அ. அறிவுநம்பி

தமிழ் எழுத்தாளர்

அ. அறிவுநம்பி (பிறப்பு: நவம்பர் 10 1952) தமிழக எழுத்தாளராவார். காரைக்குடி எனுமிடத்தைப் பிறப்பிடமாகவும், புதுச்சேரி கலைவாணி நகர், இலாசுப்பேட்டையை வாழ்விடமாகவும் கொண்டுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆன்டு முது கலைப் பட்டத்தையும், 1980 ஆம் ஆன்டு முனைவர் பட்டத்தையும் பெற்றார். தமிழ் இதிகாசம், நாடகம், பழங்காலக் கலைகளில் நிபுணத்துவம் கொண்டவராக இருந்தார்.[1] மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கியவர். பின்னர் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராக இணைந்து, பேராசிரியர், துறைத்தலைவர், புலமுதன்மையர் பொறுப்புகளை வகித்தார். தொலைநிலைக் கல்வி இயக்கத்தின் பொறுப்பு இயக்குநராகவும் உள்ளார்.

எழுதிய நூல்கள்

தொகு
  • கூத்தும் சிலம்பும்
  • தமிழகத்தில் தெருக்கூத்து
  • நாட்டுப்புறக் களங்கள்
  • பாவேந்தரின் பன்முகங்கள்
  • கம்பரின் அறிவியல்
  • இலக்கியங்களும் உத்திகளும்
  • செம்மொழி இலக்கிய சிந்தனைகள் உட்பட 23 நூல்களை எழுதியுள்ளார்

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

தொகு
  • தமிழ் முதுகலையில் பல்கலைக்கழக முதன்மை பெற்றமைக்காக தெ.பொ.மீ. தங்கப் பதக்கப் பரிசு
  • கம்பரின் அறிவியல் நூலுக்காக தமிழகம் மற்றும் புதுவை அரசுகளின் பரிசு
  • கம்பர் காட்டும் மள்ளர் மாண்பு என்ற நூலுக்காகப் புதுவை அரசின் தொல்காப்பிய விருது
  • இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக தமிழ்மாமணி விருது

புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரும், புகழ்பெற்ற ஆய்வாளருமான முனைவர் அ. அறிவுநம்பி 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 அன்று மாரடைப்பால் புதுச்சேரியில் காலமானார். [2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._அறிவுநம்பி&oldid=3170574" இலிருந்து மீள்விக்கப்பட்டது