அழுத்தச் சமையல்

உயர் அழுத்த நீராவியால் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பாத்திரம்

அழுத்தச் சமையல் (Pressure cooking) என்பது அழுத்தக் கலம் எனப்படும் காற்றுப் புகாதவாறு நன்கு அடைக்கபட்ட பாத்திரத்தில், உயர் அழுத்த நீராவியால் உணவை சமைக்கும் முறையாகும். இதில் உள்ள நீர் ஆவியாகி அதனால் ஏற்படும் உயர் அழுத்தம் கொதிநிலையைக் கட்டுப்படுத்துகிறது. இந்த அழுத்தத்தினால் கலத்தின் வெப்ப நிலை பெருமளவில் உயருகிறது. இதனால் உணவு மிக விரைவாக சமைக்கப்படுறது.

ஒரு அழுத்த சமையற் கலம்

அழுத்தக் கலம் பதினேழாம் நூற்றாண்டில் இயற்பியலாளர் டெனிஸ் பாபின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது பாத்திரத்தில் இருந்து காற்றை வெளியேற்றி, கொதிக்கும் நீர்மத்திலிருந்து உருவாக்கப்படும் நீராவியை அடைத்து வைப்பதன் மூலமும் செயல்படுகிறது. இந்தக் கலம் சுற்றுப்புற வளிமண்டல காற்றழுத்தத்தைவிட நீராவியின் அழுத்தத்தத்தை உயர்த்த பயன்படுகிறது. மேலும் கலத்தில் சமையலுக்காக 100–121 °C (212–250 °F) இடையிலான அதிக வெப்பநிலையை உருவாக்குகிறது. இதனால் கணிசமான அளவு எரிபொருள் சேமிக்கப்படுகிறது.

நீராவி அல்லது நீரில் சமைக்கப்படும் எந்த உணவையும் அழுத்தக் கலனில் சமைக்கலாம்.[1] அழுத்தக் கலத்தில் அதிக அழுத்தத்தைத் தாங்க நவீன அழுத்தக் கலங்களில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. சமையல் முடிந்த பிறகு, நீராவி வெளியேற்றப்பட்டு சுற்றுப்புற வளிமண்டல அழுத்தத்திற்கு இணையாக குறைக்கப்படுகிறது. இதனால் பாத்திரத்தை திறக்க முடியும். அனைத்து நவீன அழுத்தக் கலன்களிலும் அழுத்தத்தினால் கலத்தின் மூடி திறக்கப்படுவதை பாதுகாப்பு அம்சங்களால் தடுக்கப்படுகிறது.

நியூயார்க் டைம்ஸ் இதழின் படி, 1950 இல் 37% அமெரிக்க குடும்பங்கள் குறைந்தது ஒரு அழுத்தக் கலனையாவது வைத்திருந்தன. 2011 இல், அந்த விகிதம் 20% ஆகக் குறைந்தது. இதற்குக் காரணம் நுண்ணலை அடுப்பு போன்ற வேகமான சமையல் சாதனங்களின் போட்டியும், நவீன அழுத்தக் கலன்களில் வெடிப்பு என்பது மிகவும் அரிதானது என்றாலும், இந்த வீழ்ச்சியின் காரணங்களில் ஒன்றாக வெடிப்பு குறித்த அச்சமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. [2] இருப்பினும், மூன்றாம் தலைமுறை அழுத்ததக் கலன்களில் பல பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் எண்ணியல் வெப்பநிலை கட்டுப்பாடு உள்ளது. சமைக்கும் போது நீராவியை வெளியேற்றத் தேவையில்லை, அமைதியாகவும் சிறப்பானதாகவும் இருக்கும். மேலும் இந்த வசதிகள் அழுத்தக் கலன் சமையலை மீண்டும் பிரபலமாக்க உதவின. [3]

குறிப்புகள்

தொகு
  1. "Breville the Fast Slow Pro™ Instruction Booklet" (PDF). shopify.com. பார்க்கப்பட்ட நாள் 13 November 2018.
  2. "A Pot With Benefits--How the pressure cooker fell out of favor, and why it's time to bring it back". https://slate.com/human-interest/2012/02/the-pressure-cooker-makes-a-comeback.html. 
  3. "The Instant Pot Will Not Solve All of Life's Problems". The Atlantic. 8 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழுத்தச்_சமையல்&oldid=3675110" இலிருந்து மீள்விக்கப்பட்டது