அ. ரேவதி
அ. ரேவதி (A. Revathi) என்பவர் நாமக்கல்லைச் சார்ந்த எழுத்தாளர், [1]அரங்கலைஞர், திரைபட நடிகை மற்றும் பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக பணியாற்றும் ஆர்வலர் ஆவார். இவர் ஒரு திருநங்கை மற்றும் ஹிஜ்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதமிழ்நாட்டின் நமக்கல் மாவட்டத்தில் துரைசாமி என்ற ஆண் பிள்ளையாக இவர் பிறந்தார். ரேவதி தன் சிறார் பருவத்தில் தனது 'பெண்' போன்ற மாறுபட்ட நடத்தைக்காக பள்ளியிலும் குடும்பத்தினரிடமும் வன்முறையை எதிர்கொண்டார். அந்த வயதில் தன் வயதை ஒத்த சிறுவர்களுடன் விளையாடுவதை விட இளம் பெண்களுடன் விளையாடுவதையே விரும்பினார். மேலும் தனது தாயின் உடைகளை எடுத்து அவ்வப்போது அணிந்துகொள்வார். தான் ஆண் உடலில் சிக்கிக்கொண்ட ஒரு பெண் என்ற உணர்வால் மன உளைச்சலுக்கு ஆளானார். இவரது இந்த சிக்கல்களும் சமூகத்தினால் ஏற்பட்ட கஷ்டங்களும் இவரது கல்வித் திறனைப் பாதித்தன. இதனால் பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றதால், இவர் பள்ளியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. [3] எனினும், இவர் பள்ளிக்காக நாமக்கலுக்கு பயணத்தை மேற்கொண்டபோது முதன்முதலில் திருநங்கை குழுவினரை சந்தித்தார். அப்போது அவர்களுடன் ஒரு உறவை உணர்ந்தார். அதனால் தன் பாலியல் அடையாளத்துக்காக அவர்களுடன் தில்லி செல்லுவது என்று முடிவெடுத்தார். [4]
தில்லியில், இவர் ஹிஜ்ரா சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவைச் சந்தித்து அவர்களுடன் வாழத் தொடங்கினார்.[5] பின்னர் இவர் பாலியல் மாற்ற அறுவை சிகிச்சைக்கு செய்துகொண்டார். இது ஹிஜ்ரா வீட்டில் நூழைவதற்கான உரிமைக்கான ஒரு சடங்காக கருதப்படுகிறது. இவர் தனது அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இவர் குரு அல்லது வீட்டுத் தலைவரால் ரேவதி என்று மறுபெயர் சூட்டப்பட்டார். இதனால் இறுதியாக இவர் தனது பாலின அடையாளத்தை முழுமையானது எனப்பட்டாலும், ரேவதி ஒரு ஹிஜ்ராவாக வாழ்க்கையின் கடுமையான யதார்த்தங்களை அதில் கண்டுபிடித்தார். அங்கு சமூக விலக்கு, வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய அனைத்தும் மிகவும் பொதுவாக நிலவின. திருமணங்களில் நடனமாடுதல், பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் உள்ளிட்ட ஒரு சில வேலைகளே இவர் செய்யவேண்டி இருந்தது. இவ்வாறன தில்லி வாழ்கையில் சில மாதங்கள் உழன்ற நிலையில் சோர்வடைந்த இவர் ஓடிவந்த தனது வீட்டிற்கே திரும்பிச் சென்றார். ஆனால் அங்கு இவர் வந்ததை அவர்கள் விரும்பவில்லை என்பதை உணர்ந்தார். [6]
