ஆகு பெயர்

ஆகுபெயர் எல்லாமே பெயர்ச்சொல்
(ஆகுபெயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆகு பெயர் எனப்படுவது, ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிப்பது. ஒன்றினது இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவது. பெயர்ச்சொல்லின் ஒரு இயல்பாக வருவது. ஆகுபெயர் எல்லாமே பெயர்ச்சொல். ஆனால், பெயர்ச்சொல் எல்லாம் ஆகுபெயராகாது.

எடுத்துக்காட்டுகள்

தொகு
நெல் அறுத்தான் - உண்மையில் அறுக்கப்பட்டது கதிர். நெல் என்பது இங்கு ஆகுபெயர் ஆனது.
வெற்றிலை நட்டான் - நடப்பட்டது வெற்றிலைக் கொடி. இங்கு வெற்றிலைக் கொடிக்காக வெற்றிலை ஆகுபெயர் ஆனது.

கண் என்னும் சொல் ஆகுபெயராய்க் கண்ணின் பார்வையை உணர்த்தும்.

பெண் இயலார் எல்லாம் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு [1]

இந்தத் திருக்குறளில் கண்ணால் உண்பர் என்பது கண் பார்வையால் உண்ணுதலை உணர்த்தி நிற்கும் ஆகுபெயர்.

வகைகள்

தொகு

ஆகுபெயர்கள் பத்தொன்பது வகைப்படும்.

அவையாவன:

  1. பொருளாகு பெயர்
  2. சினையாகு பெயர்
  3. காலவாகு பெயர்
  4. இடவாகு பெயர்
  5. பண்பாகு பெயர்
  6. தொழிலாகு பெயர்
  7. எண்ணலளவையாகு பெயர்
  8. எடுத்தலளவையாகு பெயர்
  9. முகத்தலளவையாகு பெயர்
  10. நீட்டலளவையாகு பெயர்
  11. சொல்லாகு பெயர்
  12. காரியவாகு பெயர்
  13. கருத்தாவாகு பெயர்
  14. உவமையாகு பெயர்
  15. அடை அடுத்த ஆகுபெயர்
  16. தானியாகுபெயர்
  17. இருபடியாகு பெயர்
  18. மும்மடியாகு பெயர்
  19. கருவியாகு பெயர்

பொருளாகுபெயர்

தொகு

முதல் பொருளின் பெயர், அதனோடு தொடர்புடைய இன்னொரு பொருளுக்கு ஆகி வருதல்.
எடுத்துக்காட்டு:

மல்லிகை போன்ற வெண்மை.
இங்கு மல்லிகைப் பூவுக்காக மரம் வந்தது.
(இது சினைக்காகப் பொருள் ஆகியது.

சினையாகு பெயர்

தொகு

ஒரு சினைப் பொருளின் பெயர் அதன் முதற்பொருளுக்கு ஆகி வருவது சினையாகு பெயர் எனப்படும்.

(எ.கா) தலைக்குப் பத்து ரூபாய் கொடு.

இதில் தலை என்னும் சினைப் பொருளின் பெயர், பத்து ரூபாய் கொடு என்னும் குறிப்பால் அந்தத் தலையை உடைய மனிதனுக்கு ஆகி வந்துள்ளது.

காலவாகு பெயர்

தொகு

எடுத்துக்காட்டு:

மாரி பொழிந்தது. - மழை பொழிந்தது.
சித்திரை வந்தாள். - சித்திரையில் பிறந்தவள் வந்தாள்.

மார்கழி சூடினாள்

இடவாகு பெயர்

தொகு

இடத்தின் பெயர் இன்னொன்றுக்காய் ஆகி வருவது.
எடுத்துக்காட்டு:

  • இங்கிலாந்து வென்றது.: இங்கு இங்கிலாந்து என்பது இங்கிலாந்தைக் குறிக்காமல், இங்கிலாந்துக்காக விளையாடும் இங்கிலாந்து அணியைக் குறித்தது. (அணிக்கு ஆகி வந்தது) இது இடவாகுபெயர்.
  • உலகம் வியந்தது: இதில் உலகம் என்பது மண்ணுலகத்தைக் குறிக்காமல், அதில் வாழும் மக்களைக் குறித்தது. (மக்களுக்கு ஆகி வந்தது). இது இடவாகு பெயர்.

பண்பாகு பெயர்

தொகு

எடுத்துக்காட்டு:

வீட்டிற்கு வெள்ளை அடித்தான்.: 'வெள்ளை' என்னும் நிறத்தின் பெயர், அந்நிறத்தையுடைய சுண்ணாம்புக்கு ஆகி வந்தது. இங்கு 'வெள்ளை' என்பது ஆகு பெயர். இதனை பண்பாகுபெயர் என்பர்.

தொழிலாகு பெயர்

தொகு

புழுங்கல் காய்ந்தது - காய்ந்தது அரிசி புழுக்கியதால்(தொழில்) புழுங்கல் என ஆகியுள்ளத. https://ta.wikipedia.org/

.

சொல்லாகு பெயர்

தொகு

ஏதோ ஒன்றுக்காக சொல் கருவி ஆகி வருவது.
எடுத்துக்காட்டு

இந்தப் பாட்டு என் சிந்தனையைத் தூண்டியது. இங்கே பாட்டின் பொருள்தான் சிந்தனையைத் தூண்டியது. பொருளுக்காக பாட்டு என்ற சொல் கருவி ஆகி வந்தது.

காரியவாகு பெயர்

தொகு

எடுத்துக்காட்டு

எழுத்தாளர் தரமான இலக்கியம் படைக்க வேண்டும். இலக்கியம் என்பது காரியம். இங்கு இலக்கியம் என்பது தரமான சிறுகதைக்கு காரியமாக ஆகி வருகிறது.

கருத்தாவாகு பெயர்

தொகு

கருத்தா - படைத்தவர் கருத்தா.

வைரமுத்துவை வாசி. இங்கு வைரமுத்து எழுதிய கவிதைக்காக வைரமுத்து என்கின்ற கருத்தா ஆகி வருகிறது.

உவமையாகு பெயர்

தொகு

உவமேயத்துக்காக உவமானம் ஆகி வருவது. எடுத்துக்காட்டு

மயில் வந்தாள். இங்கே உண்மையில் வந்தது ஒரு பெண். பெண் என்ற உவமேயத்துக்காக மயில் என்ற உவமானம் ஆகி வருகிறது.

தானியாகு பெயர்

தொகு

தானி என்றால் இடம்.
இடம் என்பது இங்கே ஒரு பொருள் இருக்கின்ற இடத்தைக் குறிக்கின்றது.
எடுத்துக்காட்டு

விளக்கு முறிந்தது.
விளக்கு என்பது காரணப்பெயர். விளக்கம் தரும் சுடரினால்தான் விளக்கு. சுடர் முறியாது. விளக்கம் தருகின்ற தண்டு முறிந்து விட்டது. விளக்குக்காக அந்த இடம் ஆகி வருகிறது.

பாலை இறக்கு.
இதில் பாலின் பெயர், பாலைக் குறிக்காமல் பாத்திரத்தைக் குறிக்கிறது. ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருளின் பெயர் (தானி), அது சார்ந்திருக்கும் இடத்திற்குப் (தானத்திற்கு) பெயராகி வருவது தானியாகு பெயர் ஆகும்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. திருக்குறள் 1311
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகு_பெயர்&oldid=4156002" இலிருந்து மீள்விக்கப்பட்டது