அ. சங்கரவள்ளிநாயகம்
அ. சங்கரவள்ளிநாயகம் தமிழ்ப்பேராசிரியர்; சொற்பொழிவாளர்; வ.உ.சி.இயல் அறிஞர்; எழுத்தாளர்.
அ. சங்கரவள்ளிநாயகம் | |
---|---|
இறப்பு | 2008 கோவில்பட்டி |
இருப்பிடம் | கோவில்பட்டி |
தேசியம் | இந்தியர் |
கல்வி | கலைமுதுவர் முனைவர் நூலகவியற் சான்றிதழ் |
பணி | தமிழ்ப் பேராசிரியர் |
அறியப்படுவது | வ.உ.சி. இயல் |
சமயம் | சைவம் |
பெற்றோர் | அருணாசலம் மங்கையர்க்கரசி |
பிள்ளைகள் | ச. திருமலைமுத்துகுமாரசாமி |
உறவினர்கள் | அ. திருமலைமுத்துசுவாமி |
பிறப்பு
தொகுஅ. சங்கரவள்ளிநாயகம் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த தமிழாசிரியர் அருணாசலம் – மங்கையர்க்கரசி என்னும் இணையருக்கு மகனாகப் பிறந்தார். நூலகப் பேராசிரியர் திருமலைமுத்துசுவாமி, சுப்பிரமணியன், காமாட்சி மற்றும் ஒருவர் இவருடன் பிறந்தவர்கள் ஆவர். [1]
கல்வி
தொகுதமிழிலக்கியத்தில் கலைமுதுவர் பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று நூலகவியற் சான்றிதழும் பெற்றார். வ. உ. சிதம்பரனாரின் படைப்புகளை, வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறும் இலக்கியப் பணிகளும் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். [2]
பணிக்கள வாழ்க்கை
தொகுதூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி நகரை அடுத்த நல்லாட்டின்புதூர் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கோ. வே. நா. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். [3]
எழுத்துப்பணி
தொகுவ.எண் | ஆண்டு | நூல் | வகை | பதிப்பகம் | குறிப்பு |
01 | ? | நூலகம் | நூலகவியல் | ? | |
02 | 198? | தியாக ஏட்டின் தித்திக்கும் வரலாறு | வரலாறு | கமலம் பிரிண்டர்ஸ், கோயில்பட்டி | |
03 | வ.உ.சி.வாழ்வும் இலக்கியப் பணிகளும் | ஆய்வு | தி.தெ.சை.சி.நூற்பதிப்புக் கழகம்,சென்னை | முனைவர் பட்ட ஆய்வேடு | |
04 | 1994 | வ.உ.சி.யும் தமிழும் | ஆய்வு | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை | அறக்கட்டளைச் சொற்பொழிவு |
05 | 1997 | திருக்குறள் உரை | உரைநூல் | ? | |
06 | 2002 | வள்ளுவப் பேரொளியர் | இலக்கியம் | அகரம், தஞ்சாவூர் | |
07 | 2005 | புலத்துரை முற்றிய பொய்யில் புலவர் | இலக்கியக் கட்டுரை | அகரம், தஞ்சாவூர் | |
08 | 2006 | பண்டைத் தமிழரின் பண்பாட்டுத் தளங்கள்[4] | சமூகவியல் | அகரம், தஞ்சாவூர் | |
09 | 2007 | தமிழ்க் குமுகாயம் | குமுகாவியல் | அகரம், தஞ்சாவூர் | |
10 | ? | நாட்டுப்புறத் தமிழ் | நாட்டாரிலக்கியம் | ? | |
11 | ? | சிற்பி சிந்தனையில் சிறைப்பட்ட சீர்திருத்தகவி | இலக்கியக் கட்டுரை | ? | |
12 | அடிகள் அகற்றிய அல்லவை ஏழு | ? | ? |
நாட்டுடைமை நூல்கள்
தொகு- இந்நூலாசிரியர் ஆறு நூல்கள் நாட்டுடைமை நூல்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.[5] அவை வருமாறு;-
- தமிழ் ஆவது..
- தமிழ்க் குமுகாயம்
- வ. உ. சியும் இலக்கிய பணிகளும் [6]
- வ. உ. சியும் தமிழும்
- வள்ளுவப் பேரொளியார்
தமிழமைப்பு
தொகுசங்கரவள்ளிநாயகம் தான் வாழ்ந்த கோயில்பட்டியில் திருவள்ளுவர் மன்றம் என்னும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.[7]
பாராட்டுகளும் விருதுகளும்
தொகுசிராப்பள்ளி மருத்துவ மன்ற அரங்கில் தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் மகன் மருத்துவர் இரா. கலைக்கோவன் தலைமையிலான அமைப்பு சங்கரவள்ளிநாயகத்திற்கு 2007 ஆம் ஆண்டில் தமிழறிஞர் விருது வழங்கியது.[7]
மறைவு
தொகுசங்கரவள்ளிநாயகம் கோயில்பட்டியில் 2008 ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.[7]
நாட்டுடைமை
தொகுஅ. சங்கரவள்ளிநாயகத்தின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுவதாக 2021 ஆகத்து 31ஆம் நாள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. [8]
சான்றடைவு
தொகு- ↑ திருமலை முத்துசுவாமி; முதலுதவி; திண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல்; முதற்பதிப்பு 1955; பக்.1
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-09-01. பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.
- ↑ பொக்கிஷம், நாறும்பூநாதன்
- ↑ பண்டைத் தமிழரின் பண்பாட்டுத் தளங்கள். அன்னம் - அகரம் வெளியீட்டகம்.
- ↑ இந்த யூடிப்பு பதிவு வழியே ஆறு நூல்களையும் அறியலாம்
- ↑ வ. உ. சியும் இலக்கிய பணிகளும். பரிசல் வெளியீடு.
- ↑ 7.0 7.1 7.2 திரும்பிப்பார்க்கிறோம் – 30, கலைக்கோவன் இரா.
- ↑ https://mdnews.live/tamil/when-writing-a-name-in-tamil-you-should-follow-the-practice-of-writing-the-letter-in-tamil-beforehand-minister-thangam-tennarasu