பின்னர் தமிழ்நாட்டில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி வேலைக்காக பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் துவக்கத்தில் பாலியல் தொழிலுக்கே செல்லவேண்டி இருந்தது. இறுதியாக பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக பணிபுரியும் சங்கமா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் வேலை பெற்றார். அங்கே, இவர் சந்தித்த செயற்பாட்டாளர்களின் வழியாக தமது உரிமைகள் பற்றி பலவாறாக அறிந்து கொண்டார். இந்த அமைப்பில் முதலில் ஓர் உதவியாளராகப் பணியைத் தொடங்கியவர், பின்னர் படிப்படியாக உயர்ந்து, இறுதியில் இயக்குனராக ஆனார். [7] [8] சங்காமாவில் இருந்த சக ஊழியரை மணம்புரிந்து சிலகாலம் வாழ்ந்ததாக இரு தரவுகள் குறிப்பிடுகின்றன. தற்போது எழுத்தாளராகவும், உலகஅளவில் கல்லூரிகள் பல்கலைகழகங்கல் பொது நிகழ்வுகள் என கருத்தரங்கம் மற்றும் அரங்ககலையை அடிப்படையாக கொண்டு திருநங்கைகள்-உரிமை ஆர்வலராக செயல்பட்டுவருகிறார். [9]
இலக்கியப் பணிகள் மற்றும் பிற சாதனைகள்
தொகுரேவதி தனது முதல் புத்தகமான தமிழில் உணர்வும் உருவமும் என்ற நூலை 2004 இல் வெளியிட்டார். இது தென்னிந்தியாவில் உள்ள ஹிஜ்ரா சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நிஜ வாழ்க்கைக் கதைகளின் தொகுப்பு ஆகும். இந்த நூலுக்கு உலகதமிழாசிரியர்கள் நினைவுப் பரிசு கனடா நாட்டில் தமிழ் இலக்கியத் தோட்டம் "அபுனைவு இலக்கியம்-2006ல் வழங்கி கௌரவிக்கபட்டார்[10] இவரது இந்த நூலானது வித்யாவின் நான் சரவணன் அல்ல (2007) மற்றும் பரியாபாபு போன்ற பிற திருநங்கையர்களின் எழுத்தாளர்களின் நூல்களுக்கு முன்னுதாரனமாக இருந்ததாக பாராட்டுகளைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து, இவர் தனது சொந்த அனுபவங்களைப் பற்றி எழுத முடிவு செய்தார். இவர் தனது இரண்டாவது புத்தகமான தி ட்ரூத் அபவுட் மீ: எ ஹிஜ்ரா லைஃப் ஸ்டோரி நூலை 2010 இல் வெளியிட்டார். [11] இந்நூல் தமிழில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் பெண்ணிய வரலாற்றாசிரியர் வ. கீதாவால் மொழிபெயர்க்கப்பட்டது. ரேவதியின் கூற்றுப்படி, இவர் தனது புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஆங்கிலம் பேசாத தனது குடும்பத்தினருடன் மோதலைத் தவிர்ப்பதற்காக முதலில் தமிழில் வெளியிடாமல் ஆங்கிலத்திலேயே வெளியிட்டார். இந்த புத்தகம் இறுதியில் 2011 இல் தமிழில் வெள்ளை மொழி என வெளியிடப்பட்டது. [3] இவர் தனது முக்கிய உத்வேகங்களில் ஒருவராக மிக முக்கியமான தமிழ் தலித் எழுத்தாளரான பாமாவை குறிப்பிடுகிறார். மதுரை அமெரிக்கன் கல்லூரியானது இவரின் தி ட்ரூத் அபவுட் மீ: எ ஹிஜ்ரா லைஃப் ஸ்டோரி நூலை மூன்றாம் பாலின இலக்கிய பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்த்துள்ளது . [12]
திரைப்பட வாழ்க்கை
தொகுசந்தோஷ்சிவம் இயக்கத்தில் நவரசா படத்தில் சிரு காட்சியில் அறிமுகமாகி 2008 ஆம் ஆண்டில் இரண்டு திருநங்கைகளை முன்னணி கதாபாத்திரங்களாக கொண்ட தெனாவட்டு என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானதன் மூலம் ரேவதி புதிய வரலாறு படைத்தார்.2022ஆம் ஆண்டில் அபிஜீத் இயக்கத்தில் மளையாளபடம் Antharam படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் [13] ரேவதியின் தன் வரலாறு நாடகமாக கர்நாடகத்தில் நீனாசம் மாணவர்களுடன் அவரும் இனைந்து முனைவர் M கணேஷ் இயக்கத்தில் பதுக்கு பயலு என்ற கன்னட நாடகம் ஐனமனதாட்டா நாடக குழு மூலம் சுமார் 95 இடங்களில் நிகழ்த்தபட்டது.
