ஆகத்து மாதத்தின் ஒளி

ஆகத்து மாதத்தின் ஒளி (Light in August) என்ற புதினம் 1932 ஆம் ஆண்டில் தென் அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் பால்க்னரால் எழுதப்பட்டது. இது தென் கோதிக் மற்றும் நவீன இலக்கிய வகையைச் சார்ந்தது.

ஆகத்து மாதத்தின் ஒளி
முதல் பதிப்பு
நூலாசிரியர்வில்லியம் பால்க்னர்
மொழிஆங்கிலம்
வகைதென் கோதிக், நவீன இலக்கியம்
வெளியீட்டாளர்சுமித் & ஹாஸ்
வெளியிடப்பட்ட நாள்
1932
பக்கங்கள்480
813.52
முன்னைய நூல்சரணாலயம் (Sanctuary)
அடுத்த நூல்பைலான் (Pylon)

கதைச்சுருக்கம்

தொகு

கதைக்களம் எழுத்தாளரின் சமகாலத்தில் (இரு உலகப்போர்களின் இடைப்பட்ட காலம்) நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கற்பனை கவுன்ட்டியான ஜோகனாபேடாபா கவுண்டியில் உள்ள ஜெபர்சன் என்னும் இடத்திற்கு வெவ்வேறு நேரங்களில் வந்துசேரும் இரண்டு அந்நியர்களை மையமாக கொண்டு இந்தப் புதினம் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கற்பனை கவுண்டி, மிசிசிப்பி மாநிலத்தில் உள்ள கதாசிரியர் பால்க்னரின் வீடு அமைந்திருக்கும் லபாஃயட் கவுண்டியை அடிப்படையாக கொண்டு அமைக்கபட்டுள்ளது.

கதையின் அமைப்பு முதலில் அலபாமா மாநிலத்திலிருந்து வந்து, தனது பிறக்கவிருக்கும் குழந்தையின் தந்தையைத் தேடும் ஒரு இளம் கர்ப்பிணி வெள்ளைப் பெண்மணியான லேனா கிரோவ் மீது மையப்படுத்திச் செல்கிறது. பின்னர் கதையின் மையம் மெதுவாக ஜோ கிறித்துமஸ் என்ற கதைமாந்தரின் வாழ்வை ஆராய்வதாகச் செல்கிறது. ஜோ கிறித்துமஸ் ஜெபர்சனில் குடியேறியவர். வெள்ளை நிறத்தவர், ஆனால் அவர் தான் கருப்பு வம்சாவளியைக் கொண்டிருப்பதாக இரகசியமாக நம்புகிறார். இதன் பின் கதைக்களம், கிறித்துமசின் ஆரம்ப கால வாழ்க்கையை விவரிக்கும் தொடர்ச்சியான பின்நிகழ்வுகள் வருவதாக அமைந்திருக்கும். அதன் பிறகு மீண்டும் முக்கிய கதைகளமான இளம் வெள்ளைப் பெண் லேனாவின் இன்னும் பிறக்காத குழந்தைக்கு தந்தையான லூகாஸ் புர்ச்சிலைச் சுற்றி வருகிறது.

லேனா கர்ப்பமானார் என்று தெரிந்தவுடன் லூகாஸ் ஜெபர்சன்னிற்குத் தப்பி ஓடி வந்துவிடுகிறார். மேலும் தனது பெயரையும் மாற்றிக் கொள்கிறார். கிறித்துமஸ் மற்றும் புர்ச்சில் வசிக்கும் இடத்தின் சொந்தகாரராக இருந்த ஒரு பெண்மணி ஜோனா பர்டன். இவர் வடகிழக்கு அமெரிக்க (நியூ இங்கிலாந்து) அடிமை ஒழிப்பு கோட்பாடு சார்ந்தவர் என்பதால் ஜெபர்சன் வாசிகளால் வெறுக்கப்பட்டார். இந்தப் பெண்மணி தற்போது படுகொலை செய்யப்பட்டுவிட்டார். கொலை நடந்த இடத்தில் புர்ச் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அந்தப் பெண்மணிக்கும் கிறித்துமசுக்கும் ஒரு மறைமுக காதல் இருந்ததாகவும், அவன் ஒருபகுதி கருப்பினத்தவன் என்றும், கிறித்துமஸ் தான் கொலைகாரர் என்று புர்ச் கூறுகிறார். மேலும் சிறையில் இருந்து விடுதலை பெறக் காத்துக்கொண்டிருக்கிறார். இதேவேலையில் லீனாவிற்கு மைரான் பன்ச் என்பவர் உதவி செய்கிறார். பன்ச் ஒரு கூச்ச சுபாவம் உள்ள இன்னும் திருமணமாகாத இளைஞர். மேலும் இவர் லீனா மீது காதல் வயப்படுகிறார். பன்ச் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்ட ஏமாற்றப்பட்டவரான கெய்ல் ஹைட்டோவரிடமிருந்து உதவி எதிர்பார்க்கிறார். இவரிடம் லீனா குழந்தை பெற்றெடுக்கவும் மற்றும் கிறித்துமசைப் பாதுகாக்க உதவும் படி கேட்கிறார். ஆனால் இரண்டாவதற்கு ஹைட்டோவர் உதவ மறுத்து விடுகிறார். சிறிது காலத்திற்குப் பின் கிறிஸ்துமஸ் தனது வீட்டுக்குத் தப்பித்துச் சென்ற பின்னர் ஒரு அரசுக் காவலாளரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். புர்ச் பரிசு இல்லாமல் நகரத்தை விட்டுச் செல்கிறார். வழிபோக்கர் ஒருவர் தான் சாலையில் சந்தித்த, கைகுழந்தையுடனிருந்த பெண் மற்றும் அக்குழந்தைக்குத் தந்தையல்லாத நபர் ஆகிய இருவரும் அக்குழந்தையின் தந்தையைத் தேடிக்கொண்டிருந்ததாகவும், தான் அவர்களிருந்து இக்கதையைக் கேட்டறிந்ததாகவும் தன் மனைவியிடம் கூறுவதாகக் கதை முடிகிறது.

பாணி மற்றும் கட்டமைப்பு

தொகு
 
பால்க்னரின் வீடு, ரோவான் ஓக்,ஆக்ஸ்போர்டு, மிசிசிப்பி, இங்கு தான் ஆகத்து மாதத்தின் ஒளி புதினம் எழுதினார்.[1]

இந்தப் புதினtத்தின், இயல்பானதன்மை, வன்முறை நிறைந்த கதையம்சம் மற்றும் கடந்தகால பேய்கள் பற்றிய விஷயங்கள் ஆகியவற்றால், இது தென் கோதிக் புதினமாக வகைப்படுத்தப் படுகிறது. பால்க்னரின் சமகாலத்து எழுத்தாளர்களான கார்சோன் மெக்கல்லர்ஸ் மற்றும் ஃபிளானரி ஓ'கோனோர் மற்றும் ட்ரூமன் கேபோட்டின் ஆகியோர் இந்த தெற்கு கோதிக் வகையில் சிறந்த படைப்புகளைக் கொடுத்துள்ளனர்.[2] தென் கோதிக் வகையான வரைபட பாணியை பால்க்னர் பயன்படுத்துவதை, அதாவது பால்க்னர் தனது புதினத்தில் பாழடைந்த தோட்டம், மர்மம் மற்றும் திகில் ஆகியன போன்றவற்றைப் பயன்படுத்துவதை, "கடந்தகாலத்துடன் பிணைக்கப்பட்ட உறவின் மீதான நவீனக் கூற்றுரையாகவும்"[3]. உண்மையான அடையாளத்தை நிர்ணயிக்கும் சாத்தியமற்றதகாவும் டையன் ராபர்ட்ஸ் மற்றும் டேவிட் ஆர். ஜாராவே போன்ற விமர்சகர்கள் கருதுகின்றனர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Ruppersburg, ப. 3.
  2. Lloyd-Smith, ப. 61.
  3. Roberts, ப. 37.
  4. Martin Savoy, ப. 57-59.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகத்து_மாதத்தின்_ஒளி&oldid=3995508" இலிருந்து மீள்விக்கப்பட்டது