அ. ல. முஹம்மத் நூர்

அ. ல. முஹம்மத் நூர் (பிறப்பு: நவம்பர் 27 1940) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், வாணக்கார தெரு திருத்துறைப்பூண்டி திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஒரு ஓய்வுபெற்ற பள்ளி விடுதி மேலாளரும், இலக்கிய ஆர்வலரும், கவிஞரும், மரபு, புதுக்கவிதை, ஹைக்கூ எனக் கவிதைகள் படைப்பதோடு சித்திரக் கவியும் பாடும் ஆற்றல்மிக்கவரும், சித்திரக் கவி எனும் நிறுவனத்தின் பொறுப்பாளருமாவார். இந்நிறுவனத்தினூடாக மார்க்க நூல்களை வெளியிட்டு வரும் அதேவேளை சித்திரக்கவி நூலகம், தாருல் ஹிக்மா அறிவுக்கூடம் எனும் நூலகத்தையும் நிறுவி ஏராளமான நூல்களை அதில் சேகரித்து வைத்துள்ளார். மேலும், பல முன்னணி இதழ்களில் கவிதைகளை எழுதிவருகின்றார்.

எழுதிய நூல்கள் தொகு

  • ரமழானின் சிறப்பு
  • ஞான ஒளிச்சுடர்

உசாத்துணை தொகு

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ல._முஹம்மத்_நூர்&oldid=2613087" இலிருந்து மீள்விக்கப்பட்டது