ஆங்கிலம் சாராத நிரலாக்க மொழிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

ஆங்கிலம் சாராத நிரல் மொழி என்பது ஆங்கில சொற்களைப் பயன்படுத்தாத நிரல் மொழியாகும். இவ்வகை நிரல் மொழிகள் பல உள்ளன. இவை உருசியம், பிரெஞ்சு, தமிழ், ஜப்பானியம் போன்ற மொழிகளைக் கொண்டு நிரல் செய்யப் பயன்படுகின்றன.

ஆங்கில மொழி ஆதிக்கம்தொகு

தட்டச்சுப் பலகையினை பயன்படுத்த வசதியாக இருக்கும் என்று ஆங்கிலமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. உலகத்தில் மொத்தம் 8500க்கும் அதிகமான நிரல்மொழிகள் உள்ளனவாம். இவற்றில் 3200 மொழிகள் ஆங்கிலம் பேசும் நாடுகளில் உருவானவை. அதாவது, மூன்றில் ஒரு நிரல் மொழி ஆங்கிலத்தைப் பயன்படுத்தியே வெளிவந்திருக்கின்றன. ஆங்கிலம் சாராத நாடுகளில் வெளியான குறிப்பிடத்தக்க சில: நெதர்லாந்தில் இருந்து பைத்தானும், ஜப்பானில் இருந்து ரூபியும் வெளியாயின.

ஆங்கிலம் சாராத நிரல் மொழிகளின் பட்டியல்தொகு

தமிழில் நிரலாக்க மொழிகள்தொகு

பிற மொழிகளில் நிரலாக்க மொழிகள்தொகு

 • அகெயு – கொரிய எழுத்துக்களில் எழுதும் மொழி
 • அம்மோரியா – திறந்த மூல பொருள்நோக்கு நிரலாக்க மொழி அரபி எழுத்துக்களில் எழுதக் கூடியது.
 • அனாலிடிக் – உருசிய மொழியைக் கொண்டு எழுதப்படும் நிரல் மொழி, உருசிய நாட்டுக் கணினிகளில் பயன்படுத்தப்பட்டன.
 • அர்லோகோ – அரபி மொழியில் எழுதக்கூடியது
 • 丙正正 - சி++யின் சீன மொழிப் பதிப்பு
 • சாங்ஜோ - பல்லூடகத்திற்காக உருவாக்கப்பட்டது. கொரிய கங்குல் எழுத்துகளில் எழுதக்கூடியது.
 • சீன பேசிக் – பேசிக எனப்படும் நிரல் மொழியின் சீனமொழிப் பதிப்பு
 • Dolittle, ドリトル - ஜப்பானிய எழுத்துக்களில் எழுதப்படும் [1].
 • ஃபார்சி.னெட் - .நெட் நிரலாக்க மொழி, பாரசீக மொழிப் பதிப்பு
 • பியோல்னிர் – ஐசுலாந்திய மொழியில் வெளியானது
 • போகல் - ஐரோப்பிய மொழிகளில்
 • 4த் டைமென்சன் – பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகளின் குறிச்சொற்கள் பயன்படுத்தப்படலாம்.
 • கிளகோல் – உருசிய மொழிப்பதிப்பு, ஒபெரோன், பாஸ்கல் மொழிகளைப் போன்றது
 • கோட்டூ++ – பிரெஞ்சு மொழியில்
 • ஹிமவரி - ஜப்பானிய மொழி[2] பொழுதுபோக்கு, வியாபாரப் பயன்பாட்டிற்கானது
 • ஹிந்தாவி – சி, சி++, அடா மொழிகளுக்கான இந்தியப் பதிப்பு (அசாமியம், இந்தி, குஜராத்தியம், வங்காள மொழிகளில்)
 • ஹன்பெ - கொரிய மொழியில் இயங்கும் பேசிக் மொழிப் பதிப்பு. கே-டோஸ் இயங்குதளத்தில் நிறுவப்பட்டுள்ளது.
 • இந்தி நிரல் மொழி – .நெட் தளத்தில் இயக்க இந்தியில் எழுதலாம்.
 • ஹ்ஃபோர்த் – ஃபோர்த் நிரல் மொழியில் கொரிய சொற்கள் பயன்படுத்தும் வசதி உள்ளது
 • எபிரேய நிரலாக்க மொழி- எபிரேயம்
 • ஜீம் – அரபு மொழி வழி சி++ பயன்படுத்துகிறது [2].
 • கரேல் – கல்விப் பயன்பாட்டிற்கு, செக், சுலோவாக்கிய மொழிகளில்
 • குமிர் - உருசிய மொழிப் பதிப்பு, பாஸ்கல் நிரல் மொழியின் தழுவல்
 • கோட்டோடோமா - ஸ்குவீக் நிரல் மொழியின் ஜப்பானியப் பதிப்பு [3] பரணிடப்பட்டது 2009-06-07 at the வந்தவழி இயந்திரம்.
 • லெக்சிகோ – எசுப்பானிய மொழி, பொருள்நோக்கு நிரலாக்கம்
 • லினொட்டே – பிரெஞ்சு நிரல் மொழி
 • லோகோ – பிரெஞ்சு மொழியில்
 • லவுகாத்தி – பொதுப் பயன்பாட்டிற்கானது, அரபு மொழியில் வெளியானது
 • லங்கேஜ் சிம்பாலிக் டே என்சைன்மெண்ட் – பிரெஞ்சு மொழிப் பதிப்பு, பேசிக் போன்றது
 • மமா - [4] பரணிடப்பட்டது 2012-11-03 at the வந்தவழி இயந்திரம் கல்விக்கானது. ஆங்கிலம், எபிரேயம், யித்தியம், சீனம் ஆகிய மொழிப் பதிப்புகள்
 • மைண்ட் - ஜப்பானிய மொழிப் பதிப்பு .[3] It is used for hobby and business applications.
 • எம்.எல்4 - இடாய்ச்சில் எழுதக்கூடிய மொழி[4]
 • நடாசிகோ - ஜப்பானிய மொழியில் [5].[5] பொழுதுபோக்கு, வியாபார பயன்பாட்டிற்கானது.
 • 1சி:எண்டர்பிரைஸ் - உருசிய மொழிப் பதிப்பு
 • ஊக்! - ஒராங்குட்டான்களுக்கானது (குரங்கு??) மூன்றே குறிச்சொற்களைக் கொண்டது

[6]

 • பவுஸ்கல் - எசுப்பானிய மொழியில், விண்டோசுக்கானது
 • பேர்ள்யுயான் - பேர்ள், சீன மொழியில்
 • ப்சீண்ட்- எசுப்பானிய மொழிப் பதிப்பு
 • பீனிக்சு - சி போன்ற உயர் நிலை நிரல் மொழி, அரபு
 • புரொடுயூர் - பொருள்நோக்கு நிரலாக்க மொழி, [6]. ஜப்பானிய மொழி
 • ரபிரா – உருசிய மொழியில் வெளியானது
 • ரோபிக் – குழந்தைகளுக்கு நிரலாக்கக் கற்றுத் தரப் பயன்படுத்தப்படும். உருசிய மொழி
 • ரோபோமைண்ட் - கல்விப் பயன்பாட்டிற்கு. கிடைக்கும் மொழிகள்: அரபு, சீனம், டச்சு,

ஆங்கிலம், பிரெஞ்சு, இடாய்ச்சு, கிரேக்கம், போலியம், பிரேசிலிய போர்த்துகீசு,

எசுப்பானியம், சுவீடியம், துருக்கியம் ஆகியன

 • சகோ – போலிய மொழியின் ஃபோர்ட்ரான் பதிப்பு
 • ஸ்கிராட்ச் - பார்வைவழி நிரலாக்கத்துக்கான முதல் மொழி, எம்.ஐ.டி வெளியீடு,

பன்மொழி ஆதரவு

 • செமா – அரபு மொழிப் பதிப்பு [7] பரணிடப்பட்டது 2013-01-27 at the வந்தவழி இயந்திரம்
 • சியாட் - கொரிய கங்குல் எழுத்துகளில் எழுதக்கூடியது
 • சூப்பர்லோகோ – டச்சு மொழியில் எழுதக்கூடியது
 • டிடிஸ்னியோ - ஜப்பானிய நிரல் மொழி [8]
 • விந்தேவ் – பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டது
 • யசிக் மஷின் பச்கல்டெர்ச்கி – உருசிய மொழியின் எழுதக் கூடியது.
 • ஜிப்பி - சீன மொழியின் எழுதக்கூடிய பைத்தான் பதிப்பு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு