ஆசலர் வஜ்ரயான பௌத்தத்தில் கர்பகோசதாதுவின் ஐந்து வித்யாராஜாக்களில் ஒருவர் ஆவார். இவரை ஆசநாதர், ஆர்யாசலநாதர், ஆசல-வித்யாராஜா மற்றும் சண்டமஹாரோஷனர் என பலவாறாக அழைப்பர். அசல (अचल) என்ற வடமொழிச்சொல்லுக்கு அசைக்க இயலாத என்று பொருள். இது போதிசத்துவர்கள் பயணம் செய்யும் பத்து பூமிகளுள் எட்டாவது பூமியின் (அசலம்) பெயராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் உள்ள கோயா மலையில் உள்ள ஆசலர் சிலை

ஆசலர் மாயத்தை அழிப்பவர் ஆவார். இவர் சிற்றின்ப ஆசைகளால அசைக்க இயலாதவர் என்பதையே இவருடைய பெயர் குறிப்பிடுகிறது. மிகவும் உக்கிரமான உருவத்தை கொண்டிருந்தாலும், புத்தரின் போதனைகளை கொண்டு சென்று அனைத்து உயிர்களுக்கு வழிகாட்டுவதே இவரின் பணி ஆகும். இவர் குறிக்கொள்களை அடைவதற்கு உதவுபவராகவும் பாதுகாவலராகவும் கருதப்படுகிறார்.

அக்ஷோப்யர் என்ற பெயர் கூட அசைக்க இயலாத என்ற பொருள் கொண்டிருப்பததால், சில நேரத்தில் இருவர் ஒருவரை குறிப்பதாக தவறாக கருதப்படுகிறது. எனினும் அக்ஷோப்யர் புத்தர் ஆவர். ஆசல வித்யாராஜா ஜப்பானில் வணங்கப்படும் பதின்மூன்று புத்தர்களுள் ஒருவர் ஆவார்.

ஆசலர்

தொகு

பௌத்தத்தில் அறிவு மற்றும் நெருப்பின் அதிதேவதையாக இருக்கின்றார். இவர் விதயாராஜாக்களுள் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தவராக உள்ளார். ஆபத்து ஏற்படும் போது காப்பாற்றுவதற்காக ஆசலர் அழைக்கப்படுகிறார். இவருடைய கோவில் ஜப்பானின் ஓகியாமா மலையின் மீது அமைந்துள்ளது. ஆசலர் ஒரு தீப்பிழம்புகள் சூழப்பட்ட அழகற்ற முதியவராக காணப்படுகிறார். இவரை காண்பவர்கள் அனைவருக்கும் குருடர்கள் ஆவதாக நம்பப்படுகின்றனர். ஆசலை குறித்த புகழ்பெற்ற கதையில், ஓ ஆய் சன் என்ற இளம்பெண் ஜப்பானின் ஆவா மாகானத்தின் ஒஹாராவில் உள்ள அவரது கோவில் அருகில் உள்ள அருவியின் கீழ் நிர்வாணமாக 100 நாட்கள் அவரை வேண்டி வந்தார். அதன் பலனாக அவளது தந்தையின் நோய் தீர்ந்ததாக கூறப்படுகிறது.

சித்தரிப்பு

தொகு

ஆசலர் பொதுவாக அசுரர்களை அடக்குவதற்கு வலது கையில் வாளுடனுடம், அவர்களை கட்டுவதற்கு இடது கையில் பாசத்துடனும் காணப்படுகிறார். இவருடைய வாள் குணப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மனத்தூய்மையை குறிக்கும் விதமாக நீல முகத்துடன் தீப்பிழம்புகள் சூழ காணப்படுகிறார். அவருடைய அசையா உறுதியை குறிக்கும் விதமாக பாறையில் நின்றவாறு அல்லது அமர்ந்தவாறு இருக்கிறார். அவரது கூந்தல் ஏழு முடிச்சுகளை கொண்டிருக்கிறது. மேலும் அவ்வப்போது இரு கோரப்பற்களுடன் காட்சியளிக்கிறார், ஒன்று கீழ்புறமும் இன்னொன்று மேற்புறமும் நோக்கிய விதமாக உள்ளது

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசலர்&oldid=3672505" இலிருந்து மீள்விக்கப்பட்டது