ஆங்கிலோ-சாக்சன் மக்கள்

ஆங்கிலோ-சாக்சன்கள் (Anglo-Saxons) எனப்படுவோர் பிரித்தானியாவின், தெற்கையும், கிழக்கையும் கிபி 5ம் நூற்றாண்டில் ஸ்கான்டினேவியப் பகுதிகளில் இருந்து ஆக்கிரமித்த ஜேர்மனியக் குழுக்கள் ஆவர். ஆங்கிலோ-சாக்சன் மக்களே இங்கிலாந்து நாட்டை அமைத்தார்கள். இவர்கள் பேசிய மொழியே ஆங்கிலத்தின் மூல மொழி ஆகும்.

The parade helmet found at Sutton Hoo, probably belonging to Raedwald of East Anglia circa 625. Based on a Roman parade-helmet design (of a general class known as spangenhelm), it has decorations like those found in contemporary Swedish helmets found at Old Uppsala (Collection of the British Museum)

வாழ்க்கை முறை

தொகு

இங்கிலாந்துக்கு, ஆங்கிலேயர்கள் கடற்கொள்ளையர்களாகவே வந்தனர். நாளடைவில் அங்கிருந்த நிலங்களை சொந்தமாக்கிக் கொண்டனர். அக்கிராமங்களைத் தங்கள் குடும்பத் தலைவர் பெயரால் அழைத்து வந்தனர். ஆங்கிலோ-சாக்சன்கள் ஒவ்வொரு வகுப்பினரும் தேர்ந்தெடுக்கபப்ட்ட கிராமங்களில் வாழது வந்தனர்.[1] அவரவர் குடும்பத்திற்கேற்ப கிராமங்களைப் பங்கிட்டுக் கொண்டனர். அதற்கு டன்(Tun) என்று பெயர். டன்னிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்களிடமிருந்த நிலங்களை ஒப்பந்தப்படி வைத்துக் கொண்டனர். இதற்கு 'மக்கள் நிலம்' (Folk Land) என்று பெயர்.

பல குடும்பங்கள் வாழ்ந்து மறைந்த பின்னரும் தங்களுடைய நில ஒப்பந்தங்களை எழுதி வைக்க வேண்டியதாயிற்று. இவ்வாறு எழுதி வைக்கப்பட்ட நிலத்திற்கு 'புத்தக நிலம்'(Book land) என்று பெயர். நிலச் சொந்தக்காரர்களின் நிலங்களின் எல்லைகள் இதில் குறிக்கப்பட்டிருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. நா. ஜெயபாலன், 'இங்கிலாந்து வரலாறு- அரசியலமைப்பு வரலாறுடன்', மோகன் பதிப்பகம், சென்னை 1986. பக்கம் 47- 51
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கிலோ-சாக்சன்_மக்கள்&oldid=3040217" இலிருந்து மீள்விக்கப்பட்டது