ஆசா அகர்வால்

மாரத்தான் வீராங்கனை

ஆசா அகர்வால் (Asha Agarwal) முன்னாள் இந்திய பெண்கள் மாரத்தான் சாம்பியன் மற்றும் அருச்சுனா விருது பெற்ற வீராங்கனை ஆவார்.

ஆசா அகர்வால் சனவரி 27, 1985 இல் ஆங்காங்கு நாட்டில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் வென்றார். செப்டம்பர் 1985 இல் யகார்த்தாவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் தங்கம் வென்றார், பந்தய தொலைவை 2 மணி 48 minutes நிமிடங்கள் மற்றும் 51 வினாடிகளில் ஓடி முடித்தார். இதுவே அவருடைய சாதனையாக இருக்கிறது. 1989 ஆம் ஆண்டு தில்லி நகரில் நடைபெற்ற நீண்ட தொலைவு நடைப் போட்டியிலும் இவர் வென்றார். 1986 ஆம் ஆண்டு டிரினிடாட்டில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் ஒடிய 26 பேரில் 2 மணி 50 நிமிடங்களுக்குள் ஓடி முடித்த எட்டு பேரில் இவரும் ஒருவராவார்[1].

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசா_அகர்வால்&oldid=2718961" இலிருந்து மீள்விக்கப்பட்டது