அஷ்டிம்கி

நேபாள மக்களின் கலாச்சார விழா

அஷ்டிம்கி (Ashtimki) என்பது கிருஷ்ண ஜெயந்தி நாளில் நேபாளத்தின் மேற்குப் பிராந்தியத்தில் கொண்டாடப்படும் தாரு மக்களின் கலாச்சார விழாவாகும்.[1] திருவிழாவின் போது, தாரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அஷ்டிம்கி ஓவியம் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு கலைப்படைப்பை உருவாக்குகிறார்கள். கிராமத்தின் மூத்தத் தலைவரின் வீட்டின் அறையின் இந்த ஓவியம் வரையப்படுகிறது. ஓவியக் கலை பிரபஞ்சத்தின் உருவாக்கத்துடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது.[2]

அஷ்டிம்கி
கடைபிடிப்போர்தாரு மக்கள்
வகைஇந்து
முக்கியத்துவம்இந்துக் கடவுளான கிருட்டிணனின் பிறந்த நாள்
கொண்டாட்டங்கள்பாடுதல், நடனமாடுதல், நோன்பு இருத்தல்
கிருஷ்ண ஜெயந்தி அன்று தாரு சமூகத்தால் வரையப்பட்ட ஒரு பானை ஓவியம்

சொற்பிறப்பியல்

தொகு

அஷ்டிம்கி என்ற சொல் அட்டமி மற்றும் திகா என்ற இரண்டு சொற்களிலிருந்து உருவானது. அட்டமி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். மேலும் திருமாலின் அவதாரமான கண்ணன் அட்டமி நாளில் அவதரித்ததால் இந்நாள் ஜென்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. மேலும் திகா என்பது பொதுவாக நெற்றியில் அணியும் திலகம் ஆகும்.[3]

கொண்டாட்டங்கள்

தொகு

தாரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த திருவிழாவில் நாள் முழுவதும் நோன்பு இருப்பர்.[4] அவர்கள் அதிகாலையிலேயே எழுந்து சில உணவுகளை சாப்பிட்டுவிட்டு விரதத்திற்கு தயாராவார்கள்.[5] மாலையில், ஆற்றிலோ அல்லது கிணற்றில் குளிக்கிறார்கள். பின்னர் அவர்கள் மகதாவா எனப்படும் கிராமத்தின் மூத்தவர் வீட்டில் கூடி மத சடங்குகளைச் செய்கிறார்கள். மகதவாவின் வீட்டில் பாடலைப் பாடிக் கொண்டு சுவரில் வரையப்பட்டுள்ள அஷ்டிமகி ஓவியம் அனைவராலும் வணங்கப்படுகிறது.

அடுத்த நாள், அஷ்டிம்கியின் இரண்டாவது நாளில், மக்கள் காலையில் எழுந்து, முந்தைய நாள் வணங்கப்பட்ட கிராமத்தின் மூப்பரின் வீட்டிற்குச் சென்று, வழிபாட்டுப் பொருட்களை எடுத்து அருகிலுள்ள ஆற்றில் அப்புறப்படுத்துவார்கள். வழிபாட்டுப் பொருட்கள் ஆற்றில் விடப்பட்ட பிறகு, அவர்களின் நோன்பு நிறைவடைகிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. About Ashthimki
  2. Tribhuvan University. "Ashtimkias the Site for the Performance of Tharu Identity" (PDF).
  3. "थारू समुदायमा अष्टिम्की अनुष्ठान". थारू समुदायमा अष्टिम्की अनुष्ठान (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  4. "Ashtimki, an Ancient Form of Tharu Wall Painting". ECS NEPAL (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
  5. "Ritual of Ashtimki in Tharu community". Paschim Press (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-09-06. பார்க்கப்பட்ட நாள் 2023-11-27.
  6. "यसरी मनाइन्छ थारु समुदायमा कृष्ण जन्माष्टमी अर्थात अष्टिम्की (फोटो फिचर)". Online Khabar (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்டிம்கி&oldid=4090257" இலிருந்து மீள்விக்கப்பட்டது