ஆசிய அறிவியல் முகாம் 2022

தென் கொரியாவில் 2022 ஆம் ஆண்டு சூலை மாதம் 24 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெற்றது

ஆசிய அறிவியல் முகாம் 2022 (Asian Science Camp 2022) தென்கொரியா நாட்டில் 2022 ஆம் ஆண்டு சூலை மாதம் 24 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. தென்கொரியாவில் உள்ள அடிப்படை அறிவியல் நிறுவனம் இம்முகாமை ஏற்பாடு செய்தது. அறிவியல், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சகம், டேச்சியோன் பெருநகரம், டேச்சியோன் சுற்றுலா அமைப்பு ஆகியவை இம்முகாமிற்கான நிதிநல்கையினை வழங்கின. கோவிட்-19 தொற்றுநோய் காலத்தின் போது ஏற்பட்ட பயண சிக்கல்கள் காரணமாக இந்த சந்திப்பு நிகழ்நிலை, அணைமுகம் என கலப்படமான சந்திப்பில் நடைபெற்றது.[1] ஆசியாவில் உள்ள 30 நாடுகளில் இருந்து 300 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.[2][3] ஆனால் 25 நாடுகளில் இருந்து சுமார் 250 மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.[4][5] தென் கொரியாவின் அடிப்படை அறிவியலுக்கான ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள அறிவியல் கலாச்சார மையம் இந்த ஆசிய அறிவியல் முகாம் 2022 நிகழ்வுக்கான முதன்மை இடமாகத் திகழ்ந்தது.[6]

ஆசிய அறிவியல் முகாம் 2022 நிகழ்வின் பங்கேற்பாளர்கள்

விரிவுரைகள்தொகு

 
பங்கேற்பாளர்கள் நரம்பியல் விஞ்ஞானி சாங்சூ இயசுடின் லீயுடன் எடுத்துக் கொண்ட படம்

நிகழ்ச்சியின்போது நடைபெற்ற விரிவுரைகள் மற்றும் குழு விவாதங்களில் சுமார் 20 ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.[7][8] நோபல் பரிசு பெற்ற அறிஞர்களான இசுடீபன் எல், டிம் அண்ட்டு மற்றும் இராண்டி செக்மேன் ஆகியோரால் ஒளியுரு விரிவுரைகள் வழங்கப்பட்டன.[9] இதைத் தொடர்ந்து ஒவ்வொரு பேச்சாளருக்கும் கேள்வி பதில் நேர அமர்வும் வழங்கப்பட்டது. ஆக்செல் டிம்மர்மேன், கெவின் இன்சிக் கான், கிம் யங்-கீ, டேக்வான் இகியோன், கிம் யூன்சூன், ஓ யோங்-கியூன், சாங்சூன் இயசுட்ட்டீன் லீ, வி. நரி கிம் மற்றும் செர்செச்சு பிளாச்சு ஆகியோர் இந்நிகழ்ச்சியின் மற்ற பேச்சாளர்கள் ஆவர். சோய் யங் கி தலைமையில் இயூ சியோல் சின், ஈ-சாங் இயங்கு மற்றும் வூ- இயூ கிம் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.[10]

பிற நிகழ்வுகள்தொகு

விழாவில் ஒரு சுவரொட்டி அமர்வு நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள் அடிப்படை அறிவியல் தலைமையகம், அரிய ஐசோடோப்பு அறிவியல் திட்டம் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் ஆகியவற்றிற்கு தள வருகைகளை மேற்கொண்டனர்.[11] கோங்சூ அனோக் கிராமத்தில் உல்லாசப் பயணமும் நடந்தது.

பங்கேற்புதொகு

ஆசிய அறிவியல் முகாம் 2022 நிகழ்வில் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு நிகழ்ச்சியைக் குறித்து அறிவிக்க ஒவ்வொரு நாடு/பிராந்தியத்தின் தொடர்பு நபருக்கு விழா ஏற்பாட்டுக் குழு அழைப்பு அனுப்பியது.[12] பதிவுக் கட்டணம் எதுவும் இல்லை. தொடர்புடைய பங்கேற்பாளர்களின் தங்குமிட மற்றும் உள்ளூர் செலவுகளை ஏற்பாட்டுக் குழு வழங்கியது.

மேற்கோள்கள்தொகு

 1. "2022参加者募集ページ". Japan Science and Technology Agency (Japanese). 10 June 2022 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
 2. "2022년 아시안 사이언스 캠프(ASC 2022) 한국 대표 학생 모집 공고". Institute for Basic Science (Korean). 18 April 2022. 10 June 2022 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
 3. "Asian Science Camp(ASC 2022) 한국 대표 학생 모집". 대외활동 공모전: 요즘것들 (Korean). 4 August 2022 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
 4. "기초과학연구원, 젊은 과학도 위한 아시안 사이언스 캠프 개최". Newsis (Korean). 25 June 2022. 4 August 2022 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
 5. "Asian Science Camp 2022 is to be held at the IBS Science and Culture Center". Institute for Basic Science. 25 July 2022. 4 August 2022 அன்று பார்க்கப்பட்டது.
 6. "2022년 Asian Science Camp (ASC 2022) 학생 모집 설명회". Institute for Basic Science (Korean). 4 May 2022. 10 June 2022 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
 7. 이성현 (25 July 2022). "IBS, 아시안 사이언스 캠프 개최". 충청뉴스 (Korean). 4 August 2022 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
 8. 김세준 (25 July 2022). "과기정통부 정례브리핑". 정책브리핑 (Korean). 4 August 2022 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
 9. "IBS, Asian Science Camp(ASC 2022) 한국 대표 학생 모집". Festa (Korean). 4 August 2022 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
 10. "Asian Science Camp 2022 Korea". Institute for Basic Science. 7 June 2022 அன்று பார்க்கப்பட்டது.
 11. 정세연 (25 July 2022). "과학기술정보통신부, 젊은 과학도를 위한 '아시안 사이언스 캠프' 개최". 한국사회복지저널 (Korean). 4 August 2022 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
 12. "공지사항". Department of Computer Science (Korean). Yonsei University. 10 June 2022 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)