ஆக்கிலூபேட்டர்

ஆக்கிலூபேட்டர்
புதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசியக் காலம்
ஆக்கிலூபேட்டர் ஜைஜண்டிகஸ்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆக்கிலூபேட்டர்

இனங்கள்
  • A. giganticus பேர்லே, நோரெல், & கிளார்க், 1999 (வகை)

ஆக்கிலூபேட்டர் (உச்சரிப்பு /əˌkɪloʊˈbeɪtɔr/; "ஆக்கைல்ஸ்' போராளி/வீரன்") என்பது, டிரோமியோசோரிட் தேரோபோட் தொன்மா என்னும் பேரினத்தைச் சேர்ந்தது. இது தற்போதைய மங்கோலியாவின் கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. இது ஒரு இருகாலி, இரைகொல்லியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் பின் காலில் உள்ள இரண்டாம் விரலின் அரிவாள் வடிவிலான நகங்களைப் பயன்படுத்தி இது இரைகளை வேட்டையாடும். இது ஒரு பெரிய டிரோமியோசோரிட் ஆகும். இதன் நீண்ட மூக்கிலிருந்து வால் வரையான நீளம் 15 தொடக்கம் 20 அடிகள் வரை இருக்கும்.[1][2][3]

இதன் பொதுப் பெயர் டிரோஜான் போரின் கிரேக்க வீரனான ஆக்கைல்ஸ் என்பவனுடைய பெயரும், போராளி அல்லது வீரன் எனப் பொருள்படும் மங்கோலியச் சொல்லான பேட்டர் என்பதும் சேர்ந்து உருவானது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Perle, A.; Norell, M. A.; Clark, J. M. (1999). "A new maniraptoran Theropod−Achillobator giganticus (Dromaeosauridae)−from the Upper Cretaceous of Burkhant, Mongolia". Contributions from the Geology and Mineralogy Chair, National Museum of Mongolia (101): 1−105. இணையக் கணினி நூலக மையம்:69865262. https://drive.google.com/open?id=1FtVZYSTmgXXBejYfYDKUIg-giwJXNy39. 
  2. Senter, P. (2007). "A method for distinguishing dromaeosaurid manual unguals from pedal sickle claws". Bulletin of Gunma Museum of Natural History (11): 1–6. பன்னாட்டுத் தர தொடர் எண்:1342-4092. http://www.gmnh.pref.gunma.jp/wp-content/uploads/bulletin11_1.pdf. 
  3. Watabe, M.; Suzuki, S. (2000). "Report on the Japan - Mongolia Joint Paleontological Expedition to the Gobi desert, 1993". Hayashibara Museum of Natural Sciences Research Bulletin 1: 17−29. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்கிலூபேட்டர்&oldid=4116319" இலிருந்து மீள்விக்கப்பட்டது