அ. சுப்ரமணியம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அ. சுப்ரமணியம் (பிறப்பு: நவம்பர் 20 1946), மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'அரவிந்தன்' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் சுய தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
தொகு1966 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மு. வரதராசனார் மீது கொண்ட அபிமானத்தால் அவரைப் பற்றிய நினைவு நிகழ்வுகளையும், நினைவு மலரையும் வெளியிட்டுள்ளார். திருக்குறள் பணிகளுக்காக தமிழகத்தில் சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் சிறப்புச் செய்யப்பட்டுள்ளார்.
நூல்கள்
தொகு- "கனவுகளின் சுயம்வரம்" (நாவல், 1990)
- "தொடரும் (அ)நியாயங்கள்" (சிறுகதைகள், 1999)
- "மு.வ. நினைவு மலர்" (1994)
- "இளவேனில்" (நாவல். 2002)
உசாத்துணை
தொகு- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் அ. சுப்ரமணியம் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-17 at the வந்தவழி இயந்திரம்