ஆங்கிலோ-கெல்ட்டிய ஆஸ்திரேலியர்

ஆங்கிலோ-கெல்ட்டிய ஆஸ்திரேலியர் (Anglo-Celtic Australian) எனப்படுவோர் ஆஸ்திரேலியாவில் வாழும் பிரித்தானியர், மற்றும் ஐரியர்களின் இனக்குழுக்களின் வம்சத்தைக் குறிக்கும்[2]

ஆங்கிலோ-கெல்ட்டிய ஆஸ்திரேலியர்கள்
Anglo-Celtic Australian
டொனால்ட் பிராட்மன்ஈடித் கோவன்ஜோன் கேர்ட்டின்
அல்பிரட் டீக்கின்நிக்கோல் கிட்மன்
குறிப்பிடத்தக்க ஆங்கிலோ-செல்ட்டிய ஆஸ்திரேலியர்கள் சிலர்:
டொனால்ட் பிராட்மன் · ஈடித் கோவன் · ஜோன் கேர்ட்டின்
கைலி மினோக் · அல்பிரட் டீக்கின் · நிக்கோல் கிட்மன்
மொத்த மக்கள்தொகை
வம்சம்
6,283,647 (31.6%) ஆங்கிலேயர்
1,803,740 (9.1%) ஐரியர்
1,501,204 (7.6%) ஸ்கொட்டியர்
113,242 (0.7%) வெல்சியர்
5,686 (0.3%) பிரித்தானியர்[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்
மொழி(கள்)
ஆங்கிலம்
சமயங்கள்
பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்கள்
எச்சமயமும் அற்றோர் பெருமளவில் உள்ளனர்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஆங்கிலோ-ஆபிரிக்கர் · பிரித்தானிய இலத்தீன் அமெரிக்கர் · கோர்னியர் · ஆங்கிலேயர் · ஐரியர் · நியூசிலாந்து ஐரோப்பியர் · ஸ்கொட்டியர் · வேல்சியர் · வெள்ளை பிரித்தானியர், ஏனைய வெள்ளை இன ஐரோப்பியர்

மக்கள் தொகு

குடியேற்றக் காலத்தில் இருந்து 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும், பின்னர் பிரித்தானியரும், ஐரியரும் ஆஸ்திரேலியாவில் குடியேறிகளில் பெரும்பான்மையானோராய் இருந்தனர். கூட்டமைப்பின் பின்னரான காலப்பகுதியில் ஐரோப்பாவின் வேறு இனத்தவர்களும் குடியேறினர். 2006 மக்கள் கணக்கெடுப்பின் படி[3], (குடிமக்கள் தமது வம்சத்தைத் தாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் நடைமுறை இருந்தது, ஒருவர் இரு வம்சங்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட்டது) 6,283,647 (31.6%) ஆஸ்திரேலியர்கள் ஆங்கில வம்சத்தையும், 1,803,740 (9.1%) பேர் ஐரிய வம்சத்தையும், 1,501,204 (7.6%) பேர் ஸ்கொட்டிய வம்சத்தையும், 113,242 (0.7%) பேர் வேல்சிய வம்சத்தையும் தேர்ந்தெடுத்தனர். மேலும் 5,686 (0.3%) பேர் தம்மை பிரித்தானியர் என அடையாளம் காட்டினர்[4].

ஐக்கிய இராச்சியத்தில் இருந்தே பெரும்பான்மையானோர் குடியேறினர். 2005-06 இல் ஐக்கிய இராச்சியத்தில் பிறந்த 22,143 பேர் ஆஸ்திரேலியாவில் குடியேறினர். இது மொத்தமாகக் குடியேறியவர்களில் 21.4% ஆகும். 2006 கணக்கெடுப்பின்படி,[5] 1,038,165 பேர் தம்மை ஐக்கிய இராச்சியத்தில் பிறந்தோர் எனவும், 50,251 பேர் தம்மை அயர்லாந்தில் பிறந்தோர் எனவும் அடையாளம் காட்டினர்.

சிட்னி நகரிலேயே பெரும்பான்மையான பிரித்தானியாவில் பிறந்தோர் (175,166) வாழ்கின்றனர். அடுத்தபடியாக பேர்த் நகரில் 171,023 பேர் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. [1] 20680-Country of Birth of Person (full classification list) by Sex - Australia. Retrieved 8 April 2008]
  2. 1301.0 - Year Book Australia, 1995
  3. 1301.0 - Year Book Australia, 2008
  4. [20680-Ancestry (full classification list) by Sex - Australia http://www.censusdata.abs.gov.au/ABSNavigation/download?format=xls&collection=Census&period=2006&productlabel=Ancestry (full classification list) by Sex&producttype=Census Tables&method=Place of Usual Residence&areacode=0]
  5. [20680-Country of Birth of Person (minor groups) by Sex - Australia http://www.censusdata.abs.gov.au/ABSNavigation/download?format=xls&collection=Census&period=2006&productlabel=Country of Birth of Person (minor groups) by Sex&producttype=Census Tables&method=Place of Usual Residence&areacode=0]

இவற்றையும் பார்க்கவும் தொகு