அழகு (பாட்டின் வனப்பு)

பாட்டின் வனப்புகள் எனத் தொல்காப்பியம் காட்டும் எட்டில் ஒன்று அழகு.

பேச்சு வழக்கில் இல்லாமல் செய்யுள் வழக்கில் மட்டும் பயன்படுத்தப்படும் சொற்களைப் பயன்படுத்திப் பாடும் பாக்கள் அழகு என்னும் வனப்பாகக் கொள்ளப்படும். [1]

எடுத்துக்காட்டு

துணியிரும் பரப்பகம் குறைய வாங்கி
மணிகிளர் அடுக்கம் முற்றிய எழிலி
காலொடு வயங்கிய கனையிருள் நடுநாள்
யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப
நெடுவரை மருங்கில் பாம்பு என இழிதரும்
கடுவரல் கலுழி நீந்தி
வல்லியம் வழங்கும் கல் அதர் நெறியே (யாப்பருங்கல விருத்தி மேற்கோள்)

காண்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. செய்யுள் மொழியான் சீர் புனைந்து யாப்பின்
    அவ் வகைதானே அழகு எனப்படுமே. தொல்காப்பியம் செய்யுளியல் 228

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகு_(பாட்டின்_வனப்பு)&oldid=3305007" இலிருந்து மீள்விக்கப்பட்டது