ஆக்சனா போடர்ச்சுக்
ஆக்சனா போடர்ச்சுக் (Oxana Boturchuk) (பிறப்பு: 1984 செப்டம்பர் 12) இவர் உக்ரைனின் இணை ஒலிம்பிக் தடகள வீரராவார். முக்கியமாக டி 12 விரைவோட்ட நிகழ்வுகளில் போட்டியிடுகிறார்.
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
தடகளம் (T12) | ||
நாடு உக்ரைன் | ||
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் | ||
2008 பெய்ஜிங் | 100மீ | |
2008 பெய்ஜிங் | 200மீ | |
2008 பெய்ஜிங் | 400மீ | |
2012 இலண்டன் | 400மீ | |
2012 இலண்டன் | 100மீ | |
மாற்றுத் திறனாளிகளின் சர்வதேச தடகள விளையாட்டுப் போட்டிகள் | ||
2015 தோகா | 200மீ | |
2015 தோகா | 400மீ | |
2015 தோகா | 100மீ | |
மாற்றுத் திறனாளிகளின் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் | ||
2014 சுவான்சீ | 100மீ | |
2014 சுவான்சீ | 400மீ |
இவர் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற 2008 கோடைகால இணை ஒலிம்பிக்கில் போட்டியிட்டார். அங்கு இவர் பெண்கள் 100 மீட்டர் - டி 12 போட்டியில் தங்கப்பதக்கமும், பெண்கள் 200 மீட்டர் - டி 12 போட்டியில் வெள்ளிப் பதக்கமும், பெண்கள் 400 மீட்டர் - டி 12 போட்டியில் வெள்ளிப் பதக்கமும், பெண்கள் நீளம் தாண்டுதலில் - எஃப் 12 போட்டியில் எட்டாவது இடத்தையும் பிடித்தார்.
சுயசரிதை
தொகுஒரு விளையாட்டுக் குடும்பத்தில் பிறந்த இவர் தனது ஒன்பது வயதில் தனது பயிற்சியைத் தொடங்கினார். 1997 ஆம் ஆண்டில், முழு குடும்பமும் ஒரு கார் விபத்தில் சிக்கி அனைவரும் காயமடைந்தது. இதில் இவர் மிகவும் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு, தனது பார்வையை முழுவதுமாக இழந்தார். பின்னர் இவர் பல்வேறு சிகிச்சை முறைகளைப் பின்பற்றி ஓரளவு குணமடைந்தார்.
போட்டிகள்
தொகு2006 ஆம் ஆண்டில் அசென் உலகப் போட்டிகளில் அறிமுகமான இவர் பெய்ஜிங்கில் நடந்த இணை ஒலிம்பிக்கில் பங்கேற்றார். அங்கு இவர் 100மீ. ஓட்டத்தில் தங்கமும், 200 மீ, 400மீ ஓட்டத்தில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றார்.
அடுத்த ஆண்டுகளில் ஐரோப்பிய, உலகப் போட்டிகள், இலண்டன், இரியோ டி செனீரோவில் நடந்த இணை ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு இவர் தொடர்ந்து மேடைக்கு தகுதியானார். இந்த விளையாட்டு நிகழ்வுக்குப் பிறகு, இவர் தனது இரண்டாவது மகனின் பிறப்புக்காக 2018 வரை செயல்பாட்டை நிறுத்தினார். பின்னர், மீண்டும் திரும்பி தனது போட்டி நிலைக்கு மிகவும் உறுதியாக இருந்தார்.[1]
குடும்பம்
தொகுஇவர் உளவியலில் பட்டம் பெற்றவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒருமகளும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பிரபல கலாச்சாரத்தில்
தொகுஇவரது கதையைச் சொல்லும் பல்ஸ் என்ற ஒரு திரைப்படம் 2020 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. இவரது குடும்பத்தினருடன் இவர் அனுபவித்த சோகமான விபத்திலிருந்து பல மேடைகளின் வெற்றி வரை இதில் காடப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.paralympic.org/oksana-boturchuk%7Ctitolo=Oksana[தொடர்பிழந்த இணைப்பு] Boturchuk|lingua=en|accesso=7 agosto 2020
- ↑ https://www.radiosvoboda.org/a/30474717.html%7Ctitolo=«Пульс»[தொடர்பிழந்த இணைப்பு]: перша українська спортивна драма про боротьбу паралімпійки Оксани Ботурчук|lingua=uk|accesso=7 agosto 2020