தனி நாடகமாக வெள்ளை மொழி நாடகம் அ.மங்கை அரசு அவர்களின் இயக்கத்தில் அமெரிக்கா, நேபாளம், தமிழ்நாடு, கர்நாடகா, ஜெய்பூர் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் 100 இடங்களை கடந்து நிகழ்த்திக்கொண்டியிருக்கிறார். ஸ்ரீஜீத் சுந்தரம் இயக்கத்தில் நூரம்மா தனிநாடகம் சர்வதேஷ நாடகவிழாக்களில் நூரம்மாவாகவும் நடித்துவருகிறார். அமெரிக்கா கொலம்பியாபல்கலைகழகத்தில் பட்ளர் நூலக முகப்பில் மாயாஏஞ்சலோ போன்ற பெண் எழுத்தாளர்களின் வரிசையில் 2019 ஆண்டு ரேவதி பெயரும் இடம்பெற்று திருநங்கையர்களுக்கும் இந்தியாவுக்கும் பெருமைசேர்த்தவராவார். தல்கி என்ற கன்னட நாடகம் பெங்களூரில் வசிக்கும் ஐம்பது வயதுக்கு மேல் உள்ள எட்டு திருநங்கையர்கள் சேர்ந்து ஸ்ரீஜித்சுந்தரம் இயக்கத்திலும் நடிக்கிறார். தமிழ் நாடு அரசு மாதிரிப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு வெள்ளை மொழி நாடகமும் பாலின சமத்துவம் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்காக பயிற்சிகளும் கொடுப்பதோடு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்காக பாலின சமத்துவ பாடளையும் எழுதியிருக்கிறார். தன் கலைமூலம் மாணவர்களிடையே திருநங்கை திருநம்பிகள் கல்வி தடையின்றி படிக்கவேண்டி சமத்துவத்தை ஏற்படுத்தி வருகிறார். [14]
மேற்கோள்கள்
தொகு- ↑ "மாயா ஏஞ்சலோ, டோனி மாரிசனுக்கு அருகில் நான்: நினைத்துக்கூடப் பார்த்ததில்லை; எழுத்தாளர் அ.ரேவதி". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/blogs/519357-transgender-writer-a-revathi-s-name-next-to-maya-angelou-toni-morrison-on-columbia-university-wall.html. பார்த்த நாள்: 22 June 2024.
- ↑ "When recognition comes calling". ஆங்கில இந்து. https://www.thehindu.com/society/phenomenal-woman-thats-her/article29679044.ece. பார்த்த நாள்: 22 June 2024.
- ↑ 3.0 3.1 Prabhu, Gayatri (2014). "Writing a Life Between Gender Lines: Conversations with A.Revathi about Her Autobiography "The Truth About Me: A Hijra Life Story"" (PDF).
- ↑ "Jabberwock: A. Revathi's A Hijra Life Story - a long journey to self-acceptance". 13 October 2011.
- ↑ Revathi, A.; Geetha, V. (1 August 2010). Truth about Me: A Hijra Life Story. Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0143068365.
- ↑ Kannabiran, K. (2015). The complexities of the genderscape in India, 5.
- ↑ "The Truth About Me—A Hijra Life Story Book Review By Yoginder Sikand".
- ↑ "We want to live as women, and we want our dignity: A Revathi - Latest News & Updates at Daily News & Analysis". 4 August 2010.
- ↑ Govindan, P.; Vasudevan, A. (2008). The Razor's Edge of Oppositionality: Exploring the Politics of Rights-Based Activism by Transgender Women in Tamil Nadu. பக். 20. http://www.lassnet.org/2009/readings/govindan-vasudevan2008razors-edge.pdf. பார்த்த நாள்: 2020-03-25.
- ↑ Mayanth, Nithin (2010-09-04). "Voice for visibility" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/books/Voice-for-visibility/article15902951.ece.
- ↑ "The life of a hijra and a tale well told".
- ↑ Shrikumar, A. (23 October 2014). "Making gender flexible". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/making-gender-flexible/article6527959.ece.
- ↑ Two trans-genders to play lead roles in Tamil films, 19 May 2008, Filmibeat.com, Retrieved 12 June 2016
- ↑ "Facebook". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 2024-07-06.