ஆக்கோ (ஆக்கோ "ஆர்வக் கோளாறு" எனப் பொருள்படும்) என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். கீதன் பிரிட்டோ, துலிகா குப்தா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் ரவிச்சந்திரன் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கின்றார். மேலும் சிறப்புத் தோற்றத்திலும் இவர் நடிக்கின்றார். "எனக்கென யாரும் இல்லையே" எனும் ஓர் பாடல் அனிருத் ரவிச்சந்திரனால் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதியன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. அத்துடன் இப்பாடலின் அனைத்துப் பாடல்களின் உரிமை சோனி மியூசிக் நிறுவனத்தைச் சாரும்.

ஆக்கோ
இயக்கம்எம். சியாம் குமார்
தயாரிப்புதீபன் பூபதி
ரடேஸ் வேலு
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புகீதன் பிரிட்டோ
துலிகா குப்தா
ஒளிப்பதிவுசிவா ஜீஆரென்
படத்தொகுப்புபவன் சிறீகுமார்
வெளியீடு2017 நவம்பர், 14[1]
ஓட்டம்148 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்கோ&oldid=3954503" இலிருந்து மீள்விக்கப்பட்டது