ஆக்டாடெட்ராயீன்
ஆக்டாடெட்ராயீன் (Octatetraene) என்பது C8H10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டாடெட்ராயீன்கள் சிறப்புத்தன்மையான நேரியல் ஆல்க்கீன்கள் ஆகும். நீளத்தில் எட்டு கார்பன் அணுக்கள் முதுகெலும்பாகவும், நான்கு கார்பன் – கார்பன் இரட்டைப் பிணைப்புகளும் மூன்று ஒற்றைப் பிணைப்புகளும் இச்சேர்மத்தில் உள்ளன. ஏனெனில் அலிபாட்டிக் கார்பன் நான்கு இணைதிறன் கொண்டிருக்கும் என்பதால் பத்து இணைப்புகளை அளிக்கின்றன. ஐதரசன் அணுக்கள் இந்தக் கார்பன்கூட்டில் இணைய முடியும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(E,E)-1,3,5,7-ஆக்டாடெட்ராயீன்
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 4575894 |
பண்புகள் | |
C8H10 | |
வாய்ப்பாட்டு எடை | 106.17 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இச்சேர்மங்கள் மிகவும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த பொதுச்சேர்மங்களாகக் கருதப்படுவதில்லை. ஆனால் ஆக்ட்டாடெட்ராயீன் குழு பிணைப்புகளின் இயற்பியல் பண்புகளுக்காக ஆராயப்பட்டு வருகிறது[1]. சமச்சீர்மை உயர் ஒழுங்கு மற்றும் பிணைப்புகளின் சேர்க்கை போன்றவையும் இவற்றின் மாறுபட்ட பண்புகளை ஆய்வு செய்ய உதவுகின்றன[2]
ஆக்டாடெட்ராயீன் உடன் தொடர்புடைய சில கட்டமைப்புகள் உயிரியியல் முக்கியத்துவம் வாய்ந்த சில மூலக்கூறுகளில் தோன்றுகின்றன. உதாரணமாக, ஆல்பா-பாரிநாரிக் அமிலம், பாலிநிறைவுறா கொழுப்பு அமிலங்கள் இரண்டையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். வளைய ஆக்டாடெட்ராயீன், 1,8-டைபீனைல்-1,3,5,7- ஆக்டாடெட்ராயீன் உள்ளிட்ட சேர்மங்கள் ஆக்டாடெட்ராயீன் வழிப்பொருட்களாகும். சிறப்புச் சூழல்களில் இவையும் முக்கியத்துவம் பெறுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Granville, Mark F. Holtom, Gary R. Kohler, Bryan E. (1980). "Cis-trans photoisomerization of 1,3,5,7-octatetraene in n-hexane at 4.2K". Proc. Natl. Acad. Sci. USA 77 (1): 31–33. பப்மெட்:16592751.
- ↑ Catalán, J.; De Paz, J. L. G. (2006). "On the photophysics of all-trans polyenes: Hexatriene versus octatetraene". The Journal of Chemical Physics 124 (3): 034306. doi:10.1063/1.2158992. பப்மெட்:16438582. Bibcode: 2006JChPh.124c4306C.