அஸ்மான் கர் அரண்மனை

அஸ்மான் கர் அரண்மனை (Asman Garh Palace) என்பது இந்தியாவின் தெலங்காணாவின் ஐதராபாத்து நகரில் அமைந்துள்ள ஒரு அரண்மனையாகும். அஸ்மான் என்றால் "வானம்" என்றும், கர் என்பதற்கு "வீடு" என்றும் பொருள். இந்த கட்டிடம் ஒரு இடைக்கால ஐரோப்பிய கோட்டை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை ஒரு மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.[1]

அஸ்மான் கர் அரண்மனை
Map
பொதுவான தகவல்கள்
வகைதங்குமிடம்
கட்டிடக்கலை பாணிகோதிக் கட்டிடக்கலை பாணி
இடம்ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
தற்போதைய குடியிருப்பாளர்புனித சூசையப்பர் பொதுப் பள்ளி
நிறைவுற்றது1885

இதனைச் சுற்றியுள்ள காட்டில் வேட்டையாடிய ஐதராபாத் நிசாம், இந்த அரண்மனையில் தங்க ஆரம்பித்தார். பின்னர், இந்த அரண்மனை தொல்பொருள் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. அதன் பிறகு அனாதை இல்லமாக மாற்றப்பட்ட இது தற்போது ஒரு பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது (புனித சூசையப்பர் பொதுப் பள்ளி, அஸ்மான் கர் அரண்மனை கிளை). மலக்பேட்டையில் உள்ள தொலைக்காட்சிக் கோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள அரண்மனை 1885 ஆம் ஆண்டில் பைகா வம்ச பிரபுவான சர் அஸ்மான் ஜா பஷீர்-உத்-தௌலா என்பவரால் கட்டப்பட்டது.

வடிவமைப்பு

தொகு

இது கோதிக் கட்டிடக்கலை அடிப்படையில் அமைந்துள்ளது. மேலும், இது ஒரு ஐரோப்பிய இடைக்கால கோட்டையின் வடிவத்தில் உள்ளது. அஸ்மான் கர் அரண்மனையின் கருங்கல் கோபுரங்களும் வளைந்த சாரளங்களும் தனித்து நிற்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. The Hindu, Hyderabad (21 January 2004). "Castle of dreams". K. Venkateshwarlu. https://www.thehindu.com/mp/2004/01/21/stories/2004012100750300.htm. பார்த்த நாள்: 30 December 2018. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்மான்_கர்_அரண்மனை&oldid=3607676" இலிருந்து மீள்விக்கப்பட்டது