அஷ்டிம்கி ஓவியம்

அஷ்டிம்கி ஓவியம் (Ashtimki Chitra) என்பது நேபாளத்தின் மேற்கு பிராந்தியத்தில் தாரு சமூகத்தால் கொண்டாடப்படும் அஷ்டிம்கி திருவிழா நாளில் வரையப்படும் ஒரு வகை ஓவியம் ஆகும்.[1][2]

கிருஷ்ண ஜெயந்தி அன்று தாரு சமூகத்தால் வரையப்பட்ட ஒரு பானை ஓவியம்

முக்கியத்துவம்

தொகு

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட வண்ணங்களைப் பயன்படுத்தி வீட்டின் சுவரில் ஓவியம் வரையப்படுகிறது. இது ஓவியத்தை தனித்துவமாகவும் அழகாகவும் ஆக்குகிறது. இது கிருட்டிணனின் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி அன்று தாரு சமூகத்தில் மகதாவா எனப்படும் மூத்தத் தலைவரின் வீட்டில் வரையப்படுகிறது.[3]

சிவப்பு களிமண் (சிவப்பு பீன் இலைகள்) மற்றும் எரிந்த காட்டு புல் (கருப்பு) ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரிக்கப்படுகின்றன.[4]

அடையாளம்

தொகு

ஓவியம் படிவளர்ச்சிக் கதையைச் சித்தரிக்கிறது.[5] கிருட்டிணன், கடம்ப மரம், ஒரு படகு, மீன், நண்டுகள், ஆமை, குரங்குகள் மற்றும் பிற விலங்குகள், பத்து தலைகளைக் கொண்ட இராவணன் பாண்டவர், திரௌபதி, சூரியன் மற்றும் சந்திரன் போன்ற அம்சங்கள் முக்கியமாக இடம் பெறுகின்றன. சமீப காலமாக, கலைஞர்கள் ஓவியத்தில் மற்ற விலங்குகளையும் சேர்த்து வருகின்றனர். இந்த கதாபாத்திரங்கள் அஷ்டிம்கி திருவிழாவின் சடங்கு விழாவாக ஓவியத்தில் திலகமும் குறிக்கப்படுகின்றன.[6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. About Ashthimki and Ashtimki Picture, The Rising Nepal
  2. "Ashtimki, an Ancient Form of Tharu Wall Painting". ECS NEPAL (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-28.
  3. "यसरी मनाइन्छ थारु समुदायमा कृष्ण जन्माष्टमी अर्थात अष्टिम्की (फोटो फिचर)". Online Khabar (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  4. Chaudhary, Sanjib (2023-09-05). "Ashtimki". Ask Me About Nepal (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-28.
  5. "अष्टिम्कीको अन्तर्य". The Annapurna Post. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  6. "थारू समुदायमा अष्टिम्की अनुष्ठान". थारू समुदायमा अष्टिम्की अनुष्ठान (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்டிம்கி_ஓவியம்&oldid=4090241" இலிருந்து மீள்விக்கப்பட்டது