக்கோயில் பெயர் ’கண்ட நாட்டில் உள்ள செந்தனேரி தனிமால் அழகியர் கோயில்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ’இறங்காக்கிணறு’ எனும் கிணறு நக்கன், சொக்கன், சொக்கன் வில்லி என்ற பக்தர்களால் வெட்டப்பட்ட செய்தியை 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு தெரியப்படுத்துகிறது.
  • கோபுர வாயிலின் கல்வெட்டுகள் ரெங்கப்ப நாயக்கன் மண்டபம் கி.பி.16 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னரால் கட்டப்பட்டதைத் தெரியப்படுத்துகிறது.

சிதிலமடைந்த கோவில்

தொகு

காலவெள்ளத்தில் இத்திருக்கோவில் சிதிலமடைந்தது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள இந்தக் கோவிலை சீரமைக்க அத்துறைக்கு 2010 ஆம் ஆண்டில் குமுதம் ஜோதிடம் பத்திரிக்கை, பத்திரிக்கை மூலமாக வேண்டுகோள் வைத்தது. வத்திராயிருப்பு பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. [2]

தலவரலாற்றுத் தொடர்புடைய திருக்கோயில்

தொகு

மேற்கோள்கள்

தொகு