ஆசியப் பொன்னிறப் பூனை

ஆசிய தங்க நிறப்பூனை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கே. தெம்மினிக்கி
இருசொற் பெயரீடு
கேடோபூமா தெம்மினிக்கி
(Vigors & Horsfield, 1827)
Distribution of the Asian golden cat
வேறு பெயர்கள்

Pardofelis temminckii

ஆசிய தங்க நிறப் பூனை (Asian golden cat), என்பது ஒரு நடுத்தர அளவு காட்டுப் பூனை ஆகும். இது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது . 2008 ஆம் ஆண்டில் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம் இந்த பூனைகள் அச்சுறு நிலையை அண்மித்த இனம் என அறிவித்தது. இவை வேட்டையாடப்படுவதாலும், காடழிப்பினால் இவை தம் வாழ்விடத்தை இழப்பதாலும் இவற்றின் எண்ணிக்கை குறையும் ஆபத்தைச் சந்தித்து உள்ளன.[1] இவை இந்தியாவின் சிக்கிம் முதல் அசாம் வரை உள்ள அடர்ந்த காடுகளில் காணப்படுகின்றன.

பண்புகள்

தொகு

ஆசிய தங்க நிறப் பூனை பொதுவான பூனை போல தோற்றம் கொண்டது அதன் தலை முதல் உடல்வரை நீளம் 66 இல் இருந்து 105 செமீ (26 இல் இருந்து 41 அங்குலம்) இதன் வால் 40 இல் இருந்து 57 செமீ (16 இல் இருந்து 22 அங்குலம்) நீளம் கொண்டது.இதன் தொள்பட்டையின் உயரம் 56 செமீ (22 அல்குலம்) இதன் எடை 9 இல் இருந்து 16 கிலோகிராம் ஆகும். இவவகைப் பூனைகள் சாதாரணப் பூனையைவிட இரண்டு மூன்று மடங்கு பெரியவை..[2] இதன் உடல் பொன்னிறம் கலந்த பழுப்பு நிறம் கொண்டது. கண்களை ஒட்டி வெண்ணிற பட்டைகளும், வெண்ணிற கிடைகோடுகளும், அதைச் சுற்றிக் கருமையான கோடுகளும் கொண்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Kitchener, A. C.; Breitenmoser-Würsten, C.; Eizirik, E.; Gentry, A.; Werdelin, L.; Wilting, A.; Yamaguchi, N.; Abramov, A. V.; Christiansen, P.; Driscoll, C.; Duckworth, J. W.; Johnson, W.; Luo, S.-J.; Meijaard, E.; O'Donoghue, P.; Sanderson, J.; Seymour, K.; Bruford, M.; Groves, C.; Hoffmann, M.; Nowell, K.; Timmons, Z. & Tobe, S. (2017). "A revised taxonomy of the Felidae: The final report of the Cat Classification Task Force of the IUCN Cat Specialist Group" (PDF). Cat News. Special Issue 11: 36−37. Archived (PDF) from the original on 2018-07-30. Retrieved 2018-06-15.
  2. Sunquist, Mel; Sunquist, Fiona (2002). Wild cats of the World. Chicago: University of Chicago Press. pp. 52–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-77999-8.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியப்_பொன்னிறப்_பூனை&oldid=4124808" இலிருந்து மீள்விக்கப்பட்டது