அழிக்கல் கடற்கரை

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை

வார்ப்புரு:Infobox landform அழிக்கல் கடற்கரை (Azheekal Beach) என்பது தென்னிந்தியாவின் கேரளத்தின் கொல்லம் பெருநகரப் பகுதியின் கருநாகப்பள்ளி தாலுகாவில், அரபிக் கடலின் கரையோரத்தில் உள்ள கடற்கரையாகும். [1] இந்த கடற்கரையானது மலையாள சொல்லான ஆழி என்பதிலிருந்து இந்த பெயரைப் பெற்றது. இதன் பொருள் உப்பங்கழி மற்றும் கடலின் சங்கமம் என்பதாகும்.

அமைவிடம் தொகு

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் அலப்பாட் தீபகற்பத்தின் நிலப்பரப்பின் வடக்கு முனையில் அழிக்கல் கடற்கரை அமைந்துள்ளது.

இது கயம்குளத்திலிருந்து 12 கிமீ (7.45 மைல்) தொலைவிலும், கருநாகப்பள்ளியில் இருந்து 14 கிமீ (8.69 மைல்) தொலைவிலும் உள்ளது. அழிக்கல்-அயிரம்தெங்கு பாலம், பானிக்கர் கடவு பாலம் அல்லது கல்லம் மூட்டில் கடவு பாலம் வழியாக இங்கு வந்து சேரலாம்.

அழிக்கல் மீன்பிடி துறைமுகம் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது.

இது 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டது.

குறிப்புகள் தொகு

  1. "Azheekal Beach Near Karunagappally Kollam". www.dtpckollam.com (in ஆங்கிலம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழிக்கல்_கடற்கரை&oldid=3036351" இலிருந்து மீள்விக்கப்பட்டது