ஆர். ஜி. சந்திரமோகன்

ஆர். ஜி. சந்திரமோகன் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்களில் (entrepreneur) முக்கியமான ஒருவர் ஆவார். பால் மற்றும் தாவர பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹட்சன் நிறுவனத்தை நிறுவியவர். இந்நிறுவனத்தின் முக்கிய வணிகப்பொருட்கள் ஆரோக்யா பால், அருண் ஐஸ்க்ரீம், கோமாதா பால், ஹட்சன் நெய் போன்றவை ஆகும்.

ஆர். ஜி. சந்திரமோகன்
பிறப்புதிருத்தங்கல், சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா
பணிஹட்சன் நிறுவனத்தின் நிறுவனர்.
சொத்து மதிப்பு$1.1 பில்லியன் '(2010)
பிள்ளைகள்சி. சத்யன், தேவிகா

வாழ்க்கைதொகு

சந்திரமோகன் சிவகாசிக்கு அருகில் உள்ள திருத்தங்கல் என்கிற ஊரில் நாடார் சமூகத்தில் பிறந்தார். தன் குடும்பத்தை கவனிப்பதற்காக தன் இளவயதிலேயே கல்வியை இடையில் விட்டுவிட்டார். 1970-ல் தன் குடும்ப சொத்துக்கள் சிலவற்றை விற்று, அதன்மூலம் கிடைத்த ரூபாய் 13,000-தில் ஆர். ஜி. சந்திரமோகன் அன் கோ., என்ற நிறுவனத்தை நிறுவினார். 1986-ல் இது 'ஹட்சன் விவசாய பொருட்கள் தயாரிப்பு நிறுவனம்' (ஆங்கிலம்: Hutsun Agro Products Ltd) என்று பெயர் மாற்றி நிறுவப்பட்டது[1]. 2002-லிருதந்து இவரது மகன் சத்யன் இந்நிறுவனத்தின் செயற்குழு இயக்குனராக இருக்கிறார்.

எழுதியுள்ள புத்தகங்கள்தொகு

இனி எல்லாம் ஜெயமே - சுயமுன்னேற்ற நூல்.

வெளி இணைப்புகள்தொகு

ஹட்சனின் அதிகாரப்பூர்வ இணையதளம்

உசாத்துணைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ஜி._சந்திரமோகன்&oldid=2717459" இருந்து மீள்விக்கப்பட்டது