அழுதையாறு அணை
அழுதையாறு அணை (Azhutha Dam) என்பது இந்தியாவின் கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பீர்மேடு கிராம ஊராட்சியில் உள்ள ஆழ்தாவில் பம்பை ஆற்றின் துணை ஆறான அழுதையாற்றின் மீது கட்டப்பட்ட ஒரு சிறிய நீர் திசைதிருப்பல் அணையாகும். இந்த அணை 72 மீட்டர் (236 ) நீளமும் 14 மீட்டர் (46 ) உயரமும் கொண்ட ஒரு சிறிய பைஞ்சுதை ஈர்ப்பு அணை. இது இடுக்கி அணையின் தண்ணீரைத் திசைதிருப்பல் அணை செயல்படுகிறது.[1] இடுக்கி நீர்மின் திட்டத்திற்கான அணையாக ஆழுதையாறு அணை கட்டப்பட்டது.[2][3] 1987ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கட்டுமானம் 1991ஆம் ஆண்டில் நிறைவடைந்து அணையின் பயன்பாடு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் சூன் 1998-இல் ஓரளவு மட்டுமே நிறைவு செய்யப்பட்டது. 2007ஆம் ஆண்டு நிறைவடைந்த இந்த அணையிலிருந்து விடுவிக்கப்படும் நீர் அழுதையாற்றில் சென்று இரன்னி மற்றும் அய்ரூர் வட்டங்கள் வழியாகப் பாய்கிறது.
அழுதையாறு அணை | |
---|---|
நாடு | இந்தியா |
அமைவிடம் | இடுக்கி மாவட்டம் |
நோக்கம் | நீர்மின்சாரம் |
நிலை | செயல்பாட்டில் |
கட்டத் தொடங்கியது | 1987 |
திறந்தது | 2007 |
அணையும் வழிகாலும் | |
வகை | பைஞ்சுதை, ஈர்ப்பு |
உயரம் (அடித்தளம்) | 13.50 மீ |
நீளம் | 116.30 மீ |
இந்தத் திட்டம் பம்பா ஆற்றின் துணை ஆறான அழுதா ஆற்றின் 16.8389 கிமீ2 நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து இடுக்கி நீர்த்தேக்கத்திற்கு நீர் திருப்பி விடுகிறது. இதன் மூலம் இடுக்கி நீர்மின் திட்டத்தின் மின் திறனை 57 மெகா அலகு அதிகரிக்கிறது.[4]
விவரக்குறிப்புகள்
தொகு- அட்சரேகை: 9 0 33′ 50 "வ
- தீர்க்கரேகை: 76 0 59′30 "கி
- ஊராட்சி: பீர்மேடு
- கிராமம்: பீர்மேடு
- மாவட்டம்: இடுக்கி
- ஆற்றுப் படுகை: பம்பை
- ஆறு: அழுதையாறு
- அணையிலிருந்து ஆற்றுக்கு நீர் விடுவிப்பு: அழுதையாறு
- பயன் பெறும் பகுதிகள்: இரன்னி, அய்ரூர் வட்டங்கள்
- அணையின் பணி நிறைவு ஆண்டு: 2007
- திட்டத்தின் பெயர்: இடுக்கி நீர்மின் உற்பத்தி திட்டம்
- திட்டத்தின் நோக்கம்: நீர்மின்சாரம்
- அணை வகை: ஈர்ப்பு
- வகைப்பாடு: சிற்றணை
- அதிகபட்ச நீர் மட்டம்: 960.20 மீ
- முழு நீர்த்தேக்க நிலை: 956.00 மீ
- முழு நீர்த்தேக்க நிலைyஇல் சேமிப்பு: 0.140 Mm3
- ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்: 13.50 மீ
- நீளம்: 116.30 மீ
- நீர்க்கசிவு: மேல்நிலைப் பிரிவு
- உயர் மட்டம்: 956.00 மீ
- அணை நீர் வெளியேற்றம்: எண் 1. வட்ட வகை, 0.75 மீ
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kerala State Electricity Board Limited - Periyar Basin Hydro Projects". www.kseb.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.
- ↑ Sandrp (2018-10-04). "Role of dams in Kerala's 2018 floods". SANDRP (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
- ↑ "Kerala State Electricity Board Limited - Periyar Basin Hydro Projects". www.kseb.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
- ↑ Kannan, K. P., N. Vijayamohanan Pillai (13 January 2001). Plight of the Power Sector in India: Part I — Physical Performance of SEBs; Part II — Financial Performance of SEBs. , & 20: 130–92001 a) 234–6. Economic and Political Weekly.