அவதானப்பட்டி மாரியம்மன் கோயில்
அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு மாரியம்மன் கோயிலாகும். இக்கோயில் தர்மபுரி-கிருட்டிணகிரி தேசிய தேசியநெடுஞ்சாலையில், அவதானப்பட்டி ஏரிக்கு அருகில், கிருட்டிணகிரி நகரின் எல்லையில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்துசமய அறநிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1]
அருள்மிகு மாரியம்மன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருஷ்ணகிரி |
அமைவிடம்: | அவதானப்பட்டி |
மக்களவைத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
கோயில் தகவல் | |
தாயார்: | மாரியம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | ஆடி மாதம் |
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலானது மூன்றுநிலை இராசகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோயிலானது மகாமண்டபம், கருவறை என அமைந்துள்ளது. கருவறையில் மாரியம்மன் சுயம்புவாக உள்ளார்.[2]
வழிபாடு
தொகுகிருட்டிணகிரியில் இருந்து வெளியூர் செல்பவர்ளில் பலர் தங்கள் வாகனத்தை இக்கோயில்முன் நிறுத்தி பயணம் நல்லவிதமாக இருக்க வணங்கிச் செல்கின்றனர். ஆடி மாதம் இக்கோயிலின் ஆண்டுவிழா நடக்கிறது. விழாவின்போது சுற்றவ்வட்டார கிராமப் பெண்களால் மாவிளக்கு ஊர்வலம் நடத்தப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் உண்டியலில் 10.88 லட்சம் காணிக்கை". செய்தி. தினமலர். 12 சனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2018.
- ↑ திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 21–24.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன்". செய்தி. தினகரன். 16 சூலை 2015. Archived from the original on 2022-03-16. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2018.