அ. சிதம்பரம்

அ. சிதம்பரம் (பிறப்பு ஏப்ரல் 14 1934) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் பத்திரிகையாளராகப் பணியாற்றியுள்ளார். எழுத்துறையில் 'தில்லை' எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

தொகு

இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

பத்திரிகையாளராக

தொகு

1945 முதல் மலேசியத் தமிழ்ப் பத்திரிகைத் துறையில் பணியாற்றி வருகின்றார். "தமிழ் நேசன்" நாளிதழிலும், "மலைமகள்" திங்களிதழிலும் துணையாசிரியராக பணியாற்றியுள்ளார்.

பரிசுகளும் விருதுகளும்

தொகு
  • செய்தித் துறைப் பணிக்காக சில விருதுகளும் பெற்றுள்ளார்.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சிதம்பரம்&oldid=3230618" இலிருந்து மீள்விக்கப்பட்டது