அழுத்த நீர் அணு உலை
அழுத்த நீர் அணு உலைகள் (Pressurized water reactor, PWRs) மேற்கத்திய அணு மின் நிலையங்களில் பெரும்பான்மையானதும் வெப்பக்கடத்தியாக நீரைப் பயன்படுத்தும் மூன்று வகை மென்னீர் அணு உலைகளில் ஒன்றுமாகும்; மற்றவை கொதிநீர் அணு உலைகளும் (BWRs) மற்றும் உய்யமிகை நீர் அணு உலைகளும் (SCWRs) ஆகும். ஓர் அழுத்த நீர் அணு உலையில் முதன்மை வெப்பமாற்றி அல்லது குளிர்வியான (நீர்) மிகுந்த அழுத்தத்தில் அணுஉலையின் உள்ளகத்திற்கு பீய்ச்சப்பட்டு அங்கு அணுக்களின் பிளவினால் வெளிப்படும் ஆற்றலால் சூடாக்கப்படுகிறது. இவ்வாறு சூடாக்கப்பட்ட நீர் ஓர் நீராவி ஆக்கிக்கு செலுத்தப்பட்டு அங்கு வெப்ப ஆற்றல் மாற்றமடைந்து நீராவி உருவாகிறது. இந்த நீராவி சுழலி மின்னாக்கிகளில் செலுத்தப்பட்டு மின்சாரம் உண்டாக்கப்படுகிறது. கொதிநீர் அணு உலைகளைப் போலன்றி வெப்பமாற்றியாக நீர் பயன்படுத்தும்போது உயர் அழுத்தத்தில் இருப்பதால் அணுஉலையின் உள்ளகத்தில் நீர் கொதிப்பதில்லை. அனைத்து மென்னீர் அணுஉலைகளிலும் சாதாரண மென்னீர் குளிர்வியாகவும் நியூத்திரன் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
அழுத்த நீர் அணுஉலைகள் துவக்கத்தில் அணுக்கருத்திறன் நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்க வடிவமைக்கப்பட்டன; முதன்முதலாக ஷிப்பிங்போர்ட் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்டது.
ஐக்கிய அமெரிக்க நாட்டில் இயங்கும் அழுத்தநீர் அணுஉலைகள் இரண்டாம் தலைமுறை அணு உலைகள் எனக் கருதப்படுகின்றன. உருசியாவின் விவிஈஆர் அணுஉலைகளும் இவ்வாறானதே. பிரான்சு|பிரான்சின் மின்னுற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பது அழுத்த நீர் அணு உலைகளே.
வரலாறு
தொகுஅமெரிக்கா 1954 முதல் 1974 வரை அழுத்தநீர் அணு உலைகளை இயக்கி வந்தது. திரீ மைல் தீவு அணு மின் நிலையம் துவக்கத்தில் TMI-1 மற்றும் TMI-2 என பெயரிடப்பட்ட இரு அழுத்த நீர் அணு உலைகளை இயக்கி வந்தது.[1] TMI-2 அணு உலையில் 1979ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்தின் பின்னணியில் புதிய அணு உலைகளின் கட்டுமானம் ஐக்கிய அமெரிக்காவில் நிறுத்தப்பட்டது. .[2]
வடிவமைப்பு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Mosey 1990, pp.69–71
- ↑ "50 Years of Nuclear Energy" (PDF). IAEA. பார்க்கப்பட்ட நாள் 2008-12-29.
வெளியிணைப்புகள்
தொகு- Nuclear Science and Engineering at MIT OpenCourseWare.
- Document archives at the website of the United States Nuclear Regulatory Commission.
- Operating Principles of a Pressurized Water Reactor (YouTube video).