அ. கந்தன்

எழுத்தாளர்

அ. கந்தன் (பி. 1937) மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியரும் ஆவார்.

இலக்கியத்துறை

தொகு

1960ஆம் ஆண்டு முதல் சிறுகதைகள், நாடகங்கள், குறுநாவல் போன்ற தமிழ்ப் படைப்பிலக்கியங்களையும், கட்டுரைகளையும் படைத்துவரும் இவரின் ஆக்கங்கள் மலேசிய தேசிய தினசரிகளிலும், வார இதழ்களிலும் மற்றும் மலேசியா சிற்றிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

புனைப்பெயர்கள்

தொகு

இவர் 'தமிழ் மகன்', 'வள்ளுவதாசன்' ஆகிய புனைப்பெயர்களால் தமிழ் இலக்கியம் படைத்து வருகின்றார்.

எழுதியுள்ள நூல்கள்

தொகு
  • அன்புள்ள தம்பி தமிழரசுக்கு
  • மலேசியாவில் தமிழ்ப் பள்ளியும் தமிழ்க் கல்வியும்
  • ஒரு தொண்டனின் பயணம் தொடர்கிறது
  • அன்புக்கு நான் அடிமை
  • குறளமுதம்
  • ஒரு சிறந்த தலைவர்
  • முத்தமிழும் முக்கனியும்
  • உன்னால் முடியும் தம்பி
  • இளந்தமிழா விழித்திடு
  • மாணவன் மணிவண்ணன்

விருதுகளும், பரிசுகளும்

தொகு
  • தமிழ்த் தொண்டன் (1974)
  • மக்கள் எழுத்தாளர் (1997)
  • மலேசிய அரசாங்கத்தின் பிபிஎன் விருது (1980)

மேலும், பல மலேசியா நிறுவனங்களினால் விருதுகளும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

உசாத்துணை

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._கந்தன்&oldid=3947445" இலிருந்து மீள்விக்கப்பட்டது