அழுகல் வளரிப் போசணை

அழுகல் வளரிப் போசணை (Saprotrophic nutrition) என்பது ஒரு வகை இரசாயனப் பிறபோசணிப் போசணையாகும். இதன் போது உயிரற்ற சேதன உணவின் மீது அழுகல் வளரி உயிரினம் சமிபாட்டு நொதியங்களை வெளிச்சுரந்து கலப்புறச் சமிபாடு மூலம் உணவை எளிய போசணைப் பொருட்களாக மாற்றி அப்போசணைப் பொருட்களை அகத்துறிஞ்சிக் கொள்ளும். அனேகமான பூஞ்சைகளும், பல மண் வாழ் பக்டீரியாக்களும் அழுகல் வளரிகளாகும். இவை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த உயிரினங்களாகும். இவை மண்ணில் இறந்த உயிரினங்களினது, விலங்குக் கழிவுகளினதும் உள்ளடக்கங்களை மீண்டும் மண்ணுக்கு வழங்கும் பிரிகையாக்கிகளாக உள்ளன. இவற்றின் செயற்பாட்டால் கனிப்பொருளாக்கம் நடைபெறுகின்றது. இதன் போது இறந்த உடல்கள் மற்றும் கழிவுகளில் உள்ள சேதனப் பகுதி அழுகல் வளரிக்குப் பயன்பட மீதியான கனிப்பொருட்கள் மண்ணுக்கு விடுவிக்கப்படுகின்றன. எனவே தான் புவிக்கோளத்தில் கனிப்பொருள் வட்டங்கள் பூர்த்தியாக்கப்படுகின்றன. அழுகல் வளரிப் போசணையானது உயிரினம் உணவின் மீது வாழ்வதிலிருந்து விலங்கு முறைப் போசணையிலிருந்து வேறுபடுகின்றது.[1][2]

பூஞ்சண வலை. பூஞ்சணம் ஓர் அழுகல் வளரியாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Faust, Ernest Carroll (1929). Human helminthology; a manual for clinicians, sanitarians and medical (in ஆங்கிலம்). p. 18.
  2. Lewis, Robert Alan (2001-12-21). CRC Dictionary of Agricultural Sciences (in ஆங்கிலம்). CRC Press. p. 580. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-2327-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழுகல்_வளரிப்_போசணை&oldid=4116294" இலிருந்து மீள்விக்கப்பட்டது