ஆக்டினிடைன்
ஆக்டினைடு அல்லது ஆக்டினியம் என்பனவற்றுடன் குழப்பிக் கொள்ளவேண்டாம்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(S)-4,7-டைமெத்தில்-6,7-டை ஐதரோ-5H-சைக்ளோபென்டா[c]பிரிடின்
| |
இனங்காட்டிகள் | |
524-03-8 | |
ChEBI | CHEBI:2443 |
ChemSpider | 61533 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | C09910 |
| |
பண்புகள் | |
C10H13N | |
வாய்ப்பாட்டு எடை | 147.22 g·mol−1 |
உருகுநிலை | < 25 °C (77 °F; 298 K) |
கொதிநிலை | 100 முதல் 103 °C (212 முதல் 217 °F; 373 முதல் 376 K) at 9 mmHg[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆக்டினிடைன் (Actinidine) என்பது C10H13N என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் பல்லினவளைய அரோமாட்டிக் சேர்மமாகும். பிரிடின் வழிப்பொருளான இச்சேர்மம் சடாவல்லி வேர்[2] மற்றும் ஆக்டினியா பாலிகாமா ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும் ஒருவகை நறுமண எண்ணெய் ஆகும். பலவகையான பூச்சியினங்களுக்கும் ஆக்டினிடைன், மணமுள்ள வேதிப்பொருளைச் சுரக்கும் ஒரு ஃபெரமோன் ஆகச் செயல்படுகிறது. பூனைகளைக் கவரும் ஃபெரமோனாகவும் இச்சேர்மம் இருக்கிறது. கேட்நிப் என்ற தாவரத்தில் உள்ள பூனைகளைக் கவரும் நறுமணப் பொருளான நெப்டாலாக்டோன் என்ற செயல்திறன் மிக்க சேர்மம் ஆக்டினிடைனில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sakan, Takeo; Bulletin of the Chemical Society of Japan, 1959, V32, P315-16.
- ↑ Janot MM, Guilhem J, Contz O, Venera G, Cionga E. (1979). "Contribution to the study of valerian alcaloids (Valeriana officinalis, L.): actinidine and naphthyridylmethylketone, a new alkaloid (article in French)". Ann. Pharm. Fr. 37 (9–10): 413–420. பப்மெட்:547813.