அ. சிவசுந்தரம்

அப்புக்குட்டி சிவசுந்தரம் (Appucutty Sivasunderam, 2 அக்டோபர் 1904[1] - ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

அ. சிவசுந்தரம்
A. Sivasunderam

நா.உ.
கிளிநொச்சி தொகுதி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1960–1965
பின்வந்தவர் கா. பொ. இரத்தினம்
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 2, 1904(1904-10-02)
இனம் இலங்கைத் தமிழர்

சிவசுந்தரம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 1,159 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்ட அன்ரன் சி. பொன்னம்பலம் என்பவரை வென்று நாடாளுமன்றம் சென்றார்.[2] சூலை 1960 தேர்தலிலும் இவர் போட்டியிட்டு வீ. ஆனந்தசங்கரியை 3,327 வாக்குகளால் வென்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[3] 1970 தேர்தலில் இவர் சுயேட்சையாகப் போட்டியிட்டு 196 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்தார்.[4]

மேற்கோள்கள்தொகு

  1. "Directory of Past Members: Shivasundaram, Appucutty". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  3. "Result of Parliamentary General Election 1960-07-20". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  4. "Result of Parliamentary General Election 1970". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சிவசுந்தரம்&oldid=3083020" இருந்து மீள்விக்கப்பட்டது