அழுகை

அழுகை என்பது கண்களிலிருந்து நீரைச் சிந்தும் ஓர் உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வு

அழுகை என்பது கண்களிலிருந்து நீரை சிந்தும் உணர்ச்சிவசப்பட்ட மனிதனின் ஒரு நிலை. அழுகை என்பது ஓர் உணர்ச்சி வெளிப்பாடு. அழுகை என்பது இழிவு, இழவு, அசைவு, வறுமை ஆகிய நான்கில்தான் தோன்றும் என்பர். அழுகை எனும் மெய்ப்பாடும் தன் மாட்டும், பிறர் மாட்டும் பிறக்கும் எனக் கூறுவர். அழுகைச் செயல் பற்றி மேலும் கூறுகையில் ஒரு நுணுக்கமான செக்ரெடொமொடொர் செயல்பாடு காராணமாக லாக்ரிமல் சுரப்பியிலிருந்து கண்களை உறுத்தாத வகையில் கண்ணீர் சுரக்கிறது.[1][2][3]

லாக்ரிமல் சுரப்பிக்கும் மனித மூளையின் உணர்வுகள் தொடர்புடைய பகுதிக்கும் நியூரான் இணைப்பு உள்ளது. சில விஞ்ஞானிகளின் வாதத்தில் உள்ள போதும் வேறு எந்த ஒரு மிருகமும் உணர்ச்சியின் விளைவாக கண்ணீர் சிந்துவதில்லை.

சுமார் 300 நபருக்கு மேல் ஆய்ந்ததில் சராசரியாக ஆண் மாதம் ஒரு முறையும் பெண் மாதம் ஐந்து முறையும் அழுவதாக ஆய்வு எடுத்துக் காட்டுகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் மாதவிடாய் சமயத்திலும் அதற்கு முன்பும் குறிப்பிடும்படியான காரணமின்றி (மன அழுத்தம், மனச்சோர்வு, துயரம் போன்ற எதுவுமின்றி) ஐந்து மடங்கு அதிகம் அழுகிறார்கள். பெரும்பாலான கலாச்சாரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அழுவது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆண்கள் ஆழுவதை சமூகம் எளிதில் ஏற்பதில்லை.

மற்ற அழுகையின் போது சுரக்கும் கண்ணீரும், உணர்ச்சி வயப்பட்ட நிலையில் சுரக்கும் கண்ணீரும் இரசாயனக் கலவையில் மாறுபடுகின்றது. உணர்ச்சி வயப்பட்ட நிலையில் சுரக்கும் கண்ணீரானது அதிக அளவில் ப்ரொலாக்டின், அட்ரெனொகொர்டிகொட்ரொபிக் ஹார்மோன், லியு-என்கெப்கலின்போன்ற ஹார்மோன்களையும், பொட்டாஸியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற தனிமங்களையும் கொண்டுள்ளது.

செயல்பாடு தொகு

அழுகையானது எதனால் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அழுகையானது உடல் வலி, மன வலி போன்ற காரணங்களுக்காகவும், மற்றவர்கள் நாம் உதவி கேட்கும் போது வார்த்தைகளாலும் வார்த்தைகள் இன்றி சைகையால் நம்மை அவமானப் படுத்தும் போதும் வரும்.
மருத்துவ ரீதியாக நகைச்சுவைக்கும் கண்ணீருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப் படுகிறது. மேலும் அழுகை மூளையில் உள்ள அதிகப்படியான நகைச்சுவை உணர்வை அகற்றி மூளையைச் சுத்தப்படுத்த உதவுகிறது. வில்லியம் ஜேம்ஸ் என்பவர் எண்ணங்களின் பிரதிபலிப்பு காரணமாக உணர்வுகள் உடல் ரீதியாக வெளிப்படுகிறது என்கிறார். மன அழுத்தம், எரிச்சல் போன்றவை பயம், கோபமாக வெளிப்படுகிறது. வில்லியம் H.ப்ரெ, மின்னெசொடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர்வேதியியலாளர் மன அழுத்தத்திற்கு காரணமான ஹார்மோன்கள் முக்கியமாக அட்ரெனொகொர்டிகொட்ரொபிக் ஹார்மோன் அழுகையின் போது அழிக்கப்படுவதால், அழுதபின் மக்கள் சற்று நன்றாக உணர்கிறார்கள் என்கின்றார். அழுகை மற்றும் அதன் காரணமாக சுரக்கும் சளியானது ஒரு முடிவுக்கு வழி வகுக்கிறது. மனிதர்களின் மன அழுத்த ஹார்மோன் அளவு அதிகமாகும் போது அதை அழிப்பதற்கு அழுகை பயன்படுகிறது.

சமீபத்திய மனநலக் குறிப்புகள் அழுகைக்கும் இயலாமைக்கும் உள்ள தொடர்பை அழுத்தமாக தெளிவு படுத்துகிறது. இந்த கோணத்தில் பார்க்கும் போது அடிமனதில் உள்ள இயலாமையின் அனுபவத்தால் மக்கள் அழுகிறார்கள் என்பது தெளிவாகிறது. எடுத்துக்காட்டாக மகிழ்ச்சியான செய்தி கேட்கும் போது சிலர் அழுவார்கள். ஏனெனில் நடக்கும் நிகழ்வு தனது கட்டுப்பாட்டில் இல்லை என்று நினைப்பார்கள்.

பரிணாம வளர்ச்சியின் காரணமாக மனிதன் உணர்ச்சிவசப்படும் போது கண்ணீர் வருகிறது. அழுகை நமது கண்ணோட்டத்தை மறைத்து போராட்ட எண்ணத்தை முடக்கி விடுகிறது. மேலும் நமது அமைதி, தேவை மற்றும் அன்பை வெளிப்படுத்தும் கருவியாக பயன்படுகிறது.

குழந்தையின் அழுகை வகைகள் தொகு

 
அழுகை

பிறந்தவுடன் குழந்தை அழுகிறது. இதனால் அதற்கு உயிருள்ளது என்று அறிந்துகொள்கிறோம். அதன்பிறகு வரும் அழுகையினால் பசி, வலி போன்ற உணர்வுகளை தாய் புரிந்து கொள்கிறார். குழந்தையின் ஒரே மொழி அழுகையாயினும் அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரி குழந்தையின் அழுகை இருக்காது. சிசுவின் அழுகையை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது அடிப்படை அழுகை. இதில் அழுகையும் அமைதியும் மாறி மாறி வரும்.அழுகை, அமைதி, பின் ஒரு சிறிய வேகமான மூச்சிழுப்பு சத்தம். மீண்டும் அழுகை, அமைதி. இந்த அழுகையின் முக்கியக் காரணம் பசி. இரண்டாவதாக கோப அழுகை.அடிப்படை அழுகையைப் போலவே இருக்கும். எனினும் அதிகக் காற்று பேச்சுக் குழாய் மூலமாக உள்ளிழுக்கப்படுவதால் அதிக சத்தமான திடீர் அழுகையாக இருக்கும். மூன்றாவது வலி அழுகை. மற்ற இரண்டைப் போல் இல்லாமல் அழுகைக்கு முன் ஒரு சிணுங்கல் அல்லது முனகல் இருக்கும்.பெரும்பாலான பெரியவர்களால் குழந்தையின் அழுகைக்கான காரணத்தை உணர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பெற்றோர்களால் தங்களது குழந்தையின் அழுகையை மற்ற குழந்தைகளின் அழுகையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க இயலும். அழுகை கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு மாறுபட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலை நாடுகளான கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் குழந்தைகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் குழந்தைகளை விட அதிகம் அழுகின்றன. கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியக் குழந்தைகள் உலகிலேயே அதிகம் அழுகின்றன. ஆப்பிரிக்கக் குழந்தைகள் உலகிலேயே குறைவாக அழுகின்றன. முதல் மூன்று மாதங்கள் அதிலும் ஐந்தாவது வாரம் உச்சகட்டமாக அழுவதுதான் காரணம்.அழுகை கலாச்சாரத்திற்கு ஏற்ப மாறுபடுவதன் காரணம் அறியப்படவில்லை.

சிலர் குழந்தைகளை கிள்ளி, அடித்து அதன் உடலுறுப்புகளை இம்சித்து அழ விட்டு வேடிக்கை பார்த்து ரசிப்பார்கள்.

மேற்கோள்கள் தொகு

  1. "Crying behavior and psychiatric disorder in adults: a review". Comprehensive Psychiatry 34 (3): 206–11. 1993. doi:10.1016/0010-440X(93)90049-A. பப்மெட்:8339540.  Quoted by Michelle C.P. Hendriks, A.J.J.M. Vingerhoets in Crying: is it beneficial for one's well-being?
  2. "List of 426 Sets of Synonyms and How they Differ in Meaning". Paulnoll.com. Archived from the original on 2014-12-29. பார்க்கப்பட்ட நாள் 2014-08-04.
  3. Skorucak A. "The Science of Tears". ScienceIQ.com. Archived from the original on 14 November 2017. பார்க்கப்பட்ட நாள் 25 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழுகை&oldid=3768543" இலிருந்து மீள்விக்கப்பட்டது