அழிசி நச்சாத்தனார்

சங்ககாலப் புலவர்

அழிசி நச்சாத்தனார் என்பவர் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள புலவர்களில் ஒருவர்.[1] ஒரே ஒரு பாடல் இவரது பெயரில் உள்ளது. அது குறுந்தொகை 271 மருதம் ஆகும்.[2]

புலவர் பெயர்

தொகு

அழிசி என்னும் பெயர் ஊரின் பெயரையும், ஆளின் பெயரையும் குறிக்கும் வகையில் சங்கநூல்களில் குறிப்புகள் வருகின்றன. இப்புலவர் அழிசி என்னும் ஊரினராகவோ, அழிசி என்பவரின் மகனாகவோ இருக்கவேண்டும்.

அழிசி அம் பெருங்காடு என்னும் நிலப்பகுதி சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டியுந்தது.(நற்றிணை 87) சேந்தன் என்பவனின் தந்தையாகிய அழிசி என்பவன் ஆர்க்காட்டை ஆண்டுவந்தான். (குறுந்தொகை 258, நற்றிணை

நச்செள்ளையார், நப்பாலத்தனார், நக்கீரனார் என்னும் பெயர்களில் 'ந' என்பது நன்மை என்னும் பொருளைத் தருவது போல இப்புலவர் பெயரிலுள்ள ந எழுத்தும் நல்ல சாத்தனார் என்னும் பொருளைத் தரும்.

பாடல் தரும் செய்தி

தொகு

தலைமகன் தோழியை வேண்டினான். தோழி தலைமகளை வேண்டினாள். தலைமகள் தோழியிடம் சொல்கிறாள். மழை அருவி போலக் கொட்டும் நாட்டை உடையவன் அவன். அவனை நம்பி ஒருநாள்தான் அவனோடு இருந்தேன். என் நோயோ தவப்பன்னாள் துன்புறுத்துகின்றது. இன்னும் அவனுடன் கூடினால் என் நிலைமை என்ன ஆகும்?

திருக்குறள் அடியோடு ஒப்புமை

தொகு

உற்றது மன்னும் ஒருநாள் - இது இப்பாடலில் உள்ள அடி
கண்டது மன்னும் ஒருநாள் - இது திருக்குறளில் உள்ள அடி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழிசி_நச்சாத்தனார்&oldid=4123220" இலிருந்து மீள்விக்கப்பட்டது