ஆங்கசு டீட்டன்

பிரித்தானிய குறும்பொருளியலாளர்

ஆங்கசு டீட்டன் (Angus Stewart Deaton, பிறப்பு: 19 அக்டோபர் 1945) பிரித்தானிய, அமெரிக்க குறும்பொருளியலாளர் ஆவார்.

ஆங்கசு டீட்டன்
Angus Deaton
பிறப்புஆங்கசு இசுட்டுவர்ட் டீட்டன்
19 அக்டோபர் 1945 (1945-10-19) (அகவை 78)
எடின்பரோ, இசுக்கொட்லாந்து, ஐஇ
தேசியம்பிரித்தானியர், அமெரிக்கர்
துறைகுறும்பொருளியல்
பணியிடங்கள்பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
கல்விபெட்டசு கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்பிட்சுவில்லியம் கல்லூரி, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
ஆய்வேடுநுகர்வோர் தேவை மாதிரிகளும், பிரித்தானியாவில் அவற்றின் பயன்பாடுகளும் (1975)
விருதுகள்பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2015)

நுகர்வு, வறுமை, பொருளாதாரம் நலம் போன்றவற்றில் இவரது ஆய்வுகளுக்காக இவருக்கு 2015 ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.[1][2][3]

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

எடின்பரோ நகரில் பிறந்த டீட்டன் பெட்டசு கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை, மற்றும் முனைவர் பட்டங்களையும் பெற்றார். பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றிய பின்னர், 1983 இல் ஐக்கிய அமெரிக்கா சென்று பிரின்ஸ்டன் பலகலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "The Prize in Economic Sciences 2015". nobelprize.org.
  2. Wearden, Graeme. "Nobel prize in economics won by Angus Deaton - live". the Guardian. பார்க்கப்பட்ட நாள் 12 அக்டோபர் 2015.
  3. "British academic awarded Nobel economics prize". பிபிசி. 12 October 2015. பார்க்கப்பட்ட நாள் 12 அக்டோபர் 2015.
  4. Rising, Malin (12 October 2015). "Scottish economist Angus Deaton wins Nobel economics prize". Yahoo News. Associated Press. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கசு_டீட்டன்&oldid=3015345" இலிருந்து மீள்விக்கப்பட்டது