திருத்தங்கல்

திருத்தங்கல் வரலாறு

திருத்தங்கல் (ஆங்கிலம் : en:Thiruthangal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி வட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சிப் பகுதியும் சிவகாசி மாநகராட்சியின் மண்டலங்களுள் ஒன்றாகும்.

திருத்தங்கல்
—  சிவகாசி மாநகராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
வட்டம் சிவகாசி வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3]
நகர்மன்றத் தலைவர்
மக்கள் தொகை 55,362

தொலைபேசி குறியீட்டு எண் =04,562 (2001)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம்9°17′N 77°28′E / 9.28°N 77.47°E / 9.28; 77.47 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 86 மீட்டர்(482 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15,424 குடும்பங்களையும் கொண்ட இப்பகுதியின் மக்கள்தொகை 55,362 ஆகும். அதில் 27,676 ஆண்களும், 27,686பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 80.5% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,000 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5918 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 943 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடி மக்களும் முறையே 11,567 மற்றும் 103 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.74%, இசுலாமியர்கள் 1.03%, கிறித்தவர்கள் 6.14% மற்றும் பிறர் 0.09% ஆகவுள்ளனர்.[5]

முக்கிய தொழில்கள்

தொகு

திருத்தங்கல் சிவகாசியுடன் முன்பு இணைந்து இருந்தது. சிவகாசியைப் போலவே திருத்தங்கலிலும் பட்டாசு, தீப்பெட்டித் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு கல் குவாரிகளும் உண்டு.

போக்குவரத்து

தொகு

சென்னை - செங்கோட்டை வரும் செல்லும் அகல ரயில் பாதை இவ்வூரையும் கடக்கிறது. வாரத்தின் அனைத்து நாட்களும் பொதிகை விரைவு வண்டி இந்த ஊர் புகைவண்டி நிலையத்தில் நிற்கும். ஆனைக்குட்டம் , எரிச்சநத்தம், சுக்கிரவார்பட்டி, சில்லையநாயக்கன்பட்டி, செங்கமலபட்டி, வெள்ளியபுரம்,நாரணபுரம், வடமல்லாபுரம், எம் புதுப்பட்டி, ஆலமரத்துப்பட்டி என சுற்றுபுறத்தில் உள்ள சிறிய கிராமங்களுக்கு ஒரு இணைப்பு பகுதியாக திருத்தங்கல் விளங்குகிறது.

கோவில்கள்

தொகு

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் நூற்றிஎட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கே சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் ஒருங்கே அமைந்துள்ளது. மலை மேல் உள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள காளியம்மன் கோவிலிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். பங்குனிப் பொங்கல் மற்றும் தை பூசம் இவ்வூரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் வருடாந்திர பண்டிகைகள்.

புகழ்பெற்றவர்கள்

தொகு

ஆரோக்யா பால் நிறுவனர் ஆர். ஜி. சந்திரமோகன் இவ்வூரைச் சேர்ந்தவர்.

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Thiruthangal". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 09, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. திருத்தங்கல் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்தங்கல்&oldid=4029375" இலிருந்து மீள்விக்கப்பட்டது