அவுட்பிரேக் (திரைப்படம்)
அவுட்பிரேக் (Outbreak)என்பது 1995 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மருத்துவ பேரழிவு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஓல்ஃப்காங் பீட்டர்சன் இயக்கினார். ரிச்சர்ட் பிரஸ்டன் எழுதிய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட த ஹாட் சோன் என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது.[1] இந்த திரைப்படத்தில் டஸ்டின் ஹாஃப்மான், ரீன் ரூஸோ, மார்கன் ஃப்ரீமன் மற்றும் டொனால்ட் சதர்லேண்ட் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் துணை நடிகர்களாக கியூபா குட்டிங் ஜூனியர், கெவின் ஸ்பேசி மற்றும் பேட்ரிக் டெம்ப்சேய் ஆகியோர் நடித்திருந்தனர்.
அவுட்பிரேக் | |
---|---|
இயக்கம் | ஒல்ஃப்காங் பீட்டர்சன் |
தயாரிப்பு |
|
திரைக்கதை |
|
இசை | ஜேம்ஸ் நியூட்டன் ஹோவர்ட் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | மைக்கேல் பல்லவுஸ் |
படத்தொகுப்பு |
|
கலையகம் | பன்ச் புரோடக்சன்ஸ், இன்க். |
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | மார்ச்சு 10, 1995(ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 2:08 மணி நேரம் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$50 மில்லியன் (₹357.6 கோடி) |
மொத்த வருவாய் | ஐஅ$189.8 மில்லியன் (₹1,357.4 கோடி) |
இந்த திரைப்படம் 1995 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி வெளியானது. வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் நடித்த ஸ்பேசி தனது நடிப்பிற்காக 2 விருதுகளை பெற்றார். இந்த திரைப்படம் வெளியான போது உண்மையிலேயே எபோலா வைரஸ் சைரே என்ற இடத்தில் தாக்கிக் கொண்டிருந்தது.[2]
கதைச்சுருக்கம்
தொகு1967 ஆம் ஆண்டு கிசாங்கனி கிளர்ச்சியின் போது மொடாபா என்ற ஒரு வைரஸ் ஆப்பிரிக்கா காட்டில் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆளைக் கொல்லக்கூடிய காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய வைரஸாக அது உள்ளது. இந்த வைரஸை ஒரு ரகசியமாக வைத்திருக்க ஐக்கிய அமெரிக்க ராணுவ அதிகாரிகளான டொனால்ட் மெக்லின்டோக் மற்றும் பில்லி போர்டு ஆகியோர் ராணுவ வீரர்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட முகாமை அழிக்கின்றனர்.
28 வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க அரசை சேர்ந்த வைரஸ் நிபுணரான கர்னல் சாம் டேனியல்ஸ் சைரேவில் உருவான நோய் பரவலை விசாரிக்க அனுப்பப்படுகிறார். அவரும் லியூட்டனன்ட் கர்னல் கேசி சுலர் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட மேஜர் சால்ட் ஆகிய அவரது குழுவினரும் செய்திகளை சேகரித்துக் கொண்டு ஐக்கிய அமெரிக்காவிற்கு திரும்புகின்றனர். போர்டு தற்போது பிரிகேடியர் ஜெனரலாக டேனியலின் உயர் அதிகாரியாக உள்ளார். அவர் வைரஸ் பரவலாம் என்ற பயங்களைப் புறம் தள்ளுகிறார்.
இந்த வைரஸை உடலில் கொண்டிருக்கக்கூடிய பெட்ஸி என்கிற ஒரு வெண்தலை கேபுசின் குரங்கானது நாட்டிற்குள் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு வரப்படுகிறது. விலங்குகளை சோதிக்கக்கூடிய ஆய்வகத்தில் பணி புரியும் ஜேம்ஸ் ஜிம்போ ஸ்காட் என்கிற பணியாளர் கறுப்புச் சந்தையில் விற்பதற்காக பெட்ஸியை கடத்தும் போது அந்த வைரசால் பாதிக்கப்படுகிறார். கலிபோர்னியாவின் கடற்கரை கிராமமான செடர் கிரீக்குக்கு அருகிலுள்ள செல்லப் பிராணிகளை விற்கும் கடை உரிமையாளரான ரூடி அல்வரேசுக்கு ஜிம்போ பெட்ஸியை விற்கும் முயற்சியில் தோல்வி அடைகிறார். இதனிடையில் ரூடியும் அந்த வைரஸால் பாதிக்கப்படுகிறார். பலிசடேஸ் என்ற இடத்திற்கு அருகில் உள்ள காட்டில் இந்த குரங்கை ஜிம்போ விட்டுவிடுகிறார். பாஸ்டனுக்கு ஒரு விமானத்தில் பறந்து செல்லும்போது அவருக்கு நோய் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன. அவரது பெண் நண்பி அலைசுக்கும் நோய்த்தொற்று ஏற்படுகிறது. இவர்களது உடல் நிலையை டேனியல்ஸின் முன்னாள் மனைவியும் சிடிசி விஞ்ஞானியுமான டாக்டர் ராபர்ட்டா கியோக்கால் விசாரிக்கப்படுகிறது. ஜிம்போ, அலைஸ் மற்றும் ரூடி ஆகியோர் இறந்துவிடுகின்றனர். ஆனால் பாஸ்டனில் வேறு யாரும் இந்த நோயால் பாதிக்கப்பட கூடாது என்பதில் கியோக் உறுதியாக இருக்கிறார்.
ரூடியின் ரத்த மாதிரியை தவறுதலாக உடைக்கும் போது செடார் கிரீக்கில் உள்ள ஒரு மருத்துவ பணியாளருக்கும் இந்த நோய் பரவுகிறது. இன்ஃப்ளூயன்சா போல வேகமாக பரவக் கூடிய அளவிற்கு இந்த வைரஸ் சீக்கிரமே சடுதி மாற்றம் அடைகிறது. காற்றின் மூலம் பரவக்கூடியதாக மாறுகிறது. ஒரு திரையரங்கத்தில் பலருக்கு பரவுகிறது. போர்டின் ஆணைக்கு எதிராக செடார் கிரீக்குக்கு பறக்கும் டேனியல்ஸ் அங்குள்ள கியோக்கின் குழுவினர், சுலர் மற்றும் சால்ட் உடன் இணைகிறார். அவர்கள் அந்த குரங்கை தேடும் நேரத்தில் இராணுவமானது பட்டணத்தை தனிமைப்படுத்தி ஊரடங்கு விதிக்கிறது. சுலரின் பாதுகாப்பு உடை கிழியும் போது அவர் இந்த நோயால் தாக்கப் படுகிறார். அவருக்கு மருத்துவம் பார்க்கும் பொழுது நோய்த் தொற்றுள்ள ஊசியை கியோக் விபத்தாக குத்திக் கொள்கிறார்.
இந்த நோயை குணப்படுத்தும் ஒரு பரிசோதனை சீரத்தை போர்டு கொடுக்கும்போது இந்த நோய் பரவலுக்கு முன்னரே இந்த வைரஸை பற்றி அவருக்குத் தெரியும் என டேனியல்ஸ் உணர்கிறார். ஆபரேஷன் கிலீன் ஸ்வீப் பற்றி டேனியல்சுக்கு தெரியவருகிறது. அது வைரசை கட்டுப்படுத்துவதற்காக செடார் கிரீக் கிராமத்தை குண்டு போட்டு அழிக்கும் ஒரு ராணுவ திட்டமாகும். இவ்வாறு அந்த பட்டணத்தையும் அங்கு வாழும் மக்களையும் கொல்வதன் மூலம் மொடாபா வைரஸ் கொள்ளை நோயாக மாறுவதைத் தடுக்க அவர்கள் முடிவு செய்கின்றனர். எனினும் தற்போது ஒரு மேஜர் ஜெனரலாக இருக்கக்கூடிய மெக்லின்டாக் இந்த திட்டத்தின் மூலம் வைரஸ் இருப்பதை மறைத்து அதை ஒரு உயிரி ஆயுதமாக பயன்படுத்துவதற்கு அதை பாதுகாத்து வைக்க திட்டமிடுகிறார்.
டேனியல்ஸ் ஒரு நிவாரணி கண்டுபிடிப்பதை தடுப்பதற்காக அவரை வைரஸ் உடன் இருப்பதற்காக கைது செய்ய மெக்லின்டாக் ஆணையிடுகிறார். டேனியல்ஸ் தப்பிக்கிறார். கடலில் பெட்ஸியை கொண்டுவந்த ஒரு கப்பலுக்கு ஹெலிகாப்டர் மூலம் டேனியல் மற்றும் சால்ட் பறக்கின்றனர். டேனியல்ஸ் பெட்ஸியின் ஒரு படத்தை பெற்று ஊடகங்களுக்கு அதை அனுப்புகிறார். பலிசடேஸின் வாசியான ஜெப்ரீஸ் என்ற பெண்மணி தனது மகள் கேத் பெட்ஸியுடன் தன் வீட்டு தோட்டத்தில் விளையாடுவதை காண்கிறார். சிடிசிக்கு தகவல் அனுப்புகிறார். டேனியல்ஸ் மற்றும் சால்ட் ஜெப்ரீஸின் வீட்டிற்கு வருகின்றனர். அருகிலுள்ள மரப் பகுதிகளுக்குள் குரங்கை மறைத்து வைத்திருக்கும் கேத்திடமிருந்து குரங்கு மீது மயக்க ஊசி செலுத்தி சால்ட் அதனை பிடிக்கிறார். பெட்ஸி பிடிக்கப்பட்டதை டேனியல்ஸ் மூலம் அறிந்த போர்டு குண்டு போடுவதை தாமதிக்கிறார்.
திரும்பிவரும் டேனியல்ஸ் மற்றும் சால்ட் ஆகியோர் மெக்லின்டோக்கால் மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் துரத்தப்படுகின்றனர். தாங்கள் விபத்தின் மூலம் இறந்ததாக மெக்லின்டோக்கை நம்ப வைக்க சால்ட் 2 ராக்கெட்டுகளை மரங்கள் இருக்கும் பகுதிக்குள் வெடிக்கவைக்கிறார். செடர் கிரீக்குக்கு திரும்பியவுடன் சால்ட் பெட்ஸியின் ஆண்டிபாடிகளையும் போர்டின் சீரத்தையும் கலந்து ஒரு ஆண்டி சீரத்தை தயாரிக்கிறார். சுலர் இறந்துவிட்ட போதிலும் கியோக்கை அவர்கள் காப்பாற்றுகின்றனர். மெக்லின்டோக் தனது தளத்திற்கு திரும்புகிறார். ஆபரேஷன் கிலீன் ஸ்வீப்பை மீண்டும் தொடர்கிறார். போர்டின் பேச்சை கேட்க மறுக்கிறார். குண்டு போடும் விமானம் அதன் இலக்கை நோக்கி செல்லும் வழியில் டேனியல்ஸ் மற்றும் சால்ட் ஆகியோர் தங்களது ஹெலிகாப்டரை அதற்கு நேராக பறக்க விடுகின்றனர்.
போர்டின் உதவியுடன் குண்டு போடும் விமானத்தின் குழுவினரை குண்டுகளை நீர்ப்பரப்பின் மீது வெடிக்கச் செய்யுமாறு டேனியல்ஸ் செய்கிறார். பட்டணம் காக்கப்படுகிறது. மற்றொரு குண்டு போடும் ஆணையை பிறப்பிற்கு முன்னரே மெக்லின்டோக்கை அப்பொறுப்பில் இருந்து போர்டு விடுவிக்கிறார். அவரை கைது செய்ய ஆணையிடுகிறார். செடார் கிரீக்கின் வாசிகள் குணப்படுத்தப்படுத்தப்படுகின்றனர்.
உசாத்துணை
தொகு- ↑ Walton, Priscilla L. (2004). Our Cannibals, Ourselves. University of Illinois Press. p. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-252-02925-7.
- ↑ "Update: Outbreak of Ebola Viral Hemorrhagic Fever – Zaire, 1995". Morbidity and Mortality Weekly Report 44 (20): 399. May 26, 1995. https://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/00037149.htm. பார்த்த நாள்: January 29, 2015.
வெளி இணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அவுட்பிரேக் (திரைப்படம்)
- டி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் அவுட்பிரேக் (திரைப்படம்)
- ஆல்மூவியில் அவுட்பிரேக்
- Outbreak at Box Office Mojo
- அழுகிய தக்காளிகளில் அவுட்பிரேக் (திரைப்படம்)