அஸ்கோ பார்ப்போலா
அஸ்கோ ("அசோகன்") பார்ப்போலா (பி. 1941) பின்லாந்து நாட்டு எல்சிங்கி பல்கலைக்கழகத்தின் ஆசிய, ஆப்பிரிக்கப் படிப்புகளுக்கான நிலையத்தில் இந்தியவியல் துறைப் பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்றவர். எல்சிங்கியில் நடைபெற்ற (14-19 சூலை, 2003) 12-வது உலக சமசுக்கிருத மாநாட்டிற்குத் தலைவராக இருந்தவர்.[1] 2009-ஆம் ஆண்டிற்கான “கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை” பார்ப்போலாவிற்கு உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது வழங்கி கெளரவித்தது.[2] 2015-ல் இந்திய அரசின் ஜனாதிபதி விருதின் சமஸ்கிருத கொரவச் சான்றிதழ் இவருக்கு வழங்கப்பட்டது.[3]
அஸ்கோ பார்ப்போலா | |
---|---|
![]() 2010 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பார்ப்போலா | |
பிறப்பு | 12 சூலை 1941 (அகவை 83) Forssa |
பணி | மொழிபெயர்ப்பாளர் |
வேலை வழங்குபவர் | |
விருதுகள் | Knight First Class of the Order of the White Rose of Finland, Commander of the Order of the Lion of Finland |
சாம வேதத்தில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்துள்ள பார்ப்போலா, கேரளாவில் பான்சால் என்ற இடத்திலுள்ள ஒரு புகழ்பெற்ற நம்பூதிரி அறிஞரிடன் சாம வேதத்தைக் கற்றறிந்தார். சமக்கிருதத்திலும் (குறிப்பாக வேதிய சமக்கிருதம்) சிந்து சமவெளி நாகரிகத்திலும் வல்லுநரான பார்ப்போலாவின் இரண்டு தொகுதிகளடங்கிய சிந்து வரிவடிவமும் சமயமும் / முத்திரைகள் மற்றும் (கல்வெட்டு) எழுதுகைகளின் திரட்டு சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உள்ளதொரு தரமான தொகுப்பு;[4]
பார்ப்போலாவின் ஆராய்ச்சிகள்
தொகு- சிந்து நாகரிகம்: சிந்து வரிவடிவம் & சமயம் / முத்திரைகள் மற்றும் (கல்வெட்டு) எழுதுகைகளின் திரட்டு
- வேதம்: வேதச் சடங்குகள் / சாமவேத, ஜைமினியவேத உரைகள், சடங்குகள் / பூர்வ மீமாம்சம்
- தெற்காசிய மதங்கள்: இந்துமதம் / சைவ, சத்தி பரபுகள் (சாக்த மரபுகள்) / துர்கை
- தென்னிந்தியா: கேரளா / தமிழ்நாடு / கர்நாடகா
- சமக்கிருதம் / மலையாளம் / தமிழ் / இந்திய மொழிகளின் முன்வரலாறு
- தெற்காசியாவின் வரலாற்று-முற்காலத் தொல்பொருளியல் / ஆரியர்களின் வருகை [5]
குறிப்புதவி
தொகு- ↑ Asko Parpolo Homepage அசுக்கோ பார்ப்போலாவின் வலைத்தளாம்
- ↑ தினமணி ஏப்ரல் 04, 2010 - தமிழகம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Presidential Award of Certificate". Government of India, Ministry of Human Resource Development. 2016-08-22. Retrieved 2018-08-25.
- ↑ "The Hindu, March 4, 2008 Excerpts of the Interview". Archived from the original on அக்டோபர் 1, 2009. Retrieved ஏப்ரல் 7, 2010.
- ↑ Asko Parpola Homepage