அவிந்தர் சிங் பிரார்

இந்திய முன்னாள் நீச்சல் வீரர்

அவிந்தர் சிங் பிரார் (Avinder Singh Brar) என்பவர் ஓர் இந்திய முன்னாள் நீச்சல் வீரர் ஆவார். முசோரியிலுள்ள புனித சியார்ச்சு கல்லூரியிலும் தில்லியிலுள்ள புனித சிடீபன் கல்லூரியிலும் இவர் கல்வி கற்றுள்ளார். நீச்சலில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்கும் விளையாட்டு வீர்ரான இவர் 100 மீட்டர் மார்பு நீச்சலில் தேசிய சாதனை படைத்திருக்கிறார். புதுதில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் போட்டி பிரிவுகளை முன்னின்று சிறப்பாக நடத்திக் கொடுத்தமைக்காக இவருக்கு ஆசிய சோதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு அவிந்தர் சிங் பிராருக்கு பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டது.

அவிந்தர் சிங் பிரார் இந்தியக் காவல் பணியில் ஓர் அதிகாரியாக இருந்தார், இவருடைய மனைவி சுக்தீப் ஓர் ஆட்சிப் பணியாளர் ஆவார். மூன்று வயதில் ஒரு மகனும் ஒரு வயதில் ஒரு மகளும் அப்போது இவருக்கு இருந்தனர். இவர் 1987 ஆம் ஆண்டில் இந்தியாவின் பஞ்சாபில் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் சிலரால் கொல்லப்பட்ட்டார். மரணத்தின் போது இவர் பாட்டியாலாவின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தார் [1].

மேற்கோள்கள்

தொகு

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிந்தர்_சிங்_பிரார்&oldid=2960164" இலிருந்து மீள்விக்கப்பட்டது