அவிகா கோர்

இந்திய நடிகை

அவிகா கோர் (Avika Gor) ஒரு தொலைக்காட்சி நடிகை மற்றும் விளம்பர மாடல் ஆவார். இவர் இமாஜின் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'ராஜ்குமார் ஆர்யன்' எனும் தொலைக்காட்சித் தொடரின் மூலம் அறிமுகமானார். மேலும், 'மெரி ஆவாஸ் கோ மில் கயி ரோஷினி', 'சல்தி கா நாம் கடி', 'கராம் அப்னா அப்னா' போன்ற தொடர்களில் சிறு வேடங்களில் நடித்தார். பின்பு, 'தேஸ்', 'பாடசாலா', 'மார்னிங் வாக்' போன்ற இந்திப் படங்களிலும் நடித்தார். 2013 ஆம் ஆண்டில் 'உய்யாலா ஜம்பாலா' என்ற தெலுங்கு படத்தில் இவர் நடித்தார்.

அவிகா கோர்
பிறப்புஜூன் 30, 1997(வயது 16)
மும்பை, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008 - தற்பொழுது வரை
சமயம்இந்து மதம்

ஆனந்தி

தொகு

தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் 1500 பாகங்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் 'பாலிக வது' என்னும் தொடரின் ஆரம்பத்தில், அதன் கதாநாயகியாக நடித்தார். குழந்தை திருமணத்தைப் பதிவு செய்யும் இத்தொடரில் 'ஆனந்தி' என்னும் கதாபாத்திரமாக இவர் நடித்திருந்தார். இத்தொடரில் இவரது நடிப்பிற்காக இவருக்கு பல விருதுகள் கிடைத்தது.

ரோலி/ரோகிணி

தொகு

கலர்ஸ் தொலைக்காட்சியின் பிரபலமான தொடர் சாசுரல் சிமர் காவில் இவர் ரோலி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். குடும்ப வாழ்க்கை முறையையும் அதன் முக்கியத்துவத்தையம் கூறும் தொடர் இது.

இத்தொடர், தமிழில் மூன்று முடிச்சு என்றும், தெலுங்கில் மூடூ முல்லு என்றும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிப்பரப்பப்படுகிறது. இதில் இவரது பெயர் ரோகிணி என மாற்றப்பட்டுள்ளது. தமிழ் பதிப்பு பாலிமர் தொலைக்காட்சியிலும், தெலுங்குப் பதிப்பு "மா கோல்ட் தொலைக்காட்சி" இலும் ஒளிப்பரப்பப்படுகிறது.

உய்யாலா ஜம்பாலா

தொகு

2013ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'உய்யாலா ஜம்பாலா' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. "சின்னரி பெல்லி கூத்துரு" மூலம் இவர் ஆந்திர ரசிகர்களுக்கு முன்பே அறிமுகமாயிருந்தார். அதனால், இவரை ஆனந்தி என்றே அறிமுகப்படுத்தினர்.

நடித்த திரைப்படங்கள்

தொகு
  • 2009 - மார்னிங் வாக் - கார்கி - இந்தி
  • 2010 - பாடசாலா - அவிகா - இந்தி
  • 2012 - தேஸ் - பியா - இந்தி
  • 2013 - உய்யாலா ஜம்பாலா - உமா தேவி - தெலுங்கு

தொலைக்காட்சித் தொடர்கள்

தொகு
வருடம் தொடர் கதாபாத்திரம் மொழி
2008-2010 பாலிக வது ஆனந்தி ஜகதீஷ் சிங் இந்தி
2010 "கிச்சன் சாம்பியன்" விளையாட்டுப் போட்டி இந்தி
2011-தற்பொழுது வரை "சாசுரல் சிமர் கா" ரோலி சித்தாந்த் பரத்வாஜ் இந்தி
2011-2013 "சின்னரி பெல்லி கூத்துரு" ஆனந்தி தெலுங்கு
2012 "ஜலக் திக்லா ஜா(பருவம்-5)" விளையாட்டுப் போட்டி இந்தி
2012-தற்பொழுது வரை "மூன்று முடிச்சு" ரோகிணி சித்தார்த் பரத்வாஜ் தமிழ்

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிகா_கோர்&oldid=3754591" இலிருந்து மீள்விக்கப்பட்டது