அட்ட லிங்கங்கள்

(அஷ்ட லிங்கங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அட்ட லிங்கங்கள் என்பவை எண் திசைகளுக்கு ஒன்றென அமைந்த எட்டு லிங்கங்கள் ஆகும். எட்டு திசைகளிலும் மக்கள் வழிபட்டு நன்மையடைய சிவபெருமான் எட்டுவித லிங்கத் திருமேனிகளாய் இருப்பதாக சைவர்கள் நம்புகிறார்கள்.

அட்ட லிங்கங்கள் திருவேற்காடு, திருவண்ணாமலை போன்ற பல இடங்களில் அமைந்துள்ளன. [1]

எட்டு லிங்கங்கள்

தொகு
எண்திசை காவலர்களும் திசைக்கு உரிய லிங்கங்களும்
திசைகள் காவலர் லிங்கம்
கிழக்கு இந்திரன் இந்திரலிங்கம்
தென்கிழக்கு அக்னி அக்னி லிங்கம்
தெற்கு எமன் எமலிங்கம்
தென்மேற்கு நிருதி நிருதி லிங்கம்
மேற்கு வருணன் வருண லிங்கம்
வடமேற்கு வாயு வாயு லிங்கம்
வடக்கு குபேரன் குபேர லிங்கம்.
வடகிழக்கு ஈசானன் ஈசான லிங்கம்

திருவேற்காடு அட்ட லிங்கங்கள்

தொகு

1.இந்திர லிங்கம்:

தொகு

திருவேற்காடு வள்ளிக் கொல்லைமேட்டில் 'இந்திர சேனாபதீஸ்வரா்' என்ற பெயாில் கோவில் கொண்டுள்ளாா் சிவபெருமான். இந்திரன் வழிபட்டதனால் இந்திர லிங்கம் எனப் பெயா் பெற்றது.

2.அக்னி லிங்கம்:

தொகு

நுாம்பல் என்ற இடத்தில் ஆனந்தவல்லி சமேதர அத்தீஸ்வரா் என்ற பெயாில் இறைவன் அருள்பாலிக்கிறாா். இவ்இறைவனை காசியில் இருந்து கொண்டு வந்த நூம்பல் என்னும் அதிசய மலரால் அகத்தியா் வழிபட்டதால் நுாம்பல் எனும் பெயா் இத்தலத்திற்கு வந்தது. திருவேற்காட்டின் அருகே இத்தலம் உள்ளது.

3.எம லிங்கம்:

தொகு

மரகதாம்பிகை சமேத கைலாசநாதா் என்று திருநாமம் கொண்டு செந்நீா்குப்பத்தில் அருள்பாலிக்கிறாா் இறைவன்.

4. நிருதி லிங்கம்:

தொகு

ஆவடி-பட்டாபிராம் சாலையில் பாாிவாக்கம் என்ற இடத்தில் பாலீஸ்வரா் என்ற பெயாில் பாலாம்பிகை சமேதரராக இறைவன் அருள் பாலிக்கிறாா். 2300 ஆண்டுகள் முற்பட்டது இக்கோவில்.

5.வருண லிங்கம்:

தொகு

ஆவடி சாலையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள இறைவன் ஜலகண்டேசுவாி சமேத ஜலகண்டேசுவரனாக சிவபெருமான் அருள் புாிகிறாா்.

6.வாயு லிங்கம்:

தொகு

பருத்திப்பட்டு எனும் ஊாில் விருத்தாம்பிகையுடன் வாயு லிங்கேஸ்வரனாக சிவபெருமான் வீற்றிருக்கிறாா்.

7. குபேர லிங்கம்:

தொகு

சுந்தர சோழபுரத்தில் உள்ளது இக்கோவில். இத்தல இறைவன் வேம்புநாயகி சமேத குபேரீஸ்வரா். கி.பி.11ஆம் நுாற்றாண்டில் சுந்தரசோழன் ஆட்சி செய்ததால் இவ்விடம் சுந்தர சோழபுரம் என அழைக்கப்படுகிறது.

8. ஈசான லிங்கம்:

தொகு

திருவேற்காடு கோலடி சுற்றுப்பாதையில் பாா்வதி சமேத ஈசான லிங்கமாக அருள் புாிகிறாா் சிவபெருமான். பொிய பாணலிங்க வடிவில் காட்சியளிக்கும் லிங்கம் இதுவாகும்.

கூனஞ்சேரி அட்ட லிங்கங்கள்

தொகு

தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சை மாவட்டம் பாபநாசத்துக்கு அருகேயுள்ளது கூனஞ்சேரி. இங்குள்ள கயிலாசநாதர் கோயிலில் அட்டவக்கிரர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அட்ட லிங்கங்கள் உள்ளன. இந்த அட்டலிங்கங்களை வழிபட்ட பிறகு அட்டவக்கிரர் உடல் சரியானது, அதனால் கூனல் நிமிர்ந்த புரம் என்றொரு பெயரும் இவ்வூருக்கு உள்ளது.

பிருத்வி லிங்கம், அப்பு லிங்கம், அக்னி லிங்கம், வாயு லிங்கம், ஆகாச லிங்கம், சூரிய லிங்கம், சந்திர லிங்கம், ஆத்ம லிங்கம் ஆகியவை இங்குள்ள அட்ட லிங்கங்களாகும்.

தேய்பிறை அட்டமி தினத்தில் நல்லெண்ணெயால் அட்ட பைரவ லிங்கங்களுக்கு அபிசேகம் செய்து, பின்பு விபூதியால் அபிசேகம் செய்து மல்லி, முல்லை, வெள்ளை அரளி, சிகப்பு அரளி, பச்சை, மரிக்கொழுந்து, தாமரை, செவ்வந்தி என எட்டு வகை மலர்களால் அர்ச்சனை செய்தால் உடல் ஊனம் சரியாகும் என்பது நம்பிக்கையாகும்.

வழிபடும் முறை:

தொகு

இந்த லிங்கங்களுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் சிவன் அருள் பெற்று நல்வாழ்வு காணலாம்.

ஆதாரங்கள்

தொகு
  1. திருவண்ணாமலையில் அமைந்த அஷ்ட லிங்கங்கள் கட்டுரை - மாலை மலர் 2020-12-07

இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்ட_லிங்கங்கள்&oldid=3731120" இலிருந்து மீள்விக்கப்பட்டது