அஹ்மதுல்லா ஷா

மௌலவி அஹ்மதுல்லா ஷா (Ahmadullah Shah) (1787 - 5 ஜூன் 1858 பைசாபாத்தின் மௌலவி என புகழ்பெற்றவர் ) 1857 ஆம் ஆண்டு இந்திய கிளர்ச்சியின் தலைவராக இருந்தார். அவத் பிராந்தியத்தில் கிளர்ச்சியின் கலங்கரை விளக்கமாக அறியப்பட்டார்.[1]

அஹ்மதுல்லா ஷா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1787
இறப்பு05-06-1858
பாவன்,உத்தரப்பிரதேசம், இந்தியா
வேலைஇஸ்லாமிய அறிஞர், இந்திய சுதந்திர ஆர்வலர்

ஜார்ஜ் புரூஸ் மல்லேசன் மற்றும் தாமஸ் சீடன் போன்ற பிரித்தானிய அதிகாரிகள் அஹ்மதுல்லாவின் தைரியம், வீரம், தனிப்பட்ட மற்றும் நிறுவன திறன்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.[2][3]

ஜி. பி. மல்லேசன் 1857 ஆம் ஆண்டின் இந்தியக் கிளர்ச்சியைப் பற்றி 6 தொகுதிகளாக எழுதிய தொகுப்பில் அஹ்மதுல்லா ஷாவின் செயல்களையும் திட்டங்களையும் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.

தாமஸ் சீடன் அஹ்மதுல்லா ஷாவை பற்றி விவரிக்கும்பொழுது;
சிறந்த திறன்களைக் கொண்ட மனிதர், பயமில்லாத தைரியம், கடுமையான உறுதிப்பாடு மற்றும் கிளர்ச்சியாளர்களிடையே மிகச் சிறந்த சிப்பாய்.
- தாமஸ் சீடன்[4]

அஹ்மதுல்லா ஷா இஸ்லாத்தினை பின்பற்றும் முஸ்லீமாகவும், மத ஒற்றுமையை பேனக்கூடியராகவும் இருந்தார். 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியில், நானா சாஹிப் மற்றும் கான் பகதூர் கான் போன்றோர் இவருடன் இணைந்து போராடினார்கள்.[5]

ஆங்கிலேயர்களால் ஒருபோதும் மௌலவியை உயிருடன் பிடிக்க முடியவில்லை. அவரைப் பிடிக்க 50,000 ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டது. கடைசியில் பாவன் சிற்றரசின் ராஜா ஜகந்நாத் சிங் வஞ்சகமாக விருந்துக்கு அழைத்தது தெரியாமல் வந்த மௌலவியைக் கோட்டைக்குள் யானையுடன் நுழைந்தவுடன் கதவுகள் சாத்தப்பட்டன. வஞ்சகத்தினை உணர்ந்து வெளியேற எத்தணிக்கும் முன்பே ராஜா ஜகந்நாத் சிங் தம்பி பல்தேவ் சிங் துப்பாக்கியால் சுட்டு கொன்றான். தலை துண்டிக்கப்பட்டு பரங்கி மாஜிஸ்திரேட்டுக்கு வழங்கப்பட்டது. எஞ்சிய உடல் துண்டு துண்டாக்கப்பட்டு தீயிலிட்டு சுட்டு பொசுக்கினர். ராஜா ஜெகந்நாத் சிங்கிற்க்கு அறிவிக்கப்பட்ட பரிசு வழங்கப்பட்டது. அடுத்த நாள், மௌலவியின் தலை கோட்வாலியில் உள்ள காவல் நிலையம் முன்பு தூக்கிலிடப்பட்டது.[6] 1857 ல் நடைப்பெற்ற இத்துயர சம்பவத்தினை மற்றொரு புரட்சியாளர் பஸல்-உல்-ஹக் கைராபாதி சாட்சி பகற்கின்றார்.[7]

குடும்பம் தொகு

அஹ்மதுல்லா ஷாவின் குடும்பம் ஹர்தோய் மாகாணத்தில் கோபாமன் பகுதியின் வசித்தனர். இவரது தந்தை குலாம் உசேன் கான் ஹைதர் அலியின் இராணுவத்தில் மூத்த அதிகாரியாக இருந்தார். அவரது முன்னோர்கள் ஆயுதங்களின் பெரும் நிபுணர்களாக இருந்தனர்.[4] அஹ்மதுல்லா ஷா ஒரு சுன்னி முஸ்லீம் மற்றும் ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தார், மேலும் அவருக்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை இருந்தது. தனது பாரம்பரிய இஸ்லாமிய கல்வியோடு, நலன் சார்ந்த விசயங்களில் பயிற்சியும் பெற்றார்.

அவர் இங்கிலாந்து, சோவியத் யூனியன், ஈரான், ஈராக், ஆகிய நாடுகளுக்குச் சென்றதோடு மெக்கா மற்றும் மதீனா - ஹஜ் கடமையயும் நிகழ்த்தினார்.[1]

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 "Maulavi Ahmad Ullah Shah and Great revolt of 1857". National Book Trust, India website (Book by Rashmi Kumari). பார்க்கப்பட்ட நாள் 27 August 2019.
  2. "History of the Indian Mutiny, 1857-1858". George Bruce Malleson (1858).
  3. "Muslim Freedom Fighters Missing in the Indian History Books". 15 August 2017. பார்க்கப்பட்ட நாள் 27 August 2019.
  4. 4.0 4.1 The Conspirators, Indian Mutiny of 1857 (Ahmadullah Shah) The Annexation of Oudh."[1]"
  5. "1857 The First Challenge: The Rising". The Tribune (India newspaper). பார்க்கப்பட்ட நாள் 27 August 2019.
  6. "சுதந்திர-உணர்வின்-தியாக-தீபங்கள்-19)".
  7. "The Indian Muslim Legends (Ahmadullah Shah)". பார்க்கப்பட்ட நாள் 27 August 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஹ்மதுல்லா_ஷா&oldid=3924540" இலிருந்து மீள்விக்கப்பட்